Advertisment

கோட்சார நீச செவ்வாயும் பரிகாரங்களும்!

/idhalgal/balajothidam/kotsara-neesa-chevvai-and-remedies

ற்போதைய கோட்சாரப்படி செவ்வாய் 12-5-2023 முதல் 2-7-2023 வரை கடக ராசியில் செல்வார். இந்த செவ்வாயின் கடக ராசி சஞ்சாரம் அவருக்கு நீசத் தன்மையைக் கொடுக்கும்.

Advertisment

இந்த வருடம் நீச செவ்வாய் நீசபங்கம் ஆகவில்லை. எனவே மேற்கண்ட நாட்களில் 12 ராசியினரும் சிறுசிறு வாழ்வியல் பரிகாரங்களை மேற்கொள்ளவேண்டும்.

மேஷம்

மேஷ ராசியினரின் நாளாம் வீட்டில் செவ்வாய் நீசமடைகிறார். இந்த நீச காலகட்டத்தில் பயணங்களில் கவனமும், தாயாரின் உடல்நிலையில் கருத்தும் தேவை. மாணவர்களுக்கு மறதி அதிகமாகும். என்றாலும் இது வரையில் உங்கள்மீது இருந்துவந்த ஒரு தவறான குற்றச் சாட்டு மறையும். உங்கள் கிணற்றில் வெகு காலத்திற்குமுன் விழுந்து மறைந்த ஒரு பொருள் கிடைக்கும். அருகிலுள்ள துர்க்கையம்மன் அபிஷேகத்திற்கு பாலும், சந்தன வில்லைகளும் வாங்கிக் கொடுத்து வணங்கவும்.

ரிஷபம்

பயணத்தடை ஏற்படும். நீங்கள் பக்கத்து ஊர் சென்றாலும் சரி; அல்லது வெளிநாடு சென்றாலும் சரி- ஒரு வில்லங்கம் முன்னால் வந்து நிற்கும். பேருந்தில் சென்றாலும் ஏதாவது தொல்லை வந்து நிற்கும்.. உங்கள் திருமணத்தில் தடை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒரு வதந்தி மறையும். அருகிலுள்ள துர்க்கையை வணங்கி, சர்க்கரை அல்லது வெல்லம் வாங்கி காணிக்கை செலுத்தவும்.

Advertisment

dd

மிதுனம்

உங்கள் ராசிக்கு

உங்கள் ராசிக்கு நீங்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்து ஒரு லாபம் தடையாகும். வேலைக்காக கொடுத்த பணம் வேலை வாங்கி கொடுக்காமல் ஆட்டம் காட்டும். நிறைய வட்டி வரும் என டெபாசிட் செய்த ஆள் தலை மறைவாகி விடுவார். உங்கள் எதிர்களும் காணாமல் போய் வேறு இடம் சென்றுவிடுவர். அருகிலுள்ள துர்க்கைக்கு துவரம் பருப்பு சமர்ப்பித்து வணங்கவும்.

கடகம்

உங்கள் ராசியிலேயே செவ்வாய் நிசம் அடைந்து இருப்பார் பூர்வீக பெருமை பாழாகிவிடும். பங்கு பத்திரம் காதல், கலை விஷயம் கையை சுட்டு பதம் பார்த்து விடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான ஜிரணக் கோளாறுகளில் கவனம் தேவை. எனினும் நீண்டநாளாக உங்களை அவமதித்து தொல்லை கொடுத்துவந்த உறவினர் ஒருவர் உங்கள் பாதியிலிருந்து விலகி விடுவார் அருகிலுள்ள துர்க்கையை வணங்கி செம்பு பாத்திரம் வாங்கிக் கொடுக்கவும்.

சிம்மம்

நீச செவ்வாய் உங்கள் பெற்றோர்வகையில் அலைச்ச லும் செலவும் தருவார். இதன்பொருட்டு நிறைய பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற பயணம் இருந்துகொண்டே இருக்கும். விரயங்கள் அதிக சோர்வு தரும். கடனை அடைக்க எடுத்துவைத்த அல்லது முதலிடுக்கென்று சேர்த்து வைத்த தொகை கடலில் கரைத்த காயமாக கரைந்து விடும். எனினும் உங்கள் மனை விஷயத்தில் இருந்துவந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். கோர்ட் விவகாரம் முடிவுக்கு வரும். துர்க்கையை வணங்கி அருகிலுள்ள குளத்தில் மீன்களுக்கு துவரை கலந்த சாதம் கொடுங்கள்.

கன்னி

வீடு விற்ப்பது சம்பந்தமான விஷயம் ஒரே இடத்தில், ஒரு முன்னேற்றமும் இன்றி நின்றுவிடும். பதவி உயர்வு சம்பந்தமான தகவல் உங்களுக்கு கிடைக்கவிடாமல் தடை செய்யப்படும். அரசியல்வாதிகளின் புகழ் களங்கம் பிறப் பிக்கப்படும். எனினும் உங்களுக்கு எதிராக சதிசெய்து கொண்டிருந்த துஷ்ட குணம் கொண்ட ஒருவர் எல்லை விட்டு செல்லும் நிலை உருவாகும். துர்க்கையை வணங்கி அபிஷேகத்திற்கு கனிகளும் நிவேதனத்திற்கு காய்களும் வாங்கி கொடுங்கள்.

துலாம்

இந்த நீச செவ்வாய் காலகட்டத்தில் வியாபாரம் ஏனோ ஒரு நிலையில் நின்றுவிடும். திருமணப் பேச்சில் குளறுபடி ஏற்படும். காசு என்பதை கண்ணால் பார்க்க முடியாத நிலை உண்டு. தொழில் கூட்டாளி பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார். விவசாய தொழில் உடையோர் திணறும் நிலை உண்டாகும். உங்கள் வீட்டில் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஒன்று தவிர்க்கப்படும். துர்க்கையை வணங்கி அலங்காரத்திற்கு தேவையான கவரிங் நகைகள் அல்லது ஒரிஜினல் தங்க நகைகள் வாங்கிக்கொடுங்கள்.

விருச்சிகம்

உங்கள் தந்தையின் உடல்நலம் பொருட்டு கடன் வாங்க நேரிடும். உங்களுக்கு வரும் அதிர்ஷ்ட நிகழ்வு உங்கள் அதிகாரிகளால் தடை செய்யப்படும். இதனால் வாழ்வின்மீதி இருந்த நம்பிக்கை சிதறும். அவதூறுகள் பரப்பி விடப்படும். எனினும் ஒரு திருட்டு சம்பவம் நிகழாமல், பொருட்கள் காப்பாற்றப்படுவதோடு, உங்கள் பெற்றோரும் எந்த இன்னலுமின்றி காப்பாற்றப்படுவர். துர்க்கையை வணங்கி வசதி உள்ளவர்கள் பசு தானம் செய்யலாம். வசதி குறைந்தவர்கள் மட்டையுடன்கூடிய தேங்காய் தானம் தரவும்.

தனுசு

இந்த நீச செவ்வாய் உங்கள் வாகனத்தை பதம் பார்த்துவிடுவார் நிறுத்திவைத்த கார் தன் இஷ்டம் போல எரிய ஆரம்பித்துவிடும். உங்கள் வாரிசுகள் மேல் அபாண்டமாக பழி சுமத்தப்படும். சில வாரிசுகள் இதனை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவர் சினிமா தோல்வி தரும். விளையாட்டு வீரர்கள் ஒரு மேன்மையை சந்திப்பர். கர்ப்பம் சம்பந்தமான கவனம் தேவைப்படும். வெகுநாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடுதலும் நேர்மையற்ற வேண்டாத செலவுகள் தவிர்க்கப்படுவதும் நடக்கும். குருவை வணங்குவதும் துர்கையை வணங்குவதும் அம்பாளுக்கு நிறைய மலர்களை காணிக்கை அளிக்கவும் தயங்காதீர்கள்.

மகரம்

உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவைப் படும். அரசியல்வாதிகள் தங்களது துணைகளின் விஷயமாக அவமானத்தை சந்திக்க நேரும். திருமண விஷயத்தில் உங்கள் தாயாரும் மூத்த சகோதரர்களும் முட்டுக்கட்டை போடுவர். வீடு பற்றிய விஷயம் மன குழப்பம் தரும். இது வரை பாதகம் செய்த நபர் நகர்வதும் காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைப்பதும் நடக்கும். துர்க்கையை வணங்குவதும் நிறைய குங்குமம் சமர்ப்பித்தும் வழிபடுங்கள்.

கும்பம்

உங்கள் காது பாதிக்கப்படும். இளைய சகோதரர் நோய் அவதிக்கு ஆளாவார். வேலையாட்கள் எதையாவது திருடி செல்ல நேரும். உங்கள் கௌரவத்தை குறைக்கும் வதந்தி ஒன்று உருவாகக்கூடும். உங்களது தியாகம் இழிவுபடுத்தப்படும். கடன் சம்பந்தமான பத்திரம் டாக்கு மெண்ட் விஷயங்கள் தொல்லை நீங்கி சரியாகும். துர்க் கையை வணங்கி ஏதேனும் உயிரினங்களை கோழி போன்ற தானம் கொடுப்பது அல்லது புற்றுக்கு பால் வார்ப்பது நன்று.

மீனம்

பார்வை பழுதுபடக்கூடும். பூர்வீக சொத்து சம்பந்த மான குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் வாரிசு சம்பந்தமான கலவரம் உண்டாகும். சட்ட நிகழ்வுகள் உங்களுக்கு எதிராக திரும்ப கூடும். எந்த விஷயத்திலும் தீர்மானம் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். எனினும் வெகுநாள் மறைக்கப்பட்ட ரகசியம் ஒன்று தெரியவரும். உங்கள்மீது உண்மை, அபிமானம் கொண்டவர் யார் என்று புரிந்து கொள்வீர்கள். எலுமிச்சை மாலை கேழ்வரகு, மஞ்சள், அரளி பூக்கள் என காணிக்கையாக கொடுப்பதும் நன்று. வருடா வருடம் செவ்வாய் ஒருமுறை நீசம் ஆவார். அந்த பொழுதில் 12 ராசிக்காரர்களும் மேற்கண்ட விதமாக வணங்கு வது நல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரைகளில் வணங்குவது நல்லது.

bala260523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe