கடக லக்னத்தில், எதிரியான சந்திரனின் ராசியில் கேது பகவான் இருந்தால் உட-ல் அடிக்கடி காயங்கள் உண்டாகும். ஜாதகர் சுமா ரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் சிறிய குறைகள் இருக்கும். புகழுக்காக சிறிது கூட கூச்சமே இல்லாமல் எந்தவழிக்கும் செல்ல ஜாதகர் தயாராக இருப்பார்.
2-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால், ஜாதகருக்கு பலநேரங்களில் பண இழப்பு உண்டாகும். அதனால் கடனாளியா வார். எனினும் பல வழிகளைக் கையாண்டு வெற்றி பெறுவார்.
3-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் புத்திசாலியாகவும் இருப்பார். பல வித்தைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். பல மறைமுக செயல்களைச் செய்வார்.
4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் கேது பகவான் இருந்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பலருக்கு அடிக்கடி இடமாறுதல் உண்டாகும். வீட்டை அடிக்கடி மாற்றுவார்கள். ஜாதகர் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவார்.
5-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும். படிப் பில் தடங்கல் ஏற்படும். ஜாதகர் பல கஷ்டங்களைக் கடந்து வெற்றி பெறுவார்.
6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். பல கஷ்டங்களை மிகவும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்.
7-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது பகவான் இருந்தால் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடிருக்கும். வர்த்தகத்தில் போட்டி இருக்கும். பிறப்புறுப்பில் நோய் ஏற்படும். ஜாதகர் காமம் மிகுந்தவராக இருப்பார்.
8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பல நோய்களின் பாதிப் பிருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும். வயிற்றில் நோய் வரும். எனினும் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சில நேரங்களில் தேவையற்றதைப் பேசுவார்.
9-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுவார். மனதில் பல சிக்கல்கள் இருக்கும். பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது. அதிர்ஷ்டத்தில் தடங்கல்கள் இருக்கும். பலர் வீணாக சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
10-ஆம் பாவத்தில் செவ்வா யின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடி ருக்கும். அரசியல்வாதிகளால் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படும். வர்த்தகத்தில் கடுமை யான போட்டி நிலவும். பல போராட்டங்களுக்குப்பிறகு, வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பணவரவு இருக்கும். ஆனால் அதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பலர் சுயநலவாதிகளாக இருப் பார்கள். தைரியசாலியாகவும் இருப்பார்கள்.
12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்பு காரணமாக வீணான செலவுகள் உண்டாகும். பலர் தேவையற்றதைப் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.
செல்: 98401 11534