பகவான் கிருஷ்ணன் அவதரித்த நாள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. (இவ்வாண்டு 2-9-2018).
வட இந்தியாவில் "பாத்ரபத' மாதத்தில் (தமிழில்- ஆவணி) அஷ்டமியன்று இரவு 12.00 மணிக்கு பகவான் கிருஷ்ணன் அவதரித்த நாள் கொண்டாடப்படுகிறது.
அவர் பிறந்த மதுராவில் இருக்கும் ஆலயங்களில் விசேஷ பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து கிருஷ்ணன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மதுரா, பிருந்தாவனம், துவாரகை, மேடதா மீரா மந்திர் (ராஜஸ்தான்) போன்ற இடங்களில் மிக விமரிசையாக கிருஷ்ணன் அவதரித்த நாள் கொண்டாடப்படுகிறது.
ரிஷப ராசியில் பிறந்தவர் கிருஷ்ணன். அதனால் அங்கே உச்சமடைகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. குரு பகவான் 6-ல் இருப்பதால், அவர்கள் எள்ளாலான இனிப்பையும் வெல்லத்தையும் பிரசாதமாக வைக்கவேண்டும். எந்த பிரசாதத்தை வைத்தாலும் அதில் துளசி இலையையும் வைக்கவேண்டும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது சந்திரன் 12-ல்

மிதுன ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது சந்திரன் 12-ல் இருப்பார். 7-ல் இருக்கும் சனி, 2-ல் இருக்கும் ராகு சில மனக்கஷ்டங்களைத் தருவார்கள். அதனால் வீட்டில் பாயசம் செய்து, கிருஷ்ணனை வழிபட்டால், மனக் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும்.
கடக ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது, சந்திரன் 11-ல் இருப்பார். சந்திரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால், நன்மைகளைச் செய்வார். சுக்கிரன் 4-ல் குருவுடன் இருக்கிறார். வீட்டில் சந்தோஷச்சூழல் இருக்கும். 6-ல் இருக்கும் சனி பகைவர்களைக் குறைப்பார். அவர்கள் குடும்பத்துடன் கிருஷ்ணனை பூ, பழம் வைத்து வணங்கவேண்டும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியன்று சூரியன் ராசியில் இருப்பார். 3-ல் குரு, 10-ல் சந்திரன் இருப்பார்கள். 10-ல் இருக்கும் சந்திரன் காரியத் தடைகளை நீக்குவார். குருவின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு வெல்லம், வாழைப்பழம் வைத்து கிருஷ்ணனை வழிபடவேண்டும். மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சிக்கலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியன்று 2-ல் சுக்கிரன், குரு, 4-ல் சனி, 9-ல் சந்திரன் இருப்பார்கள். அதனால் பயண யோகம், தன லாபம் கிட்டும். வீட்டில் கஷ்டங்கள் நீங்கும். 11-க்கு அதிபதியான சந்திரன் 9-ல் உச்சம் பெறுவதால், நன்மைகள் நடக்கும். பழம், பாயசம் வைத்து கிருஷ்ண பகவானை வழிபடவேண்டும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது சுக்கிரன், குருவுடன் இருப்பார். சனி பகவான் 3-லும் செவ்வாய் 4-ல் உச்சமாகவும் இருப்பார்கள். 10-க்கு அதிபதியான சந்திரன் அஷ்டமத்தில் இருப்பதால், வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. வீட்டில் கிருஷ்ணனின் படத்தை வைத்து, நெய் விளக்கேற்றி, பாயசம், பால்கோவா வைத்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது, சுக்கிரன் 12-ல். 2, 5-க்கு அதிபதியான குரு பகவான் சுக்கிரனுடன் இருப்பார். பாதச்சனி நடந்துகொண்டிருக்கும். 9-க்கு அதிபதியான சந்திரன் 7-ல் உச்சம் பெறுகிறார். அதனால் அச்சம் விலகும்.
கடன் குறையும். வீட்டில் கணவன்- மனைவி உறவு சீராகும். நோய்கள் குணமாகும்.
பகவான் கிருஷ்ணனை வெல்லம், வாழைப் பழம், பாயசம், தேங்காய் ஆகியவற்றை வைத்து இரவு வேளையில் வழிபடவேண்டும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது, ராசியில் சனி இருக்கும். 2-ல் செவ்வாய், 6-ல் சந்திரன் உச்சமாக இருப்பார்கள். 9-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன், குரு. அதனால் இவர்களுக்கு அதிகமாக கோபம் வரும். அந்த கோபத்தைத் தணிப்பதற்கு அவர்கள் தேங்காய், பாயசம், கரும்புச் சாறு வைத்து கிருஷ்ணனை வழிபடவேண்டும்.
மகர ராசிக்காரர்களுக்கு ராசியில் செவ்வாய், 5-ல் சந்திரன், 7-ல் ராகு, 8-ல் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன் குரு, 12-ல் சனி இருப்பதால், அவர்களுக்கு எந்த செயலைச் செய்யும்போதும் மனதில் பயம் இருக்கும். அவர்கள் கிருஷ்ணனை ரோஜா மலர்களை வைத்து, இனிப்பு, பூ, பழம் வைத்து இரவில் தீபமேற்றி வழிபடவேண்டும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதியான சனி பகவான் 11-ல், 4-ல் சந்திரன் உச்சமாக இருப்பார். 6-ல் ராகு, 7-ல் சூரியன்- புதன், 9-ல் சுக்கிரன்- குரு, 12-ல் செவ்வாய்- கேது இருப்பதால் பல நன்மைகள் நடக்கும். பகைவர்கள் குறைவார்கள். வெற்றி கிடைக்கும். பிள்ளைகள்மூலம் நல்ல செய்திகள் வரும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். அவர்கள் மஞ்சள் நிற மலர்கள், வெல்லம், கற்கண்டு, துளசி, பால்கோவா ஆகியவற்றை வைத்து கிருஷ்ணனை வழிபடவேண்டும். இதனால் காரியத்தடைகள் நீங்கும்; பணவரவு உண்டாகும்.
மீன ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது குரு பகவான் 8-ல், 8-ஆம் அதிபதி சுக்கிரனுடன் இருக்கிறார். ராசிக்கு 3-ல் சந்திரன் உச்சம். 5-ல் ராகு, 6-ல் சூரியன்- புதன், 10-ல் சனி, 11-ல் செவ்வாய்- கேது. தடைகள் நீங்கி சந்தோஷமாக வாழ்வதற்கு தேங்காய், பூ, பழம், சிவப்பு நிற மலர்கள் வைத்து கிருஷ்ண பகவானை வழிபடவேண்டும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியின்போது 2-ல் சந்திரன், 4-ல் ராகு, 5-ல் சூரியன்- புதன், 7-ல் சுக்கிரன்- குரு, 9-ல் சனி, 10-ல் செவ்வாய்- கேது இருப்பார்கள். இவர்களுக்கு யோகமான காலமிது. காரியத்தடைகள் நீங்கி, பண வசதியுடன் இருப்பதற்கு கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று, தேங்காய், பால்கோவா, மஞ்சள் நிறப்பூ அல்லது மஞ்சள் நிற ஆடை வைத்து பூஜை செய்யவேண்டும்.
செல்: 98401 11534