Advertisment

குறைவற்ற செல்வம் வழங்கும் குபேர ஆத்மா தியான ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/kubera-atma-meditation-secret-gives-unlimited-wealth-k-kumara-sivacharya

வீட்டின் நடுஹாலில் நல்ல படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென தொலைக்காட்சியில் ஒளி நின்றுவிடும் நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் அதனருகில் சென்று என்ன காரண மென்று எல்லா பாகங்களையும் சரிசெய்து பார்ப்போம். ரிமோட் கன்ட்ரோல் எடுத்து எல்லா பட்டன்களையும் அழுத்திப் பார்ப்போம்.

Advertisment

ஒளி தந்து மகிழ்ச்சிப்படுத்திய தொலைக்காட்சி அமைதியான காரணமென்ன? அதற்குள் ஏதோவொரு இடத்தில் பழுது ஏற்பட்டு விட்டது.

அதைச் சரிசெய்து மீண்டும் ஒளிவரச் செய்ய ஒன்பது பட்டன் களான ஒன்பது கிரகங்களும் ரிமோட்டிற்குள் சரியாக இருக்க வேண்டும். அதேபோன்றதுதான் நம் ஜனன ஜாதகம் என்ற கட்டங் களும்; அதிலும் ஒன்பது கோள்கள், பன்னிரண்டு கட்டங்களின் இயக்கமும்.

வான சாஸ்திர நிபுணர்கள் இந்தப் பெட்டிகளை ஆராய்ந்து யோகங்களைக் கண்டு சொன்னார்கள். அதற்குள் அவயோகங்கள் இருந்தால் சுபயோகமாக மாற்றிட பரிகாரமும் கண்டனர்.

Advertisment

selvam

வாழ்க்கை வட்டத்தைக் கூறும் கட்டங்கள்!

நம் பிறவி ஜாதகத்தை வட தேசத்தினர் வட்டமாக எழுதி, ராசி குண்டலினி என்று நவநாயகர்களை நிரப்பிக் கொடுக்கின்றனர். "வாழ்க்கை என்பது வட்டம். அதுவே நம் ஜாதகமாக உள்ள வட்டம்' என்கின்றனர்.

தென்னகப் பகுதி ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் "வாழ்க்கை வட்டம் என்பது உண்மை. அதை நன்றாக நடத்திச் செல்வது ஜாதகக் கட்டம்' என்கின்றனர். எப்படி இருந்தாலும் நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின்படி பலனைக் கொடுத்தே தீருவர்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் குடும்ப நபர்களின் ஜனன ஜாதகங்கள் தொகுப்பாக வைக்கப்பட்டிருக்கும். வாழ்நாளில் ஏதேனும் கஷ்டங் களோ தடைகளோ வரும் சமயம், தமக்கு என்ன தசை நடக்கிறதென்று ஆய்வுசெய்து பரிகாரம

வீட்டின் நடுஹாலில் நல்ல படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென தொலைக்காட்சியில் ஒளி நின்றுவிடும் நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் அதனருகில் சென்று என்ன காரண மென்று எல்லா பாகங்களையும் சரிசெய்து பார்ப்போம். ரிமோட் கன்ட்ரோல் எடுத்து எல்லா பட்டன்களையும் அழுத்திப் பார்ப்போம்.

Advertisment

ஒளி தந்து மகிழ்ச்சிப்படுத்திய தொலைக்காட்சி அமைதியான காரணமென்ன? அதற்குள் ஏதோவொரு இடத்தில் பழுது ஏற்பட்டு விட்டது.

அதைச் சரிசெய்து மீண்டும் ஒளிவரச் செய்ய ஒன்பது பட்டன் களான ஒன்பது கிரகங்களும் ரிமோட்டிற்குள் சரியாக இருக்க வேண்டும். அதேபோன்றதுதான் நம் ஜனன ஜாதகம் என்ற கட்டங் களும்; அதிலும் ஒன்பது கோள்கள், பன்னிரண்டு கட்டங்களின் இயக்கமும்.

வான சாஸ்திர நிபுணர்கள் இந்தப் பெட்டிகளை ஆராய்ந்து யோகங்களைக் கண்டு சொன்னார்கள். அதற்குள் அவயோகங்கள் இருந்தால் சுபயோகமாக மாற்றிட பரிகாரமும் கண்டனர்.

Advertisment

selvam

வாழ்க்கை வட்டத்தைக் கூறும் கட்டங்கள்!

நம் பிறவி ஜாதகத்தை வட தேசத்தினர் வட்டமாக எழுதி, ராசி குண்டலினி என்று நவநாயகர்களை நிரப்பிக் கொடுக்கின்றனர். "வாழ்க்கை என்பது வட்டம். அதுவே நம் ஜாதகமாக உள்ள வட்டம்' என்கின்றனர்.

தென்னகப் பகுதி ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் "வாழ்க்கை வட்டம் என்பது உண்மை. அதை நன்றாக நடத்திச் செல்வது ஜாதகக் கட்டம்' என்கின்றனர். எப்படி இருந்தாலும் நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின்படி பலனைக் கொடுத்தே தீருவர்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் குடும்ப நபர்களின் ஜனன ஜாதகங்கள் தொகுப்பாக வைக்கப்பட்டிருக்கும். வாழ்நாளில் ஏதேனும் கஷ்டங் களோ தடைகளோ வரும் சமயம், தமக்கு என்ன தசை நடக்கிறதென்று ஆய்வுசெய்து பரிகாரம் தேடுவதுண்டு.

ஆனால் ஒருவரது ஜனன ஜாதகமே அவர் வாழ்க்கை யையும் உச்சத்திற்கு எடுத்துச்சென்று, அதைப் பயன் படுத்துவோரையும் பணபலம் பெறவைக்கிறது. உதாரணத்திற்கு உலகக் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் ஜனன ஜாதகத்தைக் கூறலாம். இது மனித ஜாதகம்.

தெய்வ ஜாதகங்களில் குபேரன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதை முறைப்படி பூஜைசெய்து பயன்படுத்துவதால் தொழில் உயர்வு, பணவரவு அதிகமாகும் பலனைப் பெறலாம்.

செல்வ யோகம் பெருகிட...

சுமாரான வருவாய் உள்ள குடும்பத்தில் பிறந்த பெண் நல்ல நேரத்தில் பூப்படைந்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுக்கே மருமகளாகி விமானத்தில் பறந்து செல்வாள். இந்த மாற்றம் நிகழ்ந்தது எவ்வாறெனில் ஆண்- பெண் (கணவன்- மனைவி) இருபாலரின் ஜாதகக் கட்டங்களை இணைத்துவிட்டபோது அவர்களுக்கு 360 டிகிரி கோணத்தில் விதி விளையாடி உயர்ந்த அந்தஸ்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.

மனிதர்களின் ஜாதகங்கள் அனைத்தும் ஒன்றுபோல இருப்பதில்லை. வளர்ச்சியையும் தருவதில்லை. ஒன்றுடன் ஒன்று இணைந்தால் அசுர வளர்ச்சியை எட்டலாம் என்பது ஆராய்ந்து கண்ட உண்மை.

அள்ளிக் கொடுக்கும் குபேர முத்திரை

மகாலட்சுமி அருளைப் பெறுவதற்கும், லட்சுமி குபேரனின் அருளைப் பெறுவதற்கும் சில முத்திரைகள் சிவாகம நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள முக்கியமான அருள் தரும் யோக முத்திரைகளாக, சின் முத்திரை குரு கடாட்சம் தருவது. ம்ருகீ முத்திரை லட்சுமி அருளைக் கூட்டும் சக்திகொண்டது. ஹம்சீ முத்திரை யாகத்தால் வளம் கூட்டுவது. தேனு முத்திரை காமதேனுபோல் கேட்பதைக் கொடுப்பது.

குபேர முத்திரை லட்சுமி குபேரனை நிதி வேண்டி தியானம் செய்யும் போது பூஜைக்குக் காட்டவேண்டியது. இந்த முத்திரை விஷயத்தில் தேனு முத்திரையும், குபேர முத்திரையும் சரியாகச் செய்யத் தெரிந்துகொள்வது அவசியம். முத்திரை பற்றிய விஷயம் அறியாதவர்கள் சரியாகச் செய்யாமல் பூஜை செய்வதால் பிரார்த்தனை பலன் தராமல் நின்றுவிடுகிறது.

சில ரூபாய் நோட்களை 16, 32, 42 எண்ணிக்கையில் வாசனை திரவியம் தடவி, குபேரன் மற்றும் யாரேனும் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் ஜாதகத்தை மேலும் கீழும் வைத்து, மஞ்சள் நூலால் அட்டை கட்டுவதுபோலக் கட்டி பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். பிறகு அட்டையை பாக்கெட்டில் ஒன்றும், பீரோவில் ஒன்றும் என வைத்துவிட வேண்டும். வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாள், வியாழன் மாலை 5.00 மணிமுதல் 8.00 மணிவரையுள்ள குபேரன் காலகட்டத்தில் இவ்வாறு பூஜை செய்வது உத்தமம்.

"ஓம் ஹேமவர்ணம்' என்று தொடங்கிவிஷ்ணு வல்லபாம்' என நிறைவு பெறும் மகாலட்சுமி தேவியின் மூர்த்தி ரகசியத் துதியை மூன்றுமுறை குபேர முத்திரை செய்து கூறுவது நலம் தரும்.

குபேர செல்வ யோகம் தரும் தமிழ்முறை ஆத்ம தியானம்

"ஸ்ரீ குருப்யோ நம; ஸ்ரீ லட்சுமி குபேராய நம.'

"நான் குபேரன் இருக்கும் அளகாபுரியில் வாழ்கிறேன். எனக்கு பணவரவு வெள்ளம்போல வந்துகொண்டே இருக்கிறது. என் உள் மனதில் அளவற்ற செல்வங்களோடு ஒன்றாகிவிட்டேன். நான் செல்வந்தனாவதும் வாழ்க்கை யில் வெற்றியடைவதும் எனது உரிமை!

குபேர செல்வம் எனக்குத் தடை "இல்லாமலும், ஏராளமாகவும், முடிவில் லாமலும் அருவிபோல் வந்துகொண்டே இருக்கிறது. நான் செல்வங்கள் அனைத்தையும் அடைவதற்கு இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். இது மிகவும் அற்புதமாக இருக்கிறது.

நான் குபேரன் வாசம் செய்யும் அளகாபுரியில் வாழ்கின்றேன். நான் வகிக்கும் இல்லத்தில் நவநிதிகள் புடைசூழ குபேரன் என்னை ஆசீர்வதிப்பதைக் காண்கிறேன்.'

கைகூப்பியடிபடி, மந்திரத்தை 16 முறை கூறுக.

ஓம் ஸ்ரீம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்

உபைதுமாம் தேவதுக்கி

கீர்த்திஸ் மணினா ஸஹ ப்ராதுர்

பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்

கீர்த்திம் வ்ருத்திம் ததாதுமே

ஸ்ரீ லட்சுமி குபேராய மங்களம்'.

கையில் எழுதும் மெய்ஞ்ஞானம்!

நம் உள்ளங்கைப் பகுதியான விரல் இடுக்குகளிலிருந்து காஸ்மிக் கதிர்கள் வெளியாவதாகவும், அதனை இணைப்பதனாலும் நமக்குத் திறன்கள் அதிகமாவதாக வும் கணிதவியல் மேதைகள் கண்டறிந்தனர்.

அரபல் நெய்ல்ஸ் ஹென்றிக் அபாகஸ், ஆர்க்கிமிடீஸ் கூறிய வட்டம், காண்டர், ஜார்ஜ் சொன்ன ஜோடி சேரும் எண்களின் மதிப்பு இன்றளவும் எண்ணியல் நிபுணர் களால் வியந்து பாராட்டத்தக்கவை.

27 நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள் இருக்கின்றன. அவற்றை நம் கை களில் நவரத்தினங்களோடு மோதி ரத்தில் பொறித்து அணிகிறோம். அதற்கும் மேலான ஒரு முறை இருக்கிறது. முழங்கை, இடுப்பு, மணிக்கட்டுகளில் "டாட்டூஸ்' பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதைப் போல எண் சக்கரங்களையும் உங்கள் யோக எண்ணையும் பிரித்து ஆறு எண்களாக கைக்கடிகாரம் கட்டும் பகுதியின் மேல்பாகத்தில் எழுதிக் கொண்டால் பணவரவு கூடுகிறது.

மணிக்கட்டில் எழுதினால்

"மணி' வந்துசேரும் என்ற நம்பிக்கைச் சொல் பேசப்படுகிறது. உதாரண மாக 26-12-1965-ல் பிறந்தவர் 32-ஆம் எண்ணை உடையவராக இருக்க, அவரது வாழ்க்கை வளமாக்கும் எண்ணாக 5-9-4-6-3-5=32- இந்த எண்ணை செப்புத் தகட்டில் அல்லது தனித்தாளில் எழுதிப் பொருத்திக்கொள்வதால் தனவரவு கைகூடும் என்பது யோக எண் எழுதும் மெய்ஞ்ஞான ரகசியங்களில் ஒருவிதம். இப்படி எண்களைப் பிரித்து எழுதி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ரோமானியர்களும் சீனர்களும்தான். மன்னன் சாலமனும் வரலாற்றில் இடம்பெற்றார்.

கிரக நிலைக்கும் எண்ணுக்கும் தொடர்பு

ஒருவருக்கு 7-ஆமிடத்தில் சுபர்களும், 10-ல் பாவர்களும் கூடினால் வஜ்ஜிர யோகம் உண்டாகும். இதனால் நீடித்த ஆயுள், யோக வாழ்வு உண்டாகும். எண் 52 இவருக்குப் பொருந்தும்.

லக்னாதிபதி 2-ல், இரண்டுக்கு உடையவன் லக்னம் அல்லது 11-ல் இருந்தால் பெரும் செல்வம், அதிர்ஷ்ட யோகம் இடையில் வந்து கைகூடும். எண் 36 இவரை உயர்த்தும்.

லக்னத்திற்கு 1, 4, 8 இவற்றில் சூரியன், புதன் ஒன்றுகூடி குரு பார்த்தால் வாழ்நாளின் இடையில் எண்கள் அமைப் பால் யோக வாழ்க்கை பெறுவார். இவருக்கு 42 அமைப்பாக வேலை செய்யும்.

சந்திரன், குரு உச்சமடைந்து, செவ்வாய், புதன் 7-ல் அமர்ந்திருக்க, சாதனைக்காரகன் சனி மகரத்தில் ஆட்சியாகி நின்றால் திடீரென எண்களைக்கொண்டு பணபலம் பெற்று மதிப்பையும் பெறுவார். இவருக்கு எண் 47 தனம் தந்து மனம் மகிழவைக்கும்.

பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து, லாபாதிபதி சுபவர்க்கம் பெற்றுவிட ஜாதகர் அதிர்ஷ்ட எண்களை அறியும் திறன் பெற்று, அதனால் குபேர யோகத் தைப் பெற்றுவிடுவார். இந்த ஜாதகருக்கு 34 பெரும் தனம் தந்து திணறவைக்கும்.

ஜாதக அமிர்தம், பலதீபிகை, பூர்வ பராசார்யம், பிருஹத் ஜாதகம் ஆகிய உயர்ந்த ஜோதிட களஞ்சியங்களில் கிரக யோக அமைப்புகள் சொல்லப்பட்டுள்ளன. விதி கெட்டால் நம் வாழ்நாளில் இடர்கள் வரக்கூடும். அதை நம் மதி என்கிற புத்தியைக்கொண்டு அகற்றிக்கொண்டு நல்ல வாழ்க்கை பெறவேண்டும்.

எல்லாரும் இன்பமாய் வாழ ஆத்ம தியானம் செய்யப் பழகுவோம். அள்ளித்தரும் லட்சுமி குபேரனை இல்லத் திற்கு அழைப்போம்.

செல்: 95511 84326

bala060924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe