ந்த மலைக்கிராமத்தில், இயற்கையின் அழகு பூத்துக்குலுங்கியது. கண்ணைக்கவரும் வண்ணமும் நறுமணமும் நிறைந்த மலர்கள், மரங்களுக்குப் போர்வையாக மாறின. அந்த சொர்க்க பூமியில் மனதைப் பதறவைக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளால் அமைதி குறையத் தொடங்கியது.

அந்த ஊரை ஒட்டியிருந்த சாலையின் கொண்டை ஊசி வளைவு, தினமும் ஒரு துர்மரணத்தைக்காட்டி பயமுறுத்தியது. ஆடு, மாடு மேய்க்கச் சென்ற இளைஞர்கள், அந்தப் பகுதி யில் இறந்துகிடந்தார்கள். அந்த ஊர்த் தலைவரின் கவலையைப் போக்க மந்திரவாதிகளும் சாமக் கோடங்கிகளும் வரவழைக்கப் பட்டார்கள். ஆனாலும் பயனில்லை. கேரளத்து ஜோதிடர் வாராஹி அம்மனைத் துதித்து பிரசன்னத்தைத் தொடங்கினார். பிரசன்ன ஜாதகத்தில், குளிகன், செவ்வாயின் விருச்சிக நவாம்சத்தில் பாதகத்திலி ருந்ததால், வஞ்சிக்கப்பட்டு துர்மரணமடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் ஆவியின் பழிவாங்கும் செயலே இந்தத் தொல்லைகளுக்குக் காரணம் என்றார்.

kerala secret

செவ்வாயும், குளிகனும் கூடிய அம்ச மாகிய பழையனூர் நீலிக்கு கோவில் கட்டி சதய நட்சத்திரத்தில் வழிபாட்டைத் துவங்கினால், தொல்லை நீங்கும் என்று சொல்லி முடித்தார். ஊர்த்தலைவருக்கு, அவருடைய ஊருக்கு அருகிலிருந்த மூங்கில் காட்டில் ஒரு பெண், ஓராண்டிற்குமுன் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிகழ்வு நினைவில் நிழலாடியது. பிரசன்ன ஆரூடத்தின் துல்லியத்தை அறிந்து அதிர்ந்துபோனார். கோவில் கட்டும் பணியை திட்டமிடத் தொடங்கினார்.

பிரிந்த தம்பதி இணைவார்களா?

கேள்வி: என் மகள் (வயது 26) திருமணமாகி, இரண்டு வருடங்களில் தன் கணவரைவிட்டுப் பிரிந்து விட்டார். அவர்கள் மறுபடியும் சேர்ந்து வாழ்வார்களா? அதற்கான பரிகாரம் ஏதேனும் உண்டா?

விஜயலட்சுமி, சேலம்-636014.

ஒரு ஜாதகரின் இன்ப- துன்பங்களுக்கு முன்ஜென்ம வினைப்பயனே காரணம் என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். உலக நிகழ்வுகளாக நாம் காண்பது, வாழ்க்கை என்ற விருட்சத்தின் இலை, பூ, காய், கனி, கிளைகள் மட்டுமேயாகும். மரம் வளர்வதற்கும் நிலைத்து நிற்பதற்கும் காரணமான வேரை வெளித்தோற்றத்தில் காணமுடிவதில்லை. பூர்வஜென்ம வினைப் பயனே வாழ்வின் வேர்ப்பகுதியாகிறது. அந்தவேரின் தன்மையை அறியாது செய்யப்படும் தோஷப் பரிகாரங்கள் வெற்றியைத் தருவதில்லை. கர்மவினையை அறிய பத்தாம் பாவம், சனி, செவ்வாய் கிரகங்களின் நிலைகளையும், அறுபத்து நான்காம் நவாம்சம், இருபத்திரண்டாம் திரேகாணம் போன்றவற்றையும் கொண்டு அறியலாம் என்றா லும், புண்ணிய சஹம், பிருகு பிந்து போன்ற முக்கியமான புள்ளிகளைக்கொண்டு மட்டுமே எளிதில் துல்லியமான பலன் களைக் கூறமுடியும். ராகுவுக்கும், சந்திரனுக் கும் இடைப்பட்ட புள்ளியாக விளங்கும் பிருகு பிந்து எனும் விதிப்புள்ளியைக் கணக்கிடும் முறை பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டது. இன்றும், கேரள ஜோதிடர்களும், வட இந்தியாவிலுள்ள ஜோதிடர்களும் "பிருகு பிந்துவை' ஆராய்ந்தே, பரிகாரங்களை முடிவு செய்கிறார்கள்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

= ஜனன ஜாதகத்தில் கஜகேசரி யோகம் போன்ற விசேஷ யோகங்கள் உள்ளதுபோல் பிரசன்ன ஆரூடத்தில் இதசல யோகம், முதசில யோகம், முசிரிபா யோகம், நக்த யோகம், யாமய யோகம், காம்பூல யோகம் போன்றவற்றைப் பொருத்திப் பார்த்துப் பலன் சொல்லும் முறையே கேரள ஜோதிடத்தின் விசேஷ அணுகு முறையாகும்.

= பிரச்சினைகளுக்குப் பிரசன்னம் பார்த்து, தோஷநிவர்த்திப் பரிகாரங்கள் சொல்லப்படும். பரிகாரம் செய்தபின் அந்தப் பரிகாரம் சரியாக செய்யப் பட்டதா என்பதையும் பரிசீலித்து, குறைகளை நீக்குவதும் கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

= பிரசன்னம் பார்க்கும் நாளின் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து அங்கங்களும், பிரசன்ன லக்னத்திற்கு சாதகமா? பாதகமா என்பது பிரதானமாக ஆராயப்படுகிறது.

= மணமக்களின் ஜாதகங்களில் தோஷமிருந்தாலும், சரியான முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தியிருந்தால் இந்தத் தொல்லை நேர்ந்திருக் காது, = சோழி லக்னத் திற்கு பாதக ஸ்தானமாகிய பதினோராம் பாவத்தில் லக்னாதி பதியும் ராகுவும் அமைவதால், இந்தப் பிரசன்னத் தின் ஜாதகர் கவலையிலும் மனக் குழப்பதிலுமுள்ளது தெளிவாகிறது.

= பொதுவாக, கடக லக்னம் போராட்டமான குடும்ப வாழ்க்கையைச் சுட்டிக் காட்டும்..

= சோழி லக்னத்திற்கு சுகஸ்தானமாகிய நான்கிற்கும், உபஜெய ஸ்தானமாகிய பதினோராம் வீட்டிற்கும் அதிபதியாகிய சுக்கிரன் மறைவு ஸ்தானமாகிய ஆறாமிடத்தில் அமர்வது, கடினமான பிரச்சினையைக் குறிக்கும்.

= சூரியன் ஏழில் நிற்பது, களத்திர தோஷத்தைக் காட்டுகிறது. கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

= ஏழாம் வீட்டில் மாந்தி இருப்பது, பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

= ஏழாம் வீட்டில் குரு நீசமடைந்திருந்தாலும், அவர் பார்வை சோழி லக்னத்தில் பதிவதால் ஓரளவுக்கு நல்லபலனே ஏற்படும் என்பதே ஆறுதலான விஷயம்.

= கிழமையை ஆளும் கிரகமாகிய சனிபகவான் லக்னத்திற்கு ஏழில் ஆட்சியில் இருப்பது, இந்தப் பிரச்சினைக்கு சுபமான முடிவுவரும் என்பதைத் தெரிவிக்கிறது.

= குரு மீன ராசியில் பிரவேசிக்கும் காலத்தில் இந்தப் பிரச்சினையில் நல்ல முடிவு ஏற்படும்.

= பரிகாரங்களைச் செய்தால் திருமண முறிவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்

= செவ்வாய்க்கிழமை மாலை ராகுகாலத்தில் பட்டீஸ்வரம் துர்க்கைக்கு நெய் தீபமேற்றுங்கள்.

= வெள்ளிக்கிழமை ஏழு சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வஸ்திரம், விரலி மஞ்சள், குங்குமம், வளையல் என மங்கலப் பொருட்களை வழங்குங்கள்.

(தொடரும்)

செல்: 63819 58636