மிதுன லக்னத்தில் கேது தன் நண்பரான புதன் வீட்டில் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றமுள்ளவராக இருப்பார். கடுமையான உழைப்பாளி. தன் செயல்களை முடிப் பதற்காக அதிகமாகப் பயணிப்பார். பெரிய மனிதனாகவேண்டுமென்று ஆசைப்படுவார். மன தைரியம் குறைவாக இருக்கும். புத்திசாலித்தனம் உள்ளவர்.

2-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில், குடும்ப ஸ்தானத் தில் கேது பகவான் இருந்தால் குடும்பத்தில் சில சிக்கல்கள் இருக்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். ஜாதகர் பணம் சம்பாதிப்பதற்காக பல ரகசிய செயல்களைச் செய்வார். எப்போதும் குருட்டு தைரியத் துடன் இருப்பார். கடுமையாக உழைத்தபிறகே வெற்றி கிடைக்கும்.

3-ஆம் பாவத்தில், தைரிய ஸ்தானத்தில் எதிரியான சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால், உடன்பிறப்புகளுடன் உறவு சுமாராக இருக்கும். ஜாதகர் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்.

Advertisment

kethu

4-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் கேது இருந்தால், ஜாதகர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டால்தான் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தாயாரின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். வீடு, மனை வாங்குவதில் சிக்கல் இருக்கும். அதனால் மனதில் கவலை உண்டாகும்.

5-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் கேது இருந்தால் பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியமே இருக்காது. சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் மிகவும் சாதுர்ய குணம் கொண்டவராகவும், மிகுந்த தைரியசாலியாகவும் இருப்பார். பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் திறமை கொண்டவர்.

6-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் பகைவர்கள் குறைவார்கள். ஜாதகர் மிகவும் புத்திசாலித் தனமாக செயல்பட்டு எதிரிகளை வெல்வார். நீதிமன்றம், வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

7-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது பகவான் உச்சமடைகிறார். ஆணாக இருந்தால் சிலருக்கு மனைவியாலும், பெண்ணாக இருந்தால் கணவராலும் பிரச்சினை உண்டாகும். திருமண விஷயத்தில் பல தடைகள் உண்டாகி, பல பரிகாரங்களைச் செய்தபிறகே வெற்றி கிடைக்கும். சிலர் பெண்கள் விஷயத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.

8-ஆம் பாவத்தில், ஆயுள் ஸ்தானத்தில் கேது பகவான் மகர ராசியில் இருந்தால், பலருக்கு விபத்துகள் நடக்க வாய்ப்பிருக் கிறது. சிலருக்கு நோய் பாதிப்பிருக்கும். அடிவயிற்றில் உஷ்ணநோய் இருக்கும். சிலர் "அல்ஸர்' நோயால் அவதிப்படுவார்கள். உணவு செரிமானமாவதில் பிரச்சினை இருக்கும்.

9-ஆம் பாவமான பாக்கிய ஸ்தானத்தில்- தர்ம ஸ்தானத்தில்- சனி பகவானின் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங் களைச் சந்திக்கவேண்டியிருக்கும். கடுமையாக உழைத்து, நிறைய பயணங்களை மேற்கொண்டு பின்னர் அவர் வெற்றிபெறுவார். சில நேரங்களில் பெயருக்கும் புகழுக்கும் குறையுண்டாகும். தர்ம காரியங்களைச் செய்வதில் தடைகள் உண்டாகும்.

10-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது இருந்தால், வியாபாரத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். அரசாங்க விஷயத்தில் பிரச்சினை கள் உண்டாகும்.வாழ்க்கையில் முன்னேற் றம் காண்பதற்காக ஜாதகர் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பல தகிடுதத்தங்களைச் செய்து அவர் வெற்றி பெறுவார். தந்தையுடனான உறவில் சில பிரச்சினைகள் ஏற்படும்.

11-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் பணம் சம்பாதிப்பதற்காக ஜாதகர் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பல பிரச்சினைகள் உண்டானாலும், அவர் மன தைரியத்துடனும் சாகச குணத்துடனும் செயல்பட்டு இறுதியில் வெற்றிகாண்பார்.

12-ஆம் பாவத்தில், விரய ஸ்தானத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் உருவாகும். எனினும் கடவுளின்மீது நம்பிக்கை வைத்து அவற்றை துணிச்சலுடன் சந்திப்பார்.

செல்: 98401 11534