Advertisment

12 பாவங்களில் கேது!

/idhalgal/balajothidam/ketu-12-sins

மேஷ லக்னத்தில் கேது (செவ்வாயின் வீட்டில்) இருந்தால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். மனதில் குழப்பங்கள் இருக்கும். அதனால் பலவகையான சிந்தனைகளும் உண்டாகும். சிலருக்கு உடலில் தழும்புகள் இருக்கும்.

Advertisment

இரண்டாம் பாவத்தில் சுக்கிரனின் வீட்டில் கேது இருந்தால் உடல்நலம் கெடும். மனதில் பிரச்சினைகள் இருக்கும். பணக்கஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் வாத விவாதங்கள் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

Advertisment

ra

3-ஆம் பாவத்தில் கேது தன் நண்பர் புதனின் ராசியில் இருந்தால் ஜாதகர

மேஷ லக்னத்தில் கேது (செவ்வாயின் வீட்டில்) இருந்தால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். மனதில் குழப்பங்கள் இருக்கும். அதனால் பலவகையான சிந்தனைகளும் உண்டாகும். சிலருக்கு உடலில் தழும்புகள் இருக்கும்.

Advertisment

இரண்டாம் பாவத்தில் சுக்கிரனின் வீட்டில் கேது இருந்தால் உடல்நலம் கெடும். மனதில் பிரச்சினைகள் இருக்கும். பணக்கஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் வாத விவாதங்கள் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

Advertisment

ra

3-ஆம் பாவத்தில் கேது தன் நண்பர் புதனின் ராசியில் இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு மந்திர- தந்திரச் செயல் களில் ஈடுபாடு இருக்கும். தன் காரியங்களை ஜாதகர் நல்ல முறையில் முடிப்பார்.

4-ஆம் பாவத்தில் கேது இருந்தால் தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். பூமி, வாகனம் வாங்கும்போது சில பிரச்சினைகள் உண்டாகும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறுசிறு சண்டைகள் நடக்கும்.

5-ஆம் பாவத்தில் கேது இருந்தால் படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. சிலருக்கு இறைவழிபாட்டைக்கூட தாங்கள் நினைப்பதைப்போல செய்ய முடியாது. சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும்.

6-ஆம் பாவத்தில் கேது இருந்தால் ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார்.

ஜாதகருக்கு எப்போதும் வெற்றி தான். தைரியசாலி யாக இருந்தாலும் மனதில் ஏதோ ஒருவகையான பயம் இருந்துகொண்டே யிருக்கும். ஆனால் அதை யாரிடமும் காட்டிக்கொள்ள மாட்டார்.

7-ஆம் பாவத்தில் கேது இருந்தால் திருமண விஷயத்தில் தடை இருக்கும். வர்த்தகத்தில் தடைகள் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகளை மிகவும் அமைதியான மனநிலையுடன் இருந்து தீர்க்கவேண்டும்.

8-ஆம் பாவத்தில் கேது இருந்தால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். சொத்து விஷயத்தில் பிரச்சினை உண்டாகும்.

9-ஆம் பாவத்தில் கேது இருந்தால் தலை யெழுத்து நன்றாக இருக்கும். ஜாதகர் தைரிய மாக காரியங்களைச் செய்வார். தர்மச் செயல்களை சிறப்பாகச் செய்வார். ஜாதகர் சாகசங்களைச் செய்யக்கூடியவராக இருப்பார். பணவசதியுடன் இருப்பார். நல்ல குணத்தைக் கொண்டவர்.

10-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது இருந்தால் தந்தைக்கு சில பிரச்சினைகள் உண்டாகும். அரசாங்க விஷயத்தில் இன்னல் கள் ஏற்படும். வர்த்தகத்தில் சிறுசிறு தடைகள் உண்டாகும். தொழில் நடக்குமிடத்தில் அவ்வப் போது சில பிரச்சினைகள் உண்டாகும்.

11-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது இருந்தால் நல்ல பணவரவு இருக்கும். ஜாதகர் எப்போதும் பணம் சம்பாதிப்பதைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். கோடிகளைப் பற்றியும், மிகப்பெரிய விஷயங்களைப் பற்றியும்தான் அவருடைய பேச்சே இருக்கும்.

12-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித்தொடர்புகளால் சிலருக்கு கவலைகள் உண்டாகும். வெளிநாட்டு வர்த்தகத் தில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தூக்கம் சரியாக வராது.

bala270821
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe