லக்ன கேந்திரத்தில்... செல்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு உடலில் காயங்கள் ஏற்படும். அவர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கோப குணமிருக்கும். பணியில் இருக்கும்போது சோர்வுண்டாகும். எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டேயிருக்கும்.
2-ஆம் பாதத்தில் குருவின் தனுசு ராசியில் கேது பகவான் இருந்தால், பணம் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். திடீரென பணம் வரும். ஜாதகர் அதிகமாகப் பேசுவார்.
3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையான உழைப்பாளி. அவருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். பணவரவு நன்றாக இருக்
லக்ன கேந்திரத்தில்... செல்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு உடலில் காயங்கள் ஏற்படும். அவர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கோப குணமிருக்கும். பணியில் இருக்கும்போது சோர்வுண்டாகும். எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டேயிருக்கும்.
2-ஆம் பாதத்தில் குருவின் தனுசு ராசியில் கேது பகவான் இருந்தால், பணம் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். திடீரென பணம் வரும். ஜாதகர் அதிகமாகப் பேசுவார்.
3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையான உழைப்பாளி. அவருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.
4-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். பூமி வாங்கும் விஷயத்தில் சிலருக்கு கஷ்டம் ஏற்படும். இருக்குமிடத்தை மாற்றினால் நல்லது
நடக்கும். வீட்டில் எப்போதும் பிரச்சினை இருக்கும்.
5-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால், படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். படிக்கும் காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் தடங்கல் உண்டாகும். ஜாதகர் பிடிவாத குணத் துடன் இருப்பார். பல ரகசிய வேலைகளைச் செய்து பணத்தை சம்பாதிப்பார். தைரியசாலியாக இருப்பார். பயம் என்பதே இருக்காது.
6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் பகைவர் கள் குறைவார்கள். ஜாதகர் பல சிக்கல்களையும் சண்டைகளையும் சந்திப்பார். எதிரிகளைச் சந்திப்பார். ஆனால், பல மறைமுக வேலை களைச் செய்து, அவர் பணத்தை சம்பாதிப்பார்.
7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக் கும் அவருடைய மனைவிக்குமிடையே உறவு சரியாக இருக்காது. இல்வாழ்க்கையில் பல நேரங்களில் கவலை தரக்கூடிய சூழல்கள் உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப் பார். பிடிவாத குணமுண்டு. எனினும், துணிச்ச லாக பிரச்சினைகளை சந்திப்பார். வாழ்க்கை யில் பல போட்டிகளையும் ஜாதகர் சந்திப்பார்.
8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது பகவான் இருந்தால் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும். சில நேரங்களில் ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார். அத னால் எதிரிகள் அதிகமாவார்கள்.
9-ஆம் பாவத்தில், திரி கோணத்தில், சந்திரனின் கடக ராசியில் கேது பகவான் இருந்தால், வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கும். தர்ம காரியங்களைச் செய்யமுடியாத நிலை உண்டாகும். மனதில் கவலை இருக்கும்.
10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். சில நேரங்களில் ஜாதகர் பெரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வார். மன தைரியத்துடன் பல தகிடுதத்த காரியங் களைச் செய்வார்.
அதன்மூலம் சிக்கல் களிலிருந்து வெளியே வந்துவிடுவார்.
11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசி யில் கேது பகவான் இருந் தால் ஜாதகர் நன்கு பணத்தை சம்பாதிப் பார். பெயர், புகழுடன் வாழ்வார். கடுமை யான உழைப்பாளி யாக இருப்பார். தைரிய சாலியாகவும் விளங்கு வார். எப்போதும் பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப் பார்.
12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் கேது பகவான் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் சாதுரியமாகத் தன் வேலைகளை முடிப்பார். கடுமையாக உழைப்பவராக இருப்பார். சிலர் மறைமுக காரியங்கள் பலவற்றில் ஈடுபடுவார்கள். ஜாதகர் வெளித் தொடர்புகளின்மூலம் பணத்தை சம்பாதிப்பார்.
செல்: 98401 11534