Advertisment

மகர லக்னத்திற்கு 12 பாவங்களில் கேது!

/idhalgal/balajothidam/ketu-one-12-sins-capricorn

க்ன கேந்திரத்தில், மகரத்தில் கேது தன் நண்பரான சனியின் வீட்டில் இருக்கிறார். அதனால் ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் பிரச்சினை உண்டாகும். கோப குணம், பிடிவாத குணம் இருக்கும். பேசுவதையே திரும்பத்திரும்ப பேசுவார். மனைவியின் உடல் நலத்தில் பாதிப்பிருக்கும். அடிக் கடி தலைவலி வரும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சனி யின் கும்ப ராசியில் கேது இருந் தால் பணத்திற்காகவும், குடும்பத் தைக் காப்பதற்காகவும் ஜாதகர் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். பல ரகசிய செயல்களைச் செய்து பணத்தை சம்பாதிப்பார். பணத்தை சுருட்ட வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் மனதிலிருக்கும்.

Advertisment

ff

3-ஆம் பாவத்தில் க

க்ன கேந்திரத்தில், மகரத்தில் கேது தன் நண்பரான சனியின் வீட்டில் இருக்கிறார். அதனால் ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் பிரச்சினை உண்டாகும். கோப குணம், பிடிவாத குணம் இருக்கும். பேசுவதையே திரும்பத்திரும்ப பேசுவார். மனைவியின் உடல் நலத்தில் பாதிப்பிருக்கும். அடிக் கடி தலைவலி வரும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சனி யின் கும்ப ராசியில் கேது இருந் தால் பணத்திற்காகவும், குடும்பத் தைக் காப்பதற்காகவும் ஜாதகர் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். பல ரகசிய செயல்களைச் செய்து பணத்தை சம்பாதிப்பார். பணத்தை சுருட்ட வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் மனதிலிருக்கும்.

Advertisment

ff

3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந்தோரால் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் மனக்கஷ்டம் உண்டாகும்.

ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். ரகசிய செயல்களைச் செய்வதற்குத் தயங்கமாட்டார். வாழ்க்கையின் சிரமங்களைப் போக்குவதற்கு தன்னைவிட தாழ்ந்த நிலையிலிருக்கும் மனிதர்களைப் பயன்படுத்தி, தன் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வார்.

4-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது இருந்தால் அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். பல தகிடுதத்த செயல்களைச் செய்வார். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார்.

5-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் இருக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகளும் பயமும் இருக்கும். அதிகமாக சிந்திப்பதால் மனநோய் உண்டாகும். எனினும் சாதுரியமாக செயல்பட்டுத் தன் காரியங்களை முடித்துக்கொள்வார். அனைவரிடமும் கடுமையாக நடந்துகொள்வார்.

6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு பகைவர்களால் பிரச்சினைகள் இருக்கும். பல நேரங்களில் பெரிய பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வார். எனினும் தன் தைரியத்தைப் பயன்படுத்தி அனைத்துக் கஷ்டங்களையும் கடந்து தன் காரியங்களை ஜாதகர் முடித்துக்கொள்வார்.

7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மனைவிக்கு உடல்நல பாதிப்பிருக்கும்.

ஜாதகர் பல வியாபாரங்களைச் செய்வார். கடுமையாக உழைப்பார். பல ரகசிய செயல்களில் ஈடுபடுவார். அதன்மூலம் தன் கஷ்டங்களை நீக்கிக்கொள்வார்.

8-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது இருந்தால் பல பிரச்சினைகள் உண்டாகும். உடல்நலம் கெடும். பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்‌. ஜாதகர் கடுமையாகப் பேசுவார். பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுப் பயன் பெறுவார்.

9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது இருந் தால் ஜாதகருக்குப் பல கஷ்டங் கள் ஏற்படும். அவற்றைப் பல மறைமுக காரியங்களைச் செய்து சரிசெய்துவிடுவார். அதன்மூலம் பணம் சம்பாதிப் பார்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் கேது இருந்தால் தந்தைக்குப் பல சிரமங்கள் இருக்கும். தந்தை யால் ஜாதகருக்கு சில பிரச் சினைகள் உண்டாகும்.

அரசாங்க விஷயத்தில் தடங் கல்கள் ஏற்படும். செய்யும் வியாபாரத்தை, தொழிலை மாற்ற நேரும். அலைச்சல்கள் இருக்கும். சில சட்ட விரோத செயல்களைச் செய்து ஜாதகர் பணம் ஈட்டுவார்.

11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு நல்ல வருமானம் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அதைவைத்து பல குறுக்குவழிகளில் பயணித்து பணத்தை சம்பாதிப்பார்.

12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் ஆதாய முண்டு. மனபலம் இருக்கும். ஜாதகர் துணிச்சலாக பல செயல்களில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிப்பார். சிலர் துறவிபோல வாழ்வார்கள்.

செல்: 98401 11534

bala170323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe