லக்னத்தில், புதனின் கன்னியில் கேது பகவான் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். சரீரத்தில் ஏதாவது காயம் இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றம் கொண்டவர். தைரியசாலியாக இருப்பார். பல ரகசிய செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.
2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் கேது இருந்தால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பாராத சில நஷ்டங்களும் உண்டாகும். ஜாதகர் மிகவும் சாதுரியமாக செயல்படுவார். வெளியே தன்னை கம்பீரமாகக் காட்டிக்கொள்வார்.
3-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் பிரச்சினை இருக்கும். எனினும் அவர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் குரு பகவானின் தனுசு ராசியில் கேது இருந்தால் நல்ல செயல்கள் நடக்கும். தாயாரால் சந்தோஷம் இருக்கும். சொந்தமாக வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடுமையாக உழைப்பார்.
5-ஆம் பாவத்தில் திரிகோணத்தில் கேது பகவான் நண்பர் சனியின் மகர ராசியில் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகளால் மனக்கஷ்டம் இருக்கும். படிப்பில் சில பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகருக்கு கோபகுணம் இருக்கும்.
6-ஆம் பாவத்தில் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாத கருக்கு பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். சண்டை, சச்சரவுகளை அவர் துணிச்சலுடன் சந்திப்பார். அதில் வெற்றியும் பெறுவார். நன்கு பணம் சம்பாதிப்பார்.
7-ஆம் பாவத்தில் குரு பகவானின் மீன ராசியில் கேது இருந்தால் வியாபாரத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு இருக்கும். வர்த்தகத்தில் போட்டி அதிகமாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையான சூழல்களைச் சந்தித்து வெற்றிபெறுவார்.
8-ஆம் பாவத்தில் கேது பகவான் செவ்வாயின் மேஷ ராசியில் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். வயிற்றில் நோய் இருக்கும். பல கஷ்டங்களையும் ஜாதகர் துணிச்சலுடன் சந்தித்து பணம் சம்பாதிப்பார். ஜாதகர் தன் பேச்சைக் குறைக்கவேண்டும்.
9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் அதிர்ஷ்டத்தில் தடை இருக்கும். பல கஷ்டங்கள் உண்டாகும். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு கடுமையாக உழைக்கவேண்டும்.
10-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் சில பிரச்சினைகள் இருக்கும். அரசாங்க விஷயங்களில் சில சிக்கல்கள் உருவாகும். வர்த்தகத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். கடுமையான போட்டி இருக்கும். ஜாதகர் சுமாரான வாழ்க்கையே வாழ்வார்.
11-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது இருந்தால், ஜாதகர் அதிகமாக சிந்திக்கக்கூடியவராக இருப்பார்.
அவருக்கு மனக் கஷ்டம் இருக் கும். நிறைய பணம் சம்பாதிப்பார். சில இழப்புகளும் இருக்கும். மிகவும் துணிச்சலாகவும் கடுமையாகவும் உழைத்துப் பணம் சம்பாதிப்பார்.
12-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும்.
சிந்தனைகள் அதிகமாகத் தோன்றும். மனதில் கஷ்டங்கள் இருக்கும். வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஜாதகர் இருக்கு மிடத்தைவிட்டு வெளியே சென்று, வேலையோ தொழிலோ பார்ப்பார். அதன்மூலம் சந்தோஷ மான சூழல் உண்டாகும்.
செல்: 98401 11534