ஜோதிடத்தில் 12 ராசிக் கட்டங் களும், 9 கிரகங்களும் உள்ளன. இதனைக் கொண்டுதான் மனிதர்களின் வாழ்நாள் பலனை, ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
ஒரு கிரகம் ஒரே ராசியில் நின்றிருந்தா லும், அது ஒரே மாதிரியான பலன்களை வழங்க இயலாது. அந்த கிரகம், ஒரே ராசியில், ஒருவருக்கு ஒரு நட்சத்திரத்தி லும், மற்றவருக்கு அதே ராசியில்- ஆனால் வேறொரு நட்சத்திரத்திலும் நிற்கும்.
அதனால் பலன்கள் கண்டிப்பாக மாறுபடும்.
கேது
இவரை ஞானகாரகன் என்பர். ஒரு மனிதனுக்கு எப்போது பற்றற்ற நிலை வரும்? வாழ்வில் விரக்தியும், வேதனையும் வரும்போது வெறுப்பு வரும். இந்த வெறுப்பு, "என்னடா வாழ்க்கையிது' எனும் மனச் சலிப்பு தரும். இந்த சலிப்பு, அவரை மடம் நோக்கி நகர்த்தும். கேதுவை சந்நியாசி கிரகம் என்பர். இதற்கு உண்மையான காரணம், வாழ்வியலின் உண்மைத் தன்மையை உணரச் செய்வதால் இருக்கும். கேது ஒரு சந்தேக கிரகம். இவர் 27 நட்சத்திரங்களில் நிற்பதால் உண்டாகும் பலன்களைக் காணலாம். ஒருவர் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருந்தாலும், நட்சத்திரத்தில் கேது நின்ற பலன்களில் மாறுபாடு கிடையாது.
1. அஸ்வினி
மேஷ ராசியின் முதல் நட்சத்திரமான அஸ்வினியில் கேது அமர்ந்திருந்தால், அங்கு கேது+கேது எனும் அமைப்பு உருவாகும். ஏனெனில் அஸ்வினி நட்சத்திரத்தின் சாரநாதர் கேது ஆவார். இஷ்ட தெய்வம்: இவர்கள் அனேகமாக விநாயகரை மிக விரும்பி வணங்குவர்.
குணம்: கேது கிரகம் அதிக சந்தேக குணம் கொண்டது. அதுவும் கேதுவை சாரநாதராகக் கொண்ட அஸ்வினியில் நிற்கும்போது, மிக அழுத்தமான, ஆழ்ந்த, வெளிக்காட்டாத சந்தேக குணம் இருக்கும்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: அஸ்வினி நட்சத்திரத்தில் கேது நின்றால், சுபத்தன்மை பெற்றால் மருத்துவராகும் வாய்ப்புண்டு. இவர்களுக்கு இயற்கையாகவே மருந்து தயாரிப்பது, கஷாயம் தயாரிப்பது, நோயை நிவர்த்திசெய்வது ஆகியவற்றில் வெகு ஆர்வம் இருக்கும். இதிலுள்ள ஆண்கள் மருந்துக்கடை நட
ஜோதிடத்தில் 12 ராசிக் கட்டங் களும், 9 கிரகங்களும் உள்ளன. இதனைக் கொண்டுதான் மனிதர்களின் வாழ்நாள் பலனை, ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
ஒரு கிரகம் ஒரே ராசியில் நின்றிருந்தா லும், அது ஒரே மாதிரியான பலன்களை வழங்க இயலாது. அந்த கிரகம், ஒரே ராசியில், ஒருவருக்கு ஒரு நட்சத்திரத்தி லும், மற்றவருக்கு அதே ராசியில்- ஆனால் வேறொரு நட்சத்திரத்திலும் நிற்கும்.
அதனால் பலன்கள் கண்டிப்பாக மாறுபடும்.
கேது
இவரை ஞானகாரகன் என்பர். ஒரு மனிதனுக்கு எப்போது பற்றற்ற நிலை வரும்? வாழ்வில் விரக்தியும், வேதனையும் வரும்போது வெறுப்பு வரும். இந்த வெறுப்பு, "என்னடா வாழ்க்கையிது' எனும் மனச் சலிப்பு தரும். இந்த சலிப்பு, அவரை மடம் நோக்கி நகர்த்தும். கேதுவை சந்நியாசி கிரகம் என்பர். இதற்கு உண்மையான காரணம், வாழ்வியலின் உண்மைத் தன்மையை உணரச் செய்வதால் இருக்கும். கேது ஒரு சந்தேக கிரகம். இவர் 27 நட்சத்திரங்களில் நிற்பதால் உண்டாகும் பலன்களைக் காணலாம். ஒருவர் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருந்தாலும், நட்சத்திரத்தில் கேது நின்ற பலன்களில் மாறுபாடு கிடையாது.
1. அஸ்வினி
மேஷ ராசியின் முதல் நட்சத்திரமான அஸ்வினியில் கேது அமர்ந்திருந்தால், அங்கு கேது+கேது எனும் அமைப்பு உருவாகும். ஏனெனில் அஸ்வினி நட்சத்திரத்தின் சாரநாதர் கேது ஆவார். இஷ்ட தெய்வம்: இவர்கள் அனேகமாக விநாயகரை மிக விரும்பி வணங்குவர்.
குணம்: கேது கிரகம் அதிக சந்தேக குணம் கொண்டது. அதுவும் கேதுவை சாரநாதராகக் கொண்ட அஸ்வினியில் நிற்கும்போது, மிக அழுத்தமான, ஆழ்ந்த, வெளிக்காட்டாத சந்தேக குணம் இருக்கும்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: அஸ்வினி நட்சத்திரத்தில் கேது நின்றால், சுபத்தன்மை பெற்றால் மருத்துவராகும் வாய்ப்புண்டு. இவர்களுக்கு இயற்கையாகவே மருந்து தயாரிப்பது, கஷாயம் தயாரிப்பது, நோயை நிவர்த்திசெய்வது ஆகியவற்றில் வெகு ஆர்வம் இருக்கும். இதிலுள்ள ஆண்கள் மருந்துக்கடை நடத்துவதில் முதன்மையாக ஈடுபடுவர். பெண்கள் கை வைத்தியத்தில் சிறந்து விளங்குவர். மேலும் மலை, மலைசார்ந்த தொழில், வேலையில் நல்ல நாட்டம் உடையவர்கள். மலையில் கயிறுகட்டி சாகசம் செய்வர். இராணுவ வீரர், காவல்துறையினர் ஆகியோருக்குப் பயிற்சியளிக்கும் பணியில் இருப்பர். உளவுத்துறையில் ஈடுபாடு கொண்டு, அதுசார்ந்த தொழிலைத் தொடங்குவர்.
விவாகரத்து சம்பந்த வழக்கறிஞராகப் பணிபுரிவர். அல்லது முடி அலங்காரம், முடிதிருத்தும் கலைஞராக பணி இருக்கும். மனையைப் பிரித்து அளவெடுக்கும் தொழில் அமையும். பூமியிலிருந்து வேர்களைப் பிடுங்கியெடுத்து, அதனின்று மருந்து, கேசப் பராமரிப்புத் தைலம், சில குளிர்பானம், வெட்டிவேர் சர்பத் போன்றவை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபாடு கொள்வர். வேளாண்மையில், பழங்காலப் பயிர் விதைபற்றி பெரிய ஞானமுடையவர்கள். இவர்களுக்கு எப்போதும் மனை, நிலம் பற்றிய அச்சமும் சந்தேகமும் ஏற்படும்.
கெடுபலன்கள்: அசுப பலன் பெற்றால் இந்த அமைப்பு ஜாதகர்களுக்கு, எப்போதும் ஒன்றுசேர்த்து செய்யும் செயல்களில் ஆர்வமிராது. ஒன்றைக் கொடுத்தால் ஒன்பதாக வெவ்வே றாக்கி விடுவர். இவர்கள் குடும்பத்திலும், அதன் உறுப்பினர்களிடம் குசும்பு பேசி, சண்டை இழுத்துவிடுவர். இவர்கள் ரியல் எஸ்டேட் வகையில் வேலை செய்தாலும், அங்குள்ளவர்களிடம் மாற்றிமாற்றிப் பேசி குழப்பத்தை உண்டாக்கிவிடுவர். இவர்களை மடத்தில் சேர்த்தாலும், அங்குள்ள சந்நியாசிகளை ரத்தம் வருமளவுக்கு சண்டையிட வைத்துவிடுவர்.
நாடி ஜோதிடம்: கேது தாய்வழிப் பாட்டனையும் குறிப்பார். இந்த அமைப்பு மேஷம் எனும் செவ்வாயின் வீட்டில் உள்ளது. எனவே, இவரது பாட்டன் நிறைய நிலம் கொண்டவராக இருந்திருப்பார். அல்லது பாட்டனுக்கும், இவர்கள் சகோதரனுக்கும் ஆகாது. கேது கயிறைக் குறிப்பார். செவ்வாய் மாங்கல்ய காரகன். எனவே பெண்கள் ஜாதகத்தில் இவ்வமைப்பிருப்பின், இவர்கள் மாங்கல்ய, குடும்ப விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். இதற்கு, கோவிலில் நடக்கும் தெய்வத் திருமணத் தின்போது மாங்கல்யம் மாற்றிக்கொள்ளவும். செவ்வாய் விரதம் நல்லது.
பரிகாரம்: அங்காரக சதுர்த்தி எனும், செவ்வாய்க்கிழமை வரும் சதுர்த்தியன்று விநாயகரை வணங்கவும்.
2. பரணி
பரணி ஒரு சுக்கிர சார நட்சத்திரம். எனவே பரணி நட்சத்திரத்தில் கேது நின்றால், அங்கு கேது+சுக்கிரன் எனும் அமைப்புண் டாகும். சுக்கிரனின் சாரத்தில் கேது நகர்வார்.
இஷ்ட தெய்வம்: துர்க்கையை விரும்பி வணங்குவர்.
குணம்: கேது சற்று அழுக்கான கிரகம். அவர் சாரம் வாங்கிய சுக்கிரன் அழகுக்கான காரக கிரகம். இரு எதிர்மறை கிரக இணைவு.
இதனால், ஜாதகர் அழகு பற்றிய சிந்தனை யின்றி இருப்பார். அழகுணர்வை வெறுப்ப வராகக்கூட இருக்கலாம். ஒரு நாசூக்கு, சுத்தம், தன்மையாகப் பேசுவது என எதுவும் கிடையாது! "சித்தம் போக்கு, சிவம் போக்கு' என இருப்பர்.
சந்தேகம்: இவர் ஆணாக இருந்தால், மனைவிமீதும் பெண்ணாக இருந்தால் கணவன்மீதும் மிக சந்தேகப்படுவர். அதுசரி; இவர்களுக்கு அழகு பற்றிய சிந்தனையே இராது. தம்பதியரில் மற்றவர் சற்று அழகாக ஒப்பனையுடன் இருந்தால், இவர்களுக்கு தன்னிச்சையாக ஒரு சந்தேகம் வரத்தான் செய்யும்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: கேதுவின் சாரநாதர் சுக்கிரன் சுப பலம் பெற்றால் புகைப்படக்கலைஞர், முடி அலங்காரம் செய்வது, விலங்கு மருத்துவம், அழகான தோல் கைப்பை செய்வது, இயற்கை சார்ந்த அழகுப் பொருள் வியாபாரம், ஆறிய உணவுப் பொருள் விற்பனை, கூழ் உணவு, ஐஸ்க்ரீம் விற்பது, முகத்தில் மரு, பரு போன்றவற்றை நீக்கும் மருத்துவம், முடி கொட்டாமலும், வழுக்கை மண்டையில் முடி வளரச் செய்யும் நிபுணராகவும் இருப்பர். இந்த அமைப்புள்ளவர்கள் தன்னை அழகு படுத்திக்கொள்ளமாட்டார்களே தவிர, பிறரை அழகுபடுத்துவதிலும், அவர்களை குற்றமற்ற முகமுடையவர்களாக மாற்றுவதி லும் நிபுணராக இருப்பர். இந்த நல்ல தன்மையும் திறமையும் இவர்களின் தொழிலாகப் பரிமளிக்கும்.
கெடுதல்: மேஷம் எனும் செவ்வாயின் வீட்டில், கேது எனும் அழுத்த குணம் கொண்ட கிரகம் சுக்கிரன் சாரத்தில் அசுப பலம் பெற்று நிற்கும்போது, தம்பதிகளுக்குள் ஒரு இணைவு, ஒற்றுமை, அன்பு, ஆதரவு, காதல் இவை ஒன்றுமே இருக்காது. இது கணவன்- மனைவிக்கிடையே, கேது எனும் கயிறு கட்டுப்பட்டதாக ஆகும். கணவனும் மனைவியும், "பக்கத்தில் வந்தா தொலைச் சுப்புடுவேன்' என மிரட்டிக்கொண்டிருக்கிற மாதிரி ஆகிவிடும். "இதோ, இந்த க்ஷணம், நாங்க பிரிந்து விடுவோம்' என வல்லடியாக தம்பதிகள் நடந்துகொள்வர். இவர்களை ஒரு மாதிரியாகப் பிரித்து, சந்நியாசிபோல் வாழவைத்துவிடுவார் கேதுபகவான். அப்புறம் தான் கேது நிம்மதியாக இருப்பார். சிலருக்கு திருமணம் என்ற பந்தம் ஏற்படாமலேயே போய்விடும்.
நாடி ஜோதிடம்: இதன்படி இவரின் தாத்தாவுக்கும் இவரின் மனைவிக்கும் ஆகவே ஆகாது அல்லது இவரது குடும்ப வாழ்க்கை கும்மியடிக்கும். இவரது அதீத சந்தேகத்தால் மனைவி இவரைப் பிரிந்து போய்விடுவார். சிலசமயம் சில தவறான முடிவுகளை எடுத்துவிடுவார்.
பரிகாரம்: பாம்புடன்கூடிய அம்மனை வணங்கவும். தாலிக்கயிறு தானம் நல்லது. சமய புரம் கருமாரியம்மன் வழிபாடு மேன்மை தரும்.
3. கார்த்திகை
கார்த்திகை என்பது சூரிய சார நட்சத்தி ரம். இந்த நட்சத்திரத்தில் கேது நின்றால் அங்கு கேது+சூரியன் என்ற அமைப்பு உருவாகும். பொதுவாக இந்த அமைப்பு கிரகண வகையைச் சார்ந்தது.
இஷ்ட தெய்வம்: இவர்கள் பெரும்பாலும் காவல்தெய்வம், குலதெய்வங்களை வணங்குவர்.
குணம்: இவர்கள் மனிதர்களோடு, சாமிகளையும் சந்தேகப்படுவர். சிலர் சாமியே இல்லை என சத்தியம் செய்து வாதாடு வர். எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், அவர்கள்மீது சந்தேகப்பட்டு மானா வாரியாகத் திட்டுவர். சிலசமயம் "எங்கப்பன் சரியேயில்லை' என தந்தையையும் சந்தேகப் பட்டியலில் கொண்டுவந்து விடுவர்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: சாரநாதர் சூரியன் சுபமாக இருந்தால், கேது எனும் இருட்டு கிரகம். வெளிச்சமான சூரிய சாரம் எடுத்துச் செல்லும்போது, அங்கு இருளும் ஒளியும் இணைந்தும் மறைந்தும் செல்கிறது. இதனால் இவர்களால் இந்த இரு நிலைகளையும் கையாள இயலும். எனில், இவர்கள் போட்டோ எடுப்பது, எடிட்டிங் செய்வது, திரைப்படம் எடுப்பது, திரைப்படத்தில் கம்ப்யூட்டர்மூலம் வித்தை செய்வது, வெளிச்சமான சூழலை இருட் டாக்குவது, இருட்டுப் பிரதேசத்தை ஒளிப் பிழம்பாக மாற்றுவது, மயக்க மருந்து கொடுப்பது, தீப்பெட்டித் தொழில், தொலைக் காட்சி வேலை, கட்டிகளை அகற்றுவது, வெடிமருந்துகள் செய்வது போன்ற துறைகளில் இருப்பார்கள். சிலர் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருப்பர். சிலர் பிரபலமான மருத்துவராகிவிடுவர்.
கெடுதல்: சாரநாதர் சூரியன் நீசமானால், இவர்களுக்கு எப்போதும் மறைந்து வாழ்வது மிகப் பிரியமானது. மேலும், சாரநாதர் சூரியன் ஆதலால், ஒரு தலைமை குணம் இயல்பாக அமையும். எனவே இவ்வமைப்புள்ளவர்கள் தீவிரவாதத் தலைவர்களாகி விடுவர். மேலும் கஞ்சா கடத்தல், போதை சம்பந்த தொழில் என காவல் துறை தேடும் பட்டியலில் இவர்களின் பெயர் இருக்கும். அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபடுவர்.
நாடி ஜோதிடம்: கேது பிரிவு, பாட்ட னாரைக் குறிப்பார். சாரம் வாங்கிய சூரியன் அரசாங்கம், தந்தையைக் குறிப்பார்.
இடம்கொடுத்த மேஷ ராசி செவ்வாய் கோபத்தைக் குறிப்பார். எனவே, இவ் வமைப்பு ஜாதகர்கள், தங்களது வெகு கோபத் தின்மூலம் தந்தை மற்றும் அரசாங்கத்தின் தண்டனை, பிரிவு, விலகலை சந்திப்பர்.
பரிகாரம்: திருநாகேஸ்வரம் சென்று வழிபடலாம். விநாயகருக்கு, தீபமேற்றி வணங் கவும். விநாயகர் சந்நிதிக்கு பித்தளை விளக்கு வாங்கிக்கொடுக்கலாம். மின்சாரக் கட்டணம் அல்லது ட்யூப் லைட் வாங்கிக்கொடுக்கலாம். கார்த்திகை நட்சத்திரத்தில் கேது இருப்பவர் கள், பழனி போகர் சித்தரை வணங்கவும்.
அடுத்த இதழில்
(ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை)
செல்: 94449 61845