Advertisment

கும்ப லக்னத்திற்கு 12 பாவங்களில் கேது! - மகேஷ்வர்மா

/idhalgal/balajothidam/ketu-among-12-sins-aquarius-maheshwarma

கேந்திர ஸ்தானத்தில், லக்னத் தில் சனியின் கும்ப ராசியில் கேது இருந்தால், உடலில் சில காயங்கள் உண்டாகும். அதன் அடையாளங்கள் இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத் தைக் கொண்டிருப்பார். தைரிய சாலியாக இருப்பார். பல ரகசிய செயல் களைச் செய்து, பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைப்பார்.

Advertisment

dd

2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது இருந்தால் சில நேரங்களில் பணக் கஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் வீண் சண்டை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். நேர்மையாக செயல்படுவார். அதில் சிறிய அளவில் வெற்றி கிடைக்கும். அதன்மூலம் பணத்தை சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது இரு

கேந்திர ஸ்தானத்தில், லக்னத் தில் சனியின் கும்ப ராசியில் கேது இருந்தால், உடலில் சில காயங்கள் உண்டாகும். அதன் அடையாளங்கள் இருக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத் தைக் கொண்டிருப்பார். தைரிய சாலியாக இருப்பார். பல ரகசிய செயல் களைச் செய்து, பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைப்பார்.

Advertisment

dd

2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது இருந்தால் சில நேரங்களில் பணக் கஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் வீண் சண்டை இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். நேர்மையாக செயல்படுவார். அதில் சிறிய அளவில் வெற்றி கிடைக்கும். அதன்மூலம் பணத்தை சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். பல ரகசிய வேலைகளைச் செய்து, துணிச்சலாக செயல்பட்டு பணத்தை ஈட்டுவார். அதன் மூலம் பெயர், புகழ் கிடைக்கும்.

4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது இருந்தால் ஜாதகரின் தாய்க்கு பல கஷ்டங்கள் இருக்கும். தாயாரால் பல பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தன் சொந்த ஊரிலிருந்து வெளியே பணி நிமித்தமாக இருக்க வேண்டியதிருக்கும். பல ரகசிய வேலைகளைச் செய்து அவர் பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைத்து வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவார். பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்வார்.

5-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது இருந்தால் படிப்பில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நிதானத்தை இழந்து பேசுவார். எப்போதும் சிந்தனையிலேயே இருப்பார். மனதில் அமைதி இருக்காது.

6-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் கேது இருந்தால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். மனதில் அமைதி இருக்காது. எனினும், தன் பகைவர்களை ஜாதகர் வெல்வார். கடுமையாக உழைப்பார். தைரியசாலியாக இருப்பார். தன்னை பெரிய மனிதராக வெளியே காட்டிக்கொள்வார்.

7-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது இருந்தால்,. கணவரால் மனைவிக்கு, மனைவியால் கணவருக்கு மனக்கஷ்டம் இருக்கும். வியாபாரம் செய்யுமிடத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகர் பல சட்ட விரோத செயல்களைத் துணிச்சலாகச் செய்து பணம் சம்பாதிப்பார்.

8-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். பல குறுக்கு வழிகளில் பயணித்து, ஜாதகர் பணத்தைச் சம்பாதிப்பார்.

9-ஆம் பாவத்தில், திரி கோணத்தில், சுக்கிரனின் துலா ராசியில் கேது இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் பல தடங்கல்கள் இருக்கும். பல குறுக்கு வழிகளில் பயணம் செய்து, ஜாதகர் சிறிய வெற்றிகளைப் பெறுவார். சாதுரியமாகப் பேசுவார். தைரிய குணம் இருக்கும். எப்போதும் வெற்றி பெறவேண்டுமென மனதில் நினைத்துக் கொண்டேயிருப்பார்.

10-ஆம் பாவத்தில், கேந்திர ஸ்தானத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது இருந்தால் தந்தையால் பல பிரச்சினைகள் இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்.

11-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது இருந்தால் பண வரவு நன்றாக இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப் பாளியாக இருப்பார். பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற சிந்தனை மனதில் எப்போதும் இருக்கும்.

12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் பல கஷ்டங்கள் இருக்கும். பல போகக்கூடாத பாதைகளில் நடந்து, ஜாதகர் தன் பிழைப்பை நடத்து வார்.

செல்: 98401 11534

Advertisment
bala190523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe