Advertisment

கேதுவும் மோட்சமும்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/ketu-and-moksha-prasanna-astrologer-i-anandhi

பிறவிகளில் மிக உயர்வான பிறவியாகக் கருதப்படுவது மனிதப் பிறவி. மனிதராகப் பிறந்த அனைவரும் பிறவா நிலையை அடைய விரும்புவது இயல்பு. வாழ்க்கையில் மிகமிகக் கொடூரமான கஷ்டத்தை அனுபவிப்பவர்களும், அனைத்துவித உலக இன்பங்களைப் பார்த்தவர்களும் வாழ்நாளின் இறுதியில் மோட்ச நிலையை எய்தவே விரும்புகின்றனர். தர்மத்தை போதிக்கும் அனைத்து மதங்களும் மோட்சமடை யும் மார்க்கத்தை உபதேசித்தாலும், அனைவரும் மோட்சமடைவதில்லை. மறுபிறவி உண்மையா? ஒருவருக்கு மோட்சத்தை வழங்குபவர் கேதுவா போன்றவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Advertisment

மறுபிறவி

உலகில் ஒவ்வொரு நொடியும் விதவிதமான அரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், மனுதர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பு மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோன்று நம்முடைய மறுபிறவிகள் எத்தனையென்பதும் நாம் அறிந்துகொள்ள இயலாதது. இந்து மதத்தைப் பொருத்தவரை ஆன்மா என்பது அழியாதது. மேலும் அது மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கக்கூடியது என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. இந்த செயல் பாடுகள் ஏன் நடைபெறுகின்றன என்பதற்கான கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவை உறுதியாக யாருக்கும் தெரியவில்லை.

Advertisment

கடந்த பிறவியில் ஒருவர் வாழ்ந் திருந்தால், கடந்தகால வாழ்க்கையினை உள்ளுணர்வாக உணர்ந்து அறிந்து கொள்ளலாம் அல்லது எதாவது கடந்தகாலத்தில் வாழ்ந்த நபர்களின் குணாதிசயங்களை ஒருவர் பிரதிபலிக் கலாம். இவையெல்லாம் இந்த பூமியில் ஒருவர் முதன்முறையாகப் பிறக்கவில்லை என்பதைக் கண்டறியும் முறைகள். இதனைக் கடந்து நாமாகவே உணரக்கூடிய சில அறிகுறிகளும் உள்ளன. இதை மேலும் புரியும்படி ஒரு சிறு ஆய்வு செய்வோம்.

மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும் அவரவர் பொருள்மீது பற்றிருப்பது இயல்பு. அதுவும் வீடு, நிலம், தோட்டம், வாகனம், நகை போன்ற அசையும்- அசையா சொத்துகள்மீது ஈர்ப்பு மிகுதியாகவே இருக்கும். அதனால் அவர்களின் ஆயுட்காலத்திற்குப்பின் இதுபோன்ற உடைமைகளை அவர்களுடைய வாரிசு களுக்குப் பகிர்ந்துகொடுப்பார்கள். ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு, ஆழ்மனதில் தங்களது சொத்து சுகங்களை அனுபவிக்க வாரிசுகள் இல்லையென்ற மனத்தாங்கல் இருந்துகொண்டேயிருக்கும். அதனால் அவர்கள் தங்களது ஆயுட்காலத்தில் தங்களது உடைமைகளை பிறருக்கு எளிதில் வழங்க முன்வருவதில்லை. வெகுசிலர் நல்லெண்ணத் துடன் தங்

பிறவிகளில் மிக உயர்வான பிறவியாகக் கருதப்படுவது மனிதப் பிறவி. மனிதராகப் பிறந்த அனைவரும் பிறவா நிலையை அடைய விரும்புவது இயல்பு. வாழ்க்கையில் மிகமிகக் கொடூரமான கஷ்டத்தை அனுபவிப்பவர்களும், அனைத்துவித உலக இன்பங்களைப் பார்த்தவர்களும் வாழ்நாளின் இறுதியில் மோட்ச நிலையை எய்தவே விரும்புகின்றனர். தர்மத்தை போதிக்கும் அனைத்து மதங்களும் மோட்சமடை யும் மார்க்கத்தை உபதேசித்தாலும், அனைவரும் மோட்சமடைவதில்லை. மறுபிறவி உண்மையா? ஒருவருக்கு மோட்சத்தை வழங்குபவர் கேதுவா போன்றவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Advertisment

மறுபிறவி

உலகில் ஒவ்வொரு நொடியும் விதவிதமான அரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், மனுதர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பு மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோன்று நம்முடைய மறுபிறவிகள் எத்தனையென்பதும் நாம் அறிந்துகொள்ள இயலாதது. இந்து மதத்தைப் பொருத்தவரை ஆன்மா என்பது அழியாதது. மேலும் அது மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கக்கூடியது என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. இந்த செயல் பாடுகள் ஏன் நடைபெறுகின்றன என்பதற்கான கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவை உறுதியாக யாருக்கும் தெரியவில்லை.

Advertisment

கடந்த பிறவியில் ஒருவர் வாழ்ந் திருந்தால், கடந்தகால வாழ்க்கையினை உள்ளுணர்வாக உணர்ந்து அறிந்து கொள்ளலாம் அல்லது எதாவது கடந்தகாலத்தில் வாழ்ந்த நபர்களின் குணாதிசயங்களை ஒருவர் பிரதிபலிக் கலாம். இவையெல்லாம் இந்த பூமியில் ஒருவர் முதன்முறையாகப் பிறக்கவில்லை என்பதைக் கண்டறியும் முறைகள். இதனைக் கடந்து நாமாகவே உணரக்கூடிய சில அறிகுறிகளும் உள்ளன. இதை மேலும் புரியும்படி ஒரு சிறு ஆய்வு செய்வோம்.

மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும் அவரவர் பொருள்மீது பற்றிருப்பது இயல்பு. அதுவும் வீடு, நிலம், தோட்டம், வாகனம், நகை போன்ற அசையும்- அசையா சொத்துகள்மீது ஈர்ப்பு மிகுதியாகவே இருக்கும். அதனால் அவர்களின் ஆயுட்காலத்திற்குப்பின் இதுபோன்ற உடைமைகளை அவர்களுடைய வாரிசு களுக்குப் பகிர்ந்துகொடுப்பார்கள். ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு, ஆழ்மனதில் தங்களது சொத்து சுகங்களை அனுபவிக்க வாரிசுகள் இல்லையென்ற மனத்தாங்கல் இருந்துகொண்டேயிருக்கும். அதனால் அவர்கள் தங்களது ஆயுட்காலத்தில் தங்களது உடைமைகளை பிறருக்கு எளிதில் வழங்க முன்வருவதில்லை. வெகுசிலர் நல்லெண்ணத் துடன் தங்கள் கடைசி காலத்திற்குள் தங்கள் சொத்துகள் யாரைச்சென்று அடைய வேண்டுமென்று உயிலெழுதிவிடுவார்கள்.

பொதுவாக சொத்துகள்மேல் அதிக பற்றுள்ளவர்களின் ஆன்மா எளிதில் உடலை விட்டுப் பிரிவதில்லை. சிலரின் ஆன்மா உடலைவிட்டு வெளியேற முடியாமல் மரணப்படுக்கையில் அவஸ்தையை அனுபவிக்க இதுவே மூலகாரணமாகும்.

