லக்னத்தில்.... குருவின் மீன ராசியில் கேது இருந்தால், உட-ல் காயத்தால் உண்டான தழும்புகள் இருக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். பல ரகசிய காரியங்களைச் செய்து, கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார். தைரியசா-யாக இருப்பார்.எப்போதும் அவர் போட்டி, பொறாமையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது இருந்தால், பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். குடும்பத்தில் குழப்பம் இருக்கும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். சாதுர்யமாக செயல்பட்டு வெற்றிபெறுவார். சிறிய அளவில் பண வரவு இருக்கும். அதைவைத்து குடும்பத்தை நடத்துவார்.
3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது இருந்தால், ஜாதகர் துணிச்சல்
லக்னத்தில்.... குருவின் மீன ராசியில் கேது இருந்தால், உட-ல் காயத்தால் உண்டான தழும்புகள் இருக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். பல ரகசிய காரியங்களைச் செய்து, கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார். தைரியசா-யாக இருப்பார்.எப்போதும் அவர் போட்டி, பொறாமையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது இருந்தால், பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். குடும்பத்தில் குழப்பம் இருக்கும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். சாதுர்யமாக செயல்பட்டு வெற்றிபெறுவார். சிறிய அளவில் பண வரவு இருக்கும். அதைவைத்து குடும்பத்தை நடத்துவார்.
3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பணவரவு இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். புத்திசா-த்தனமாக செயல்படுவார். உடன் பிறந்தோரால் பிரச்சினை இருக்கும். அதனால் மன அமைதி கெடும். எனினும், தன் கஷ்டத்தை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். பெயர், புகழுடன் இருப்பார்.
4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது இருந்தால், தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். பூமி, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும். மறைமுக காரியங்களைச் செய்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார். சாதுர்யமாக செயல்படுவார்.
5-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது இருந்தால், வாரிசுகளால் பிரச்சினை இருக்கும். அதனால் மன கவலை உண்டாகும். எப்போதும் சிந்தனை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். உழைத்து, குடும்பத்தைக் காப்பாற்றுவார். தைரியசா-யாக இருப்பார்.
6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது இருந்தால், ஜாதகர் பகைவர்களை வெல்வார். போட்டி, பொறாமை, சண்டை இருக்கும். அனைத்திலும் வெற்றிபெறுவார். தன் மன பயத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். துணிச்சலான காரியங்களைச் செய்து, பலரின் பாராட்டுக்களையும் பெறுவார்.
7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது இருந்தால், கணவராக இருந்தால் மனைவியாலும், மனைவியாக இருந்தால் கணவராலும் பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் இருக்கும். சில நேரங்களில் எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்ற சிந்தனை உண்டாகும். எனினும், வெளியே சந்தோஷமாக இருப்பதைப்போல ஜாதகர் காட்டிக்கொள்வார். பல மறைமுக வேலைகளைச் செய்து, அவர் பணம் சம்பாதிப்பார்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் கேது இருந்தால், பல கஷ்டங்கள் இருக்கும். எனினும், பல காரியங்களைச் செய்து அவற்றி-ருந்து ஜாதகர் விடுபடுவார். போட்டி, பொறாமை இருக்கும். கடவுளை வழிபட்டு, அவற்றையெல்லாம் கடந்து, ஜாதகர் வெற்றிபெறுவார்.
9-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது இருந்தால், அடிக்கடி பயணம் செய்யவேண்டிய திருக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தர்ம காரியங்களைச் செய்வதில் தடங்கல்கள் இருக்கும். மறைமுகமான செயல்களில் ஈடுபட்டு, மந்திர தந்திரச் செயல்களைக்கூட செய்து, ஜாதகர் தன்னை காப்பாற்றிக்கொள்வார்.
முன்னேற்றத்தைப் பார்ப்பார்.
10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது இருந்தால், தந்தையால் சந்தோஷம் இருக்கும். அரசாங்க விஷயத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். பல ரகசிய வேலைகளைச் செய்து, பணம் சம்பாதிப்பார். எந்த பிரச்சினையையும் துணிச்சலாக சந்திப்பார்.
அதன்மூலம் பண வரவு இருக்கும்.
11-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால், நல்ல வருமானம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். சுயநலவாதியாக இருப்பார். துணிச்சலாக தன் செயல்களைச் செய்வார். குருநாதர் கூறியபடி நடந்தால், நன்றாக வாழலாம்.
12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். பல கஷ்டங்களைப் சந்திக்க வேண்டியதிருக்கும். வெளித் தொடர்பில் மன அமைதி கெடும். எனினும், ஜாதகர் தைரியமாக இருப்பார்.பல ரகசிய காரியங்களைச் செய்வார். பகைவர்களை வென்று, சந்தோஷமாக வாழ்வார்.
செல்: 98401 11534