கேதுவும் திருமண வாழ்வும்!

/idhalgal/balajothidam/ketu-and-married-life

சில குடும்பங்களில் கணவன்- மனைவி யிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அது பிரிவினை வரைக்கும் சென்றுவிடுகிறது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பதற்கு அவரவர் ஜாதகம் சிறப்பாக இருப்பது நல்லது. நல்ல தசாபுக்திகள் நடைபெறும்பொழுது எந்தவித பிரச்சினையு மின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.

குடும்ப வாழ்வில் ஒற்றுமைக் குறைவுக்கு ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய பங்குவகிப்பது சர்ப்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது பகவான் ஆவார்.

எந்தவொரு ஜாதகத்தில் திருமண வாழ்வுக்குத் தொடர்புடைய ஸ்தானங்களில் கேது அமையப்பெற்றா லும், திருமணத்திற்குப்பிறகு வரக்கூடிய தசாபுக்தி கேது தொடர்புடையதாக இருந்தாலும், கேதுவின் நட்சத்திர மான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றாலும் குடும்ப ஒற்றுமைக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில், ஆண் ஜாதகமென்றால் 7-ல் கேது அமையப்பெற்றாலும், ஏழாமதி பதி கேது நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப்பெற்றாலும், ஆண் களுக்கு களத்திர காரகனான சுக்கிரன், கேதுவின் நட்சத்திரத்தில்

சில குடும்பங்களில் கணவன்- மனைவி யிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அது பிரிவினை வரைக்கும் சென்றுவிடுகிறது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பதற்கு அவரவர் ஜாதகம் சிறப்பாக இருப்பது நல்லது. நல்ல தசாபுக்திகள் நடைபெறும்பொழுது எந்தவித பிரச்சினையு மின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.

குடும்ப வாழ்வில் ஒற்றுமைக் குறைவுக்கு ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய பங்குவகிப்பது சர்ப்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது பகவான் ஆவார்.

எந்தவொரு ஜாதகத்தில் திருமண வாழ்வுக்குத் தொடர்புடைய ஸ்தானங்களில் கேது அமையப்பெற்றா லும், திருமணத்திற்குப்பிறகு வரக்கூடிய தசாபுக்தி கேது தொடர்புடையதாக இருந்தாலும், கேதுவின் நட்சத்திர மான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப்பெற்ற கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றாலும் குடும்ப ஒற்றுமைக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில், ஆண் ஜாதகமென்றால் 7-ல் கேது அமையப்பெற்றாலும், ஏழாமதி பதி கேது நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப்பெற்றாலும், ஆண் களுக்கு களத்திர காரகனான சுக்கிரன், கேதுவின் நட்சத்திரத்தில் அமையப்பெற்றா லும்; பெண்ணென்றால் ஏழாமதிபதி அல்லது பெண்களுக்கு களத்திர காரகனான செவ்வாய், கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும் அவர்கள் இல்லற வாழ்வில் ஒரு பிடிமானமில்லாமல் இருப் பார்கள்.

குறிப்பாக திருமணத் துக்குப்பிறகு கேது தொடர்பு டைய தசை, புக்தி நடைபெறும் பொழுது ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். சில இடங்களில் பிரிவினை வரைக்கும் செல்லும் நிலை உண்டாகிறது. ஒருவருக்குத் திருமணத்திற்குப்பிறகு 2, 7-ல் அமையப் பெற்ற கேது தசை நடைபெற்றாலும், 7-க்கு அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்று அதன் தசை, புக்தி நடைபெற்றாலும், அக்காலத்தில் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இருக்காது. இதன்காரணமாக கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுண்டாகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்பொழுது வரன் ஜாதகத்திலும் கேது ஆதிக்கம் இருக்கி றதா என்று பார்த்து முடிவெடுக்கவேண்டும். ஒரு ஆண் கேது நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 7-ல் கேது, ஏழாமதிபதி அல்லது சுக்கிரன் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு பார்க்கக்கூடிய பெண் ஜாதகத்தில் 7-ல் கேதுவோ, ஏழாமதிபதி கேது நட்சத்திரத் திலோ இருந்தாலும், பெண்களுக்கு களத்திர காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய் கேது நட்சத்திரத்தில் இருந்தாலும் இருவருக்குள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

dd

அப்படிப்பட்ட அமைப்பில்லாதவர்களுக்கு, குறிப்பிட்ட அந்த கேதுவின் தசை, புக்தி நடைபெறும் பொழுது இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கணவன்- மனைவி யிடையே தாம்பத்திய ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டு, இதன்காரணமாக வீண் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

பல்வேறு ஜாதகங்களை நேரடியாகப் பார்க்கும்பொழுது, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு என்னும் காரணத்தோடு வரும்பொழுது கணவன் அல்லது மனைவியின் ஜாதகத்தில் யாராவது ஒருவருக்கு கேதுவின் தசை அல்லது புக்தி, கேதுவின் நட்சத்திரத்தில் அமையப்பெற்ற கிரகத்தின் தசை, புக்தி நடைபெறுவதைக் காணமுடிகிறது.

அந்த குறிப்பிட்ட தசை, புக்தி முடிந்தபிறகு அவர்கள் இருவருக்கிடையே இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வருமென பலருக்கு பலன் கூறி அனுப்பியுள்ளேன். அதுபோல் அந்த தசை, புக்தி முடிந்தபிறகு இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார் கள். பொதுவாக ஒருவருக்கு இப்படிப்பட்ட தசாபுக்தி நடைபெற்றால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

சில நேரங்களில் ஒருவர் கூறும் வார்த்தையே ஒரு பெரிய பிரிவினைக்கு வழிவகுத்து விடுகிறது. இல்லற வாழ்வில் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் பண்பும், சகிப்புத்தன்மையும், கௌரவம் பார்க்காமல் அனுசரித்துச் செல்வதும் மிகவும் நல்லது. 20, 30 வருடத்திற்கு முன்பெல்லாம் விட்டுக்கொடுத்துச் செல்லும் பண்பிருந்தது. தற்போது நாளடைவில் அது மிகவும் குறைந்துவிட்டது. ஒருவருக்கொருவர் அனுசரித்துச் சென்றால் பெரிய பிரச்சினைகளைக்கூட தவிர்க்கலாம்.

கேதுவால் ஏற்படும் பாதிப்பைப் பார்க்கும்பொழுது, குறிப்பாக சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு திருமண வயது காலத்தில் கேது தசை நடக்கும். ஒன்று, கேது தசை முடிந்த பிறகு திருமணம் செய்யவேண்டும் அல்லது கேது தசைக்கு இரண்டு மூன்று வருடத்திற்குமுன்பே திருமணம் செய்துவிடவேண்டும். கேது தசை நடைபெறும்பொழுது ஒற்றுமைக் குறைவு ஏற்படுமென்பதால் அந்த நேரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

அதுபோல கேது நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப்பிறகு வரும் காலத்தில் சந்திர தசை நடக்கும். சந்திரன் கேது நட்சத்திரத்தில் இருக்குமென்பதால் சந்திர தசைக் காலத்தில் வீண்குழப்பம், இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாத நிலை, கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் பல இடங்களில் ஏற்படுகிறது. சந்திர தசைக் காலங்களில் பல குடும்பங்களில் பிரிவினை வரைக்கும் செல்லும் நிலையும் உண்டாகிறது. சிலநேரங்களில் இல்லற வாழ்வில் சில இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்துவிட்டால் அதுவொரு மிகப்பெரிய இக்கட்டான அமைப்பாகும். அப்படிப்பட்ட அமைப்புள்ளவர்களுக்கு செவ்வாய் தசை தொடங்கும்வரை திருமணம் செய்யாமல், செவ்வாய் தசை தொடங்கியபிறகு- குறிப்பாக 40 வயதுக்குப்பிறகு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் நிறைய பேர் உள்ளனர்.

ஜோதிடம் என்பது கடல் போன்றதாகும். இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக் குறைவுக்கு கேது மிக முக்கிய பங்குவகிக்கிறது. கேது தசை அல்லது கேது புக்தி நடைபெறும்பொழுது விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. கேதுவின் தசை நடைபெறுபவர்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

bala030223
இதையும் படியுங்கள்
Subscribe