Advertisment

அரசியலைக் கலக்கும் கோட்சாரம்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/kotcharam-mixes-politics-r-mahalakshmi

வம்பர் 16-ஆம் தேதி, சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். அங்கு ஏற்கெனவே புதன் வக்ரம் பெற்றுள்ளார்.

இந்த அரசியலுக்குரிய சூரியனை சனி தனது 10-ஆம் பார்வையாலும், குரு தனது ஏழாம் பார்வையாலும் பார்க்கின்றனர்.

ஆளும்கட்சியைக் குறிக்கும் செவ்வாய் நீசம்.

வம்பர் 16-ஆம் தேதி, சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். அங்கு ஏற்கெனவே புதன் வக்ரம் பெற்றுள்ளார்.

இந்த அரசியலுக்குரிய சூரியனை சனி தனது 10-ஆம் பார்வையாலும், குரு தனது ஏழாம் பார்வையாலும் பார்க்கின்றனர்.

ஆளும்கட்சியைக் குறிக்கும் செவ்வாய் நீசம். எனவே ஆளுங்கட்சி சற்று அமைதி காக்கவேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலை உண்டு.

Advertisment

ss

எதிர்கட்சியைக் குறிக்கும் புதன் வக்ரம். மேலும் குரு, சனி பார்வைகளுடன் சூரியனுடன் அமர்வு. எனவே நவம்பர் 16-லிருந்து இரண்டு வாரங்கள் எதிர்கட்சியினரின் சத்தம், ஆர்ப்பாட்டம் பலமாக இருக்கும். ஆளுங்கட்சியால் எதுவும் செய்ய இயலாது.

உடனே, எதிர்கட்சியினர் கூட்டுசேர்ந்து, மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படுமா என்றால் அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. ஏனெனில் எதிர்கட்சிக் கூட்டணி இருப்பது காலபுருஷனின் 8-ஆம் வீட்டில். குரு பார்வையால் போராட்டம் அதிகமாகுமே தவிர, சனியின் பார்வை எல்லாவற்றையும் ஒரு கட்டுக்குள் வைத்துவிடும்.

எனவே, நவம்பர் 16 முதல் டிசம்பர் 30-ஆம் தேதிவரையிலான இந்த இரண்டு வார கால ஆர்ப்பாட்டம் சிறு சஞ்சலத்தை, சலனத்தை மட்டுமே தரும். முக்கிய மாற்றம் ஏற்படாது. சில முன்னாள் மந்திரிகள் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையும் வாய்ப்புண்டு.

டிசம்பர் 3-ஆம் தேதி, செவ்வாய் வக்ரம் பெறுகிறார். செவ்வாய் நீசத்திலிருந்து வக்ரம் பெறுவதால் உச்சநிலையை அடைந்து விடுவார்.

அப்போது ஆளுங்கட்சி வெகுண்டு சீறும்; அரசியல் காட்சிகள் மாறும்.

செல்: 94449 61845

bala151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe