ரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் கேது!

/idhalgal/balajothidam/ketu-12-sins-rishabha-lakshman

க்னத்தில் கேது பகவான், சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பல நேரங்களில் வீணான சிந்தனைகளில் ஈடுபடுவார். அதனால், மனதில் பிரச்சினைகள் உண்டாகும். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார்.

2-ஆம் பாவத்தில் மிதுன ராசியில் கேது இருந்தால், குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். பணவரவில் தடை இருக்கும். பல ரகசிய வேலைகளைச் செய்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.

kethu

3-ஆம் பாவத்தில் கேது சந்திரனின் கடக ராசியில் இருந்தால் ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். மனதில் ஏதோ குறையிருக்கும். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார

க்னத்தில் கேது பகவான், சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பல நேரங்களில் வீணான சிந்தனைகளில் ஈடுபடுவார். அதனால், மனதில் பிரச்சினைகள் உண்டாகும். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார்.

2-ஆம் பாவத்தில் மிதுன ராசியில் கேது இருந்தால், குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். பணவரவில் தடை இருக்கும். பல ரகசிய வேலைகளைச் செய்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.

kethu

3-ஆம் பாவத்தில் கேது சந்திரனின் கடக ராசியில் இருந்தால் ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். மனதில் ஏதோ குறையிருக்கும். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார். பிடிவாதத்துடன் கடுமையாக உழைத்து வெற்றியை ஈட்டுவார்.

4-ஆம் பாவத்தில் கேது சிம்ம ராசியில் இருந்தால், தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும்.

ஜாதகர் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி மறைமுகமாகப் பணம் சம்பாதிப்பார்.

5-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது பகவான் இருந்தால் குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும். படிப்பு விஷயத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். ரகசிய வேலைகள் சிலவற்றைச் செய்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் ரோக ஸ்தானத்தில் சுக்கிரனின் துலா ராசியில் கேது இருந்தால், ஜாதகர் தன் பலம் என்னவென்பதைப் பகைவர்களுக்குக் காட்டுவார். தைரியமாக பல செயல்களையும் செய்வார். பல சிரமங்களைக் கடந்து வெற்றி பெறுவார்.

7-ஆம் பாவத்தில் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்தால் திருமண விஷயத்தில் தடைகள் உண்டாகும். திருமணம் நடந்திருந்தால் மனைவியால் பிரச்சினைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாக ஏற்படும். சிலருக்கு சிறுநீர் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். பல கஷ்டங்களைக் கடந்து, பல மறைமுகச் செயல்களில் ஈடுபட்டு ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.

8-ஆம் பாவத்தில் கேது பகவான், குருவின் தனுசு ராசியில் உச்சமடைகிறார். அதனால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. வாழ்க்கையில் கடுமையான போட்டிகள் இருக்கும். ஆனால் ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார்.

9-ஆம் பாவத்தில் சனி பகவானின் மகர ராசியில் கேது இருந்தால் ஜாதகர் பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கவேண்டும். தர்மச் செயல்களில் குறைந்த ஈடுபாடே இருக்கும். சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது.

10-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. புகழ் கிடைப்பதில் தடைகள் இருக்கும். அரசாங்க விஷயங்களில் இடையூறு உண்டாகும். எனினும் கடுமையாக உழைத்து சுமாரான வெற்றியை ஜாதகர் பெறுவார்.

11-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால் பணவரவில் கடுமையான போட்டி இருக்கும். எனினும், 11-வது பாவத்தில் பாவ கிரகம் இருப்பதால் அவர் லாபத்தைக் கொடுப்பார். ஆனால் பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

12-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் நிறைய செலவுகள் இருக்கும். பல கஷ்டங்களை சந்திக்கவேண்டியதிருக்கும். ஆனால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல தொழில்களைச் செய்வார். சாதுரிய குணம் கொண்டவராக இருப்பார்.

செல்: 98401 11534

bala291021
இதையும் படியுங்கள்
Subscribe