Advertisment

வராக மிஹிரர் கூறும் கோட்சார பரிகாரம்! அம்சி கோ. விவேகானந்தன்

/idhalgal/balajothidam/kotsara-remedy-by-varaha-mihirar-amsi-co-vivekananda

ஜோதிட சாஸ்திரம் நமக்கு தீமையாக வருகின்ற அனைத்து கிரக அமைப்புகளுக்கும் பரிகாரங்களை சொல்லுகின்றது. அந்தவகையில் குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி என்னும் கோட்சார கிரகங்களின் நகர்வுகளால் பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படுகின்ற பாதிப்புகளை விலக்குவதற்கு வராக மிஹிரர் தனது பிரஹத் சங்ஹிதா நூலில் பரிகாரங்களை கூறியுள்ளார். அவற்றை குறித்து நாம் இங்கு காணலாம்.

Advertisment

ஜோதிட பெருமக்கள் உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை, உங்கள் ராசிக்கு குருப்பெயர்ச்சி சரியில்லை, இந்த மாதம் செவ்வாயின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பாதிப்புகளைத்தர இருக்கின்றது என அச்சுறுத்துகின்றார்கள் என்றால் நீங்கள் அச்சமடைய தேவையில்லை. காரணம் எல்லா பெயற்சிக்கும்தான் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

Advertisment

மாத ராசிபலனின் மிக இன்றியமையாதவராக கருதி எந்த கிரகத்தால் மாதப் பலன் சொல்லப் படுகின்றதோ அந்த கிரகமாகிய சூரிய பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்று அவர் கோட்சாரத்தில் பயணம் ஆகின்றார் என்றால், அது போன்று பூமி காரகன் என பெயர் பெற்ற செவ்வாய் பகவான் அவ்வாறு சாதகமற்று கோட்சாரத்தில் பயணம் ஆகின்றார் என்றால், அதற்குப் பரிகாரமாக சிவந்த பூக்களால் சிவபெருமான், முருக கடவுளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். சிவப்பு சந்தன அபிஷேகம். அதுபோன்று வசதியானவர

ஜோதிட சாஸ்திரம் நமக்கு தீமையாக வருகின்ற அனைத்து கிரக அமைப்புகளுக்கும் பரிகாரங்களை சொல்லுகின்றது. அந்தவகையில் குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி என்னும் கோட்சார கிரகங்களின் நகர்வுகளால் பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படுகின்ற பாதிப்புகளை விலக்குவதற்கு வராக மிஹிரர் தனது பிரஹத் சங்ஹிதா நூலில் பரிகாரங்களை கூறியுள்ளார். அவற்றை குறித்து நாம் இங்கு காணலாம்.

Advertisment

ஜோதிட பெருமக்கள் உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை, உங்கள் ராசிக்கு குருப்பெயர்ச்சி சரியில்லை, இந்த மாதம் செவ்வாயின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பாதிப்புகளைத்தர இருக்கின்றது என அச்சுறுத்துகின்றார்கள் என்றால் நீங்கள் அச்சமடைய தேவையில்லை. காரணம் எல்லா பெயற்சிக்கும்தான் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

Advertisment

மாத ராசிபலனின் மிக இன்றியமையாதவராக கருதி எந்த கிரகத்தால் மாதப் பலன் சொல்லப் படுகின்றதோ அந்த கிரகமாகிய சூரிய பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்று அவர் கோட்சாரத்தில் பயணம் ஆகின்றார் என்றால், அது போன்று பூமி காரகன் என பெயர் பெற்ற செவ்வாய் பகவான் அவ்வாறு சாதகமற்று கோட்சாரத்தில் பயணம் ஆகின்றார் என்றால், அதற்குப் பரிகாரமாக சிவந்த பூக்களால் சிவபெருமான், முருக கடவுளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். சிவப்பு சந்தன அபிஷேகம். அதுபோன்று வசதியானவர்கள் சிவப்பு பசுக்களை தானம் செய்வது இவையெல்லாம் செவ்வாய் மற்றும் சூரியனின் கோட்சார பாதிப்புகளை விலக்கி நன்மையைத் தருகின்ற அமைப்பாகும்.

அதிலும் சூரியன் உபய ராசியில் முதல் திரேக்காணத்தில் அமைந்து அமர்ந் திருந்தால் செவ்வாயின் கோட்சார பலன் தீமையாக அமைந்தபோது, முருக பெருமானுக்கு சிகப்பு சந்தனத்தால் அபிஷேகம் செய்வது, சிவந்த மலர் மாலை சார்த்தி, செவ்வாடை அணிவித்து அவரை வணங்கிவாருங்கள். அதுபோன்று செவ்வாய் ஆண் ராசி என்று சொல்லக்கூடிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிகளில் அமர்ந்து கோட்சார பாதிப்பை வழங்கினாலும் மேற்கண்ட பரிகாரத்தைச் செய்வதன்மூலமாக செவ்வாய் பகவான் தான் வழங்க இருக்கின்ற தீமைகளை விலக்கி நன்மைகளை வழங்குவார்.

அதுபோன்று செவ்வாய் பெண் ராசியா ஆகிய ரிஷபம், கடகம், கன்னி, விருட்சிகம், மகரம், மீனம் என்னும் ராசிகளில் அமர்ந்து கோட்சார பாதிப்பை தருவார் என்றால் அம்மன் ஆலயத்தில் அதாவது காளிகாம்பா ஆலயத்தில் செவ்வாடை அணிவித்து சிறப்பு சந்தன அபிஷேகம் செய்து சிகப்பு மாலை அணிவித்து அம்மனை வழிபட்டால் செவ்வாய் பகவானின் கோட்சார பாதிப்பு, சூரியனைக் கண்டபணியைபோல் விலகிவிடும்.

அவ்வாறு ஒருவர் ஜாதகத்தில் சந்திர பகவான் தருகின்ற கோட்சார பாதிப்புக்கு குறிப்பாக சந்திராஷ்டம தினத்தன்று தருகின்ற பாதிப்புகளை விலக வெள்ளைப் பூக்களால் அர்ச்சனைசெய்வது, மாலைச் சாத்துவது அது போன்று சுவைமிகுந்த இனிப்பு பதார்த்தங்களை, இனிப்பு பொங்கல், இனிப்பு பலகாரங்கள் இவற்றை படைத்து, மனமுருகி வேண்டினால் சந்திரனின் கோட்சார பாதிப்புகள் விலகிவிடும் என்று வராக மிஹிரர் கூறுகின்றார். மேலும் வசதி படைத்தவர்கள் சந்திரனின் கோட்சாரம் பாதிப்புகள் விலகுவதற்கு வெள்ளி தானம். வெள்ளி பசு தானம் இவற்றை செய்வதன் மூலமாக சந்திரனின் கோட்சார பாதிப்புகள் விலகிவிடுகின்றன.

vv

சுக்கிர பகவானுக்கும் அவர் வழங்கும் கோட்சார பாதிப்புகளுக்கு மேற்கண்ட பரிகாரங்கள் செய்தால்போது மானது என்றாலும்கூட சுக்கிரன் ஆண் ராசிகளில் இருந்து கோட்சார பாதிப்பை வழங்கினார் என்றால், முழு முதல் கடவுளான பிள்ளையாரை வெள்ளைப் பூக்களால் அர்சித்து, வெள்ளெருக்கம் பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, தேன் மற்றும் மோதகம் லட்டு படைத்து வழிபட்டீர்கள் என்றால் சுக்கிர பகவான் தருகின்ற அனைத்து கோட்சார தீய பலன்கள் விலகிவிடுவதைக் காணலாம்.

மேலும் சுக்கிரன் பெண் ராசியில் அமர்ந்திருக்க அன்னபூர்ணேஸ்வரி, லஷ்மி, இசக்கி, அம்மன் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளைப் பூக்களால் அர்ச்சனை, வெள்ளை மாலை சாத்துதல், அது போன்று இனிப்பாலான நிவேதியங்களை படைத்தல் இவற்றின்மூலமாக சுக்கிரன் தருகின்ற கோட்சார தீமை விலகி நன்மை வருவதை காணலாம்.

அவ்வாறு சனிப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சரியில்லை, ஏழரை நடக்கின்றது, அஷ்டமத்து சனி நடக்கின்றது என்றெல்லாம் நீங்கள் அச்சப்பட தேவையே இல்லை. சனீஸ்வர பகவானின் கோட்சார பாதிப்புகளில் இருந்து விலக சாஸ்தாவிற்கு அல்லது கருப்பண்ண சுவாமிக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுவது, எள் எண்ணை விளக்கு ஏற்றி மனம் உருகி பிரார்த்திப்பது, அது போன்று இரும்பாலான பொருட்களை ஐயப்பன் ஆலயம், சாஸ்தா ஆலயம், அதுபோன்று கருப்பண்ண சுவாமி ஆலயங்களில் சமர்பணம் செய்வது இவை யாவும் ஏழரைச் சனி போன்ற சனிபகவான் தரும் கோட்சார தீமைகளை விலக்கி உங்களுக்கு நன்மை தருகின்ற பரிகாரமாகும்.

மேலும் கல்வி கோள் எனவும் கணக்கன் எனவும் ஜோதிடக் கோள் எனவும் தாய்மாமனை குறிக்கின்ற கோள் எனவும் ஜோதிட நூல்கள் கூறுகின்ற புத பகவான் தருகின்ற கோட்சார பாதிப்புகளில் இருந்து நீங்கள் விடுபட ஸ்ரீ கண்ணபரமாத்மா, சுதர்சன ஆழ்வார் மற்றும் நரசிம்மப் பெருமாள் மற்றும் விஷ்ணு இத்தகைய தெய்வங்களுக்கு பச்சை ஆடை அணிவித்து வழிபடுதல், துளசி மாலை அணிவித்து வழிபடுதல், துளசி இலையால் அர்ச்சனை செய்தல் புதன் தரு கோட்சார பாதிப்புகள் விலகி நன்மை ஏற்படுகின்றது அவ்வாறு குருபகவான் தரும் கோட்சார பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்தல், மஞ்சள் ஆடை சாத்தி வழிபடுதல், மஞ்சள்நிறப் பொருட்கள், மஞ்சள்நிற ஆடைகள் இவற்றை தானமாக கொடுத்தல் குறிப்பாக புளியோதரை, லட்டு, கேசரி போன்ற நிவேத்தியங்களை பெருமாளுக்கு படைத்து வழிபடுவது, பெருமாள் ஆலயத்தில் மஞ்சளாடை சாத்தி வழிபடுவது அதுபோன்று மேஷம் விருச்சிகத்தில் இருக்கின்ற குருபகவான் கோட்சார பாதிப்புகளைத் தருவார் என்றால் தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு மஞ்சள் ஆடை சாத்துவது, மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்வது இவை குருபகவான் கோட்சாரப்படி தருகின்ற பாதிப்புகளை விலக்குகின்ற பரிகாரங்களாகும்.

கோட்சாரப்படி துர்தானங்களில் பாவ கிரக பார்வையோடு கோள்கள் அமரும்போது ஆலயம் சென்று தெய்வத்தை வழிபடுவதும், பிராமணர்களை பூஜை செய்வதும் (உத்தம மனிதர்களை வணங்குவது) பாதிப்பைத் தருகின்ற கிரகத்திற்குரிய சாந்தி மந்திரத்தினால் ஜெபம் ஹோமம் இவை செய்வதும் அந்த கிரகத்துக்குரிய வாரங்களில் விரதம் ஏற்பதும் தானம் செய்வதும், அடக்கத்தோடு இருப்பதும், நல்லோர்களை அடியார்களை அணுகி அவரோடு உறவாடுவதும், அவரோடு அமர்வதும் கோட்சார பாதிப்பை விலக்கும் என்றும் நூல்கள் கூறுகின்றன. எனவே குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்று ஜோதிட பெருமக்கள் அச்ச மூட்டினால் அச்சமடையாதீர்கள். மேற்கண்ட பரிகாரங்களை செய்து கிரக பாதிப்புகள் விலகி நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

செல்: 94438 08596

bala101123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe