செவ்வாய்போல பலன்தருவார் கேது என்பதால், "குஜவத் கேது' என்கிறது சாஸ்திரம். செவ்வாயால் ராஜயோகம் பெறும் லக்னங்கள் மீனம், தனுசு, சிம்மம், கடகம். இவற்றில் அமரும் கேது, வேறு சுபகிரக சம்பந்தம் பெற கெடுபலன் தருவதில்லை- தனது தசை, புக்தியில். 2, 5, 8, 7-ல் அமர்ந்தபோதும் கேது கல்வி, கல்யாணம், கர்ப்பம் ஆகியவகையில் தடை, தாமதம் அனுபவிக்கச் செய்யமாட்டார். சுக்கிரனால் பார்க்கப்பட்ட அல்லது இணைந்த கேது, துலா ராசிமுதல் மீன ராசிவரை நின்றபோதும் சுபப்பலனை விருத்திசெய்ய கடமைப்பட்டவரே.

hh

உங்கள் ராஜயோக ஜாதகப்படி 11- 10, 6- 2-ஆம் வீட்டிற்கு கேதுவின் பார்வை, சேர்க்கையானது மருந்து, மருத்துவத் துறைகளில் வெற்றி சேர்க்கும். 11-ல் சூரியன், கேது சேர்ந்திருந்தால் நடுவயதிற்குமேல் வாழ்க்கை பிரகாசிக்கும். சுக வாழ்வுதான் அந்திமம்வரை!

பலமான சுக்கிரனுடன் கேது கூடி 7-ஆம் வீட்டில் நின்ற ஜாதகர்களுக்கு பணக்கார வீட்டில் துணை அமையும். குறிப்பாக விருச்சிகம், கன்னி, மேஷ லக்ன அன்பர் களில் பலருக்கும் இந்த 7-ஆமிடத்துக் கேது, சுக்கிரன் கூட்டு, மாடிவீட்டு மாப்பிள்ளை- மகாலட்சுமியாக உயர்த்தியுள்ளது.

3, 6, 11-ல் கேது நின்று, அவர் நின்ற வீட்டதிபதியும் ஆட்சி, உச்சமானால் நல்லவரே கேது. 10-ல் கேதுவுடன் செவ்வாய் சேர நிர்வாகத் திறமைகளால் உயர்பதவி அந்தஸ்து கிடைக்கும். அரசுவழி செல்வாக்கும் மிகும்.

கேது தனது சுயவர்க்கப் பரலில் 5 முதல் 8 வரை பெற நல்லவராகவே பலன்செய்வார். லக்னத் தில் கேது, புதன் சேர்ந்தால் "மிக கெட்டிகாரர்; அதி புத்திசாலி' என பெயரெடுப்பீர்கள்.

2-ல் கேது, சுக்கிரன் இணைந்தால் இரட்டைவால் குருவிதான். இருதார யோகம் சிலருக்கு கேதுவின் உபயம். 10-ல் கேது, சுக்கிரனுடன் சேர்ந்தால் ஜாதகரை நிதிநிறுவனம், சிட்பண்ட் நடத்தி பெரும்பணம் சம்பாதிக்கச் செய்வார்.

11-ல் கேதுவுடன் சுக்கிரன் இணைய, கெமிக்கல், மருத்துவம், உயிர்காக்கும் உபகரணங்கள் தொழிலில் பிரகாசிக்க முடிகிறது. 11-ல் அமர்ந்த கேதுவும் சனியும் ஒருவரை நாடறிந்த சந்நியாசி- துறவியாக புகழ்பெறச் செய்யும். கேதுவால் பெருமைமிகு வாழ்வடைவார்கள்.

"கேது மதி மயக்கும் மாயவலை' என்பது அனுபவ ஜோதிடம். 9-ல் கேது, சுக்கிரன் கூட, பல கலைகளில் பாண்டித்தியம் பெறமுடியும் உங்களால்! நாடி விதிப்படி ஜாதக சுக்கிரன்மீது கோட்சார கேது உலவிடும் காலங்களில் ஆடம்பரம், பகட்டு மிகும்.

முடிவுரையாக, ஒருவரது கேது கோட்சாரத்தி லும் 11, 6, 3-ல் தொடர்பாகி, நடப்பில் கேது தசையில் குரு புக்தியும் நடக்கும் காலம் 11 மாதம், 6 நாட்கள் கோடீசுவர யோகம் பலருக்கும் தருகிறார்.

கேது தசையில் புதன் புக்திக் காலமாகிய 11 மாதம், 27 நாட்களில் கல்வி, அறிவு, ஞானம் வெகுவாகவே சிறக்கும். நல்லவர் கேதுவுடன் 6-ல் இணைந்த சுக்கிரன் வாசகர்களை ஜேம்ஸ் பாண்டுகளாக்கும். (ரகசிய உறவுகள் இருக்கும்.)

மனம் விரும்பியபடி வாழ்க்கையானது தேனில் குழைத்த பலாதான்! தடை, தாமத நாயகனானபோதும், சில நிலைகளில் கருமேகங்களாக மறைத்த போதும் ஞானவான் கேது நல்லவரே!

செல்: 83000 97766