அல்லது சிலருக்கு நிறைவேறாத ஆசையால் உயிர் பிரிய மிகவும் சிரமப்படுகிறது. மேலும் அவர்கள் இறந்தபிறகும் அவர்களின் ஆன்மா அந்த சொத்துகள் உள்ள இடத்தில் தான் வாழும். தாங்கள் உபயோகித்த பொருட் களை அவர்களுக்குப் பிடிக்காதவர்கள் பயன்படுத்தினால் மன வேதனையால் அவர்களை சபிப்பார்கள். இதிலிருந்து புரிந்துகொள்வது என்னவென்றால், விருப்ப மில்லாத ஒருவரின் பொருள் பயன்படுத்து பவர்களுக்கு அவஸ்தையைத் தருகிறது. சில குடும்பங்களில் மூன்று தலைமுறைக்கு மேல் விற்கவோ அனுபவிக்கவோ முடியாத- வாரிசில்லாத சொத்துகள் இருக்கும். அல்லது அதன்மீது யார் உரிமை கொண்டாடுவதென்ற பிரச்சினையில் வழக்கு நடக்கும்.

பல குடும்பங்களில் இரண்டு மூன்று தலைமுறையாக வாரிசில்லாத சொத்தை உருட்டிக்கொண்டிருப்பார்கள். நான்காவது தலைமுறையில் தீடீரென அந்த சொத்து தொடர்பாக ஒரு நல்ல முடிவு வரும். இது எப்படி சாத்தியமாகியதென்று ஆய்வுசெய்து பார்த்தால், வாரிசு இல்லாமல் இறந்தவருக்கும், சொத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தவருக்கும் உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை என எதாவ தொன்றை நிச்சயம் பார்க்கமுடியும். முன் ஜென்மம், நிகழ் ஜென்மத்திற்குமுள்ள உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை ஆகியவற்றை ருசுப்படுத்தும் விதமாக பல திரைப்படங்கள் வந்துகொண்டிருப்பதே இதற்கு சாட்சி. பல குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களே திரைப்படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. அதனால்தான் நமது முன்னோர்கள்,

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர் களின் பெயர்களைத் தம் வாரிசுகளுக்கு வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற வாரிசில்லாதவர்களின் சொத்துப் பங்குக்கு பங்காளிகள், பல வருடங்களாக அன்னம், தண்ணீர் புழங்காமல்- நல்லது கெட்டதில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இதை நமது தாத்தா- பாட்டிகள், ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த வாரிசில்லாத சொத்துகள்மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசுவதை நாம் கேள்விபட்டிருப்போம்.

ராகு என்பது பாட்டன், முப்பாட்டன். ஜோதிடத்திலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை யுள்ள யாரும் இந்தக் கருத்தை மறுக்க முடியாது. இதை பல குடும்பத்தினர் உணர்ந்தும் இருப்பர். இவ்வளவு ஏன்- ஒரு குடும்பத்தில் இறந்த நபரின் நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்து, இறந்தவர்களின் செயல்பாட்டை நினைவூட்டுவது இன்றும் நாம் கண்டுகொண்டிருக்கும் பிரபஞ்ச அதிசயம். அதனால் மறுபிறவி உண்டென்ற கூற்று உண்மையாகிறது.

கேதுவின் செயல்பாடுகள்

கேது ஒரு நிழல் கிரகம். பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டவர் கேது. உருவமில்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால், உடலில் சூட்சுமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்தியாகும். குண்டலினி சக்தியைப் பாம்பாக உருவகப்படுத்தலாம். ஒரு பாம்பு அசையாமலிருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது ஓடும் போதுதான் அது இருப்பதை அறிய முடியும்.

குண்டலினியும் பாம்பைப்போன்று மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதி யில் அமைதியாய் இருக்கும். அது மௌனமாக இருந் தால் அதன்சக்தி நமக் குத் தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிடமுடியாத பேராற் றலும் மகத்துவமும் புரியும். அதேபோல் லௌகீகம் எனும் மாயையில் சிக்கி அலை பாயும் ஆன்மாவை ஆழ்நிலை தியானம், ஆன்மிக நாட்டத்தின்மூலம் பக்குவப்படுத்தி அடக்கி முக்தியடையச் செய்பவர் கேது.

உறவுகளில் தாய்வழிப் பாட்டன்- பாட்டி களைக் குறிக்கும் கேதுவுக்கு சொந்த வீடு கிடையாததால், தான் நிற்கும் வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுக்கும். ஒருவரின் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறாரோ, அந்த கிரக காரக உறவு களுக்கு, ஜாதகர் சென்ற ஜென்மத்தில் நிறைவேற்றத் தவறிய கடமைகள் இருக்கும்.

அந்த பாவக கிரக காரகத்துவங்கள்மூலம் நிறைவேற்றத் தவறிய கடமைகளை, நிறைவேற்றமுடியாத கடமைகளை முடிக்க கேது உதவுவார். இவர் நின்ற பாவக காரக உறவுகளுக்கு உழைத்தால், உதவி செய்தால் பலனை எதிர்பார்க்கக் கூடாது.

மனிதன் தன் வாழ்நாள் கடமைகளை நிறைவேற்றும் மனப்பக்குவத்தைத் தந்து, முக்தியை ஆன்மா நாடும்வரை அனுபவப் பாடத்தைக் கற்றுக்கொடுத்து ஆன்மாவின் முக்திக்கு உதவுபவர் கேது.

ஜனன ஜாதகத்தில் கேது பலமாக இருந்தால் மெலிந்த, குள்ளமான தோற்றத் துடன், மூளைபலம் மிக்கவர்களாக இருப் பார்கள். எப்போதும் எச்சரிக்கையாக இருப் பதுடன், எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள். கேது சுபத்தன்மை பெற்றால் ஞானம், மோட்சம், புண்ணிய தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம் கிட்டும்.

ஜனன ஜாதகத்தில் கேது பலமிழந்தால் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடங்கல், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகிய பலன்கள் மிகும்.

கேது செம்பாம்பு. பௌர்ணமியன்று கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும். இவர் யாகத்திற்கு, ஆன்மிகத்திற்குக் காரணமான கிரகமென்பதால் பௌர்ணமி யன்று சிறப்புப் பிரார்த்தனைகளும், யாகங் களும் நடத்துகிறார்கள். மூலிகைச் செடிகளைப் பறிக்கிறார்கள். தானதர்மங்கள் நடத்தப்படுகின்றன.

ff

கேதுதான் முக்திக்கு அதிபதி. உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் ஒருவருக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை நிர்ணயிப்பவர் இவர்.

மோட்சம்

முக்தி அல்லது மோட்சமடைதல் என்பது மனித வாழ்க்கையின் வரப்பிரசாத மான நிலை. மோட்சம் எனும் முக்தியடை யும் பாக்கியம் எனக்குண்டா என்னும் கேள்வி எழாத மனிதப் பிறவியே இல்லை யென சொல்லலாம். ஜோதிடத்தில் நம்பிக்கை யுள்ளவர்கள் ஜோதிடரிடம் இந்த கேள்வியை நிச்சயம் கேட்பார்கள்.

மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு. ஏழாவது பிறவிதான் மோட்சப் பிறவி என்று பொதுவாகக் கூறுவதுண்டு. நாம் வாழும் இந்தப் பிறவிதான் ஏழாவது பிறவியென்று எப்படி அறிந்துகொள்வது? ஜோதிட சாஸ்திரம் எனும் தெய்வீகக் கலை யின்மூலம் மனித வாழ்வில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட எதிர்காலத்தை முன் கூட்டியே அறியலாம். ஒரு மனிதனுடைய ஜனனம்முதல் மரணம்வரை அனைத்தையும் ஜோதிடத்தில் ஓரளவு தெரிந்துகொள்ளலாம். ஆனால் நம்முடைய இறப்புக்குப்பின் நடக்கும் சம்பவங்களை நம்மால் நிரூபிக்க இயலாது. ஆனால் ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளும் நாம் இதையும் நம்பி ஏற்கத்தான் வேண்டும்.

கேது ஞான கிரகம். ராகு போக கிரகம். ஜோதிடத்தில் 12-ஆமிடம் மோட்ச ஸ்தானமாகும். பொதுவாக 12-ஆமிடமான மோட்ச ஸ்தானத்தில் கேது இருந்தால், இந்தப் பிறவியே அவரின் மோட்சப்பிறவியென சட்டென்று கூறிவிடுகின்றனர். ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. லக்னத்தில் சுபகிரகங்கள் இருக்கவேண்டும். அல்லது லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்கவேண்டும். 12-ல் கேது இருந்தாலும், 12-ஆமதிபதி சுப வலுப்பெறவேண்டும். குறிப்பாக சனியின் சேர்க்கை, பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லையெனக் கூறுகிறார்கள்.

இந்த ஜென்மத்தில் ஒருவருக்கு 12-ல் கேது இருந்து அவர் ஏதாவது பாவச் செயல் செய்தாலும் மறுபிறவி ஏற்படாதா என்ற கேள்வி எழும். லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ குரு பார்த்திட, 12-ல் கேது அமர்ந்து, 12-ஆமதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் பிறவா நிலையை அடைவர். அப்படிப்பட்ட ஜாதக அமைப்பை உடையவர்கள் தங்களது கடைசிப் பிறவியில் ஒரு பாவமும் செய்யமாட்டார்கள் என்பது திண்ணம்.

கேதுவும் பன்னிரண்டாமிடமும்

12-ல் கேது உள்ள ஜாதகர் உலகிலுள்ள அனைத்து துக்கங்களையும் அனுபவிப்பவர். இளமைக் காலத்திற்குமேல் பெரும் பணம் சம்பாதிப்பார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இது கடைசிப் பிறவி; மோட்சத்தையடைவார்; மறுபிறவி இல்லையென்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 12-ல் கேது இருந்தால், 5, 9-ஆமதிபதியுடன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தேவதையை உபாசனை செய்தால் நிச்சயம் சித்தியும் மோட்சமும் கிட்டும். நான்கு வேதங்கள் சொல்லும் சித்தியும், முக்தியும் யோகம், ஞானம், மோட்சம் ஆகியவற்றில் அடங்கிவிடுகின்றன. மனிதனை லௌகீக வாழ்வில் ஈடுபடச் செய்வது ராகு என்றால், மோட்சத்தைத் தருவது கேதுதானே.

பெரும்பாலான (மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்) சான்றோர்கள் முக்தியடைந்தது:

சனி தசையில் ராகு- கேது புக்திகள்.

ராகு தசையில் சனி, கேது புக்திகள்.

கேது தசையில் ராகு, சனி புக்திகள்.

ஆக, 12-ஆமிடம் அளிக்கும் மோட்சத் திற்கு கேது 12-ஆம் பாவகத்துடன் அல்லது 12-ஆமதிபதியுடன் சம்பந்தப்படுவது முக்கியம்.

சர்வார்த்த சிந்தாமணியில் 12-ஆம் பாவத்தைப் பற்றிச் சொல்லும்பொழுது, இறந்தபின் 12-ஆமிடம் அளிக்கும் லோகங்களும் விளக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன் ஆகிய இருவரில் யார் பலமுள்ளவரோ அவரின் திரிகோணாதிபதியைக்கொண்டு மறுமையில் அடையும் லோகத்தை அறியவேண்டும் என்று சொல்கிறது.

திரிகோணாதிபதி

சூரியன்- பசு, பட்சி பிறவி.

சந்திரன்- பித்ரு லோகம்.

செவ்வாய்- நரக லோகம்.

புதன்- பசு, பட்சி பிறவி.

குரு- தேவலோகம்.

சுக்கிரன்- பித்ரு லோகம்.

சனி- நரக லோகம்.

எனவே மோட்சத்தை விரும்புபவர்கள் மோட்சத்திற்கு அதிபதியான கேதுவை வழிபட நற்கதியுண்டாகும்.

செல்: 98652 20406

bala100223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe