ஸ்ரீ லட்சுமி சகஸ்ரநாமம் என்பது, குபேர சம்பத்து பெறுவதற்காக தேவேந்திரன் பாற்கடல் ஐஸ்வர்ய மகாலட்சுமியை ஆயிரம் பெயர்களால் அர்ச்சித்த வேதவரிகள். வளவாழ்வு அமைய நம்பிகையுடன் இன்றும் அதை உச்சரிக்கும் பக்தர்கள் அதிகம்.
உங்கள் ராஜயோக ஜாதகப்படி யாருக்கெல் லாம் குபேர வாழ்வும், நல்ல குலமகள் வரவும் அமையுமென்பதை விளக்கவே இங்கு சில வரிகள்...
நெஞ்சம் சுத்தமான ஆண்களுக்கு ஜாதகத் தில் சந்திரனும் சுக்கிரனும் உச்சமானால் (மீன சுக்கிரன் மற்றும் ரிஷபச் சந்திரன்) வரவிருக்கும் மனைவியால் சுபிட்சம் ஏற்படும் என்பது ஜோதிட அரிச்சுவடி. 7-ஆம் வீட்டையும், 7-ஆமதிபதி கிரகத்தையும் பொன்னவன் குரு பார்த்தவர்களுக்கு குணவதி காசு பணத்துடன் அமைகிறாள். கடக லக்னக் காளையர் பலரை, பெண் கிரக உச்சநிலை மந்திரி வீட்டு மாப்பிள்ளையாக்கி இருப்பது அனுபவ ஜோதிடம். 'பாரியாள்வழி பணம் சேரும்; தன்னிலும் உயர்மாது தாரமாவாள்' என்பதும் வள்ளுவர்கள் கவி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kuberer_11.jpg)
மிதுனம், சிம்மம், துலா ராசியினருக்கு 2, 5, 11-ல் சுபத்துவமான புதன், சுக்கிரன் அமைந்தால் பெண்வழி இல்வாழ்வில் ஏற்றமே மிகும். 7-க்கு 10-ஆமிடமான 4-ஆம் வீட்டில் ஒரு சுபர் ஆட்சி, மூலத் திரிகோண பலம்பெற, பானை பிடித்தவள் பாக்கியசாலி; கற்கண்டாகும் மணவாழ்வு. வந்த குலமகளால் நிம்மதி நிலவும் எந்நாளும்.
ஆடவருக்குப் பெண் ராசிகளில் லக்னம் அமைந்து சுக்கிரன், சந்திரன் ஆட்சியோ குருவின் பார்வையோ பெற, மனைவிவழியில் அதிர்ஷ்டமே. இவர் தொட்டதெல்லாம் பணம் கொழிக்கும்.
மனைவியால் மனநிறைவும் அந்தஸ்தும் புகழும் அடைந்தவர் ஜாதகக் கட்டங் களில் 4, 5, 11-ல் இரு பெண் கிரகங்கள் வலுவாகி சுபத்துவமும் அடைந்திருக்கிறது. மிக எளிமையாகச் சொல்லவேண்டு மானால், பெண்கிரக ராசி வீடு களான துலாம், கடகம், ரிஷபம் மற்றும் பெண் ராசிகளான மீனம், மகரம், விருச்சிகம், கன்னி, கடகம், ரிஷபம் ஆகியவை சுபகிரகங்களால் சூழப்பட (பாவியரின் சம்பந்த மின்றி) குலதெய்வ அருளால் தங்கநிகர் தாரகையே மாலைசூடு வாள். மணவாழ்வும் தேனில் இணைந்த பலாதான்.
ஆண்களின் லக்னம், லக்னாதி பதி, சூரியன், சந்திரன் ஆகிய நான்கும் மீனம், கன்னி, கடகம், ரிஷபத்தில் அமைந்தவர்களுக்கு இறைவன் தரும் பரிசு, செல்வம் மிகுந்த நற்குணவதியை மணந்து இனிக்கும் இல்லறம் காண்பார்கள். விதியின் துன்ப வலைவீச்சில் சிக்கி துயர மடையா ஜோடியாக ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள்.
7-ஆம் அதிபதி உச்சமானவர்களுக்கும், 7-ஆமதிபதி நின்ற ராசியாதிபதியால் 7-ஆமதிபதி பார்க்கப்பட்டவருக்கும் மன்னன் மாடத்து நிலவே மாலையிடுவாள். சிக்கல், சிரமமில்லா சிங்கார வாழ்வேதான் அமைகிறது.
பருவப் பெண்களின் 7-ஆமதி பதியுடன் 4-ஆமதிபதி அல்லது சூரியன் சுப ராசிகளில் கூட, நல்ல சம்பளத்தில் (6 உண்ஞ்ண்ற் நஹப்ஹழ்ஹ்) உயர் அந்தஸ்தில் இருக்கும் கட்டழகர் களைத் துணைவராக ஏற்கமுடியும். 7-ஆம் ராசியை, 7-ஆமதிபதியை குரு பார்த்தவருக்கு குலமகள் மாலையிடுவாள்; குபேர வாழ்வும் தரும்.
7-ஆமதிபதி கிரகத் துடன் லக்னம், ஒன்பதுக்குடையவர் இணைய, சொந்த உறவில் (பழகிய பைங்கிளி) பெண் விளக்கேற்ற வருகிறாள் பலருக்கும். இதிலும் யாருக்கெல்லாம் 7-ஆமதிபதியை வளர்பிறைச் சந்திரன், சுக்கிரன், குரு நெருங்கி மூன்று ராசிக்கட்டத்திற்குள் (60-90 பாகை) அமைய, அழகும் கம்பீரமும் கவர்ச்சியும் நிறைந்த துணைவரே இறைவனின் கொடை. மணவாழ்வில் எப்போதும் பிறரது இன்பச் சிரிப்பிற்கு இரையாவதில்லை- ஜோடிகளின் உள்ளமும் உதிரமும்!
வேத ஜோதிடப்படி சந்திரனுக்கு 11, 10, 6, 3-ல் சுப கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் ஆட்சி, உச்சமான வாசகர்கள் நிரந்தர செல்வந்தர்கள்; நெஞ்சம் மகிழ நிறைவாழ்வு வாழ்வார்கள்.
செல்: 94431 33565
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/kuberer-t.jpg)