Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (46) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-jothidam

ன்று வழக்கம்போல் கிருஷ்ணன் நம்பூதிரியின் வீட்டில் மக்கள் தங்களுடைய கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள காத்திருந்தனர்.

Advertisment

மழை சற்று அதிகமாகவே பெய்து கொண்டிருந்தது, கிருஷ்ணன் நம்பூதிரி இதை கடந்த சந்திர கிரகணத்தைக் கருத்தில்கொண்டு எதிர்பார்த்துதான், வீட்டின் வெளி யில் பெரிய கீற்றுக் கொட்டகை அமைத்து வரும் மக்கள் நனைந்து விடாமலிருக்க ஏற்பாடு செய்தி ருந்தார். அன்று தங்களுடைய மகனின் ஜாதகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு தம்பதி வந்திருந்தனர். அவர்கள் முகம் குழப்பத்துடனும் கலக்கத் துடனும் இருந்தது. நம்பூதிரியிடம் பிரசன்னம் பார்க்க அமர்ந்தவுடன், மாங்கோட்டு காவில் அருளும் அன்னையை வேண்டி சோழிகளை உருட்டினார் நம்பூதிரி.

dd

விருச்சிகத்தில் கேதுவுடன் மாந்தி சேர்ந்து லக்னத்தில் அமர்ந் தது. மேலும் ஐந்தாம் பாவம், பன்னிரண் டாம் பாவம் தொடர்புகள் வந்து சே

ன்று வழக்கம்போல் கிருஷ்ணன் நம்பூதிரியின் வீட்டில் மக்கள் தங்களுடைய கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள காத்திருந்தனர்.

Advertisment

மழை சற்று அதிகமாகவே பெய்து கொண்டிருந்தது, கிருஷ்ணன் நம்பூதிரி இதை கடந்த சந்திர கிரகணத்தைக் கருத்தில்கொண்டு எதிர்பார்த்துதான், வீட்டின் வெளி யில் பெரிய கீற்றுக் கொட்டகை அமைத்து வரும் மக்கள் நனைந்து விடாமலிருக்க ஏற்பாடு செய்தி ருந்தார். அன்று தங்களுடைய மகனின் ஜாதகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு தம்பதி வந்திருந்தனர். அவர்கள் முகம் குழப்பத்துடனும் கலக்கத் துடனும் இருந்தது. நம்பூதிரியிடம் பிரசன்னம் பார்க்க அமர்ந்தவுடன், மாங்கோட்டு காவில் அருளும் அன்னையை வேண்டி சோழிகளை உருட்டினார் நம்பூதிரி.

dd

விருச்சிகத்தில் கேதுவுடன் மாந்தி சேர்ந்து லக்னத்தில் அமர்ந் தது. மேலும் ஐந்தாம் பாவம், பன்னிரண் டாம் பாவம் தொடர்புகள் வந்து சேர்ந்தன. வந்தவர் களின் கலக்கத்திற்குக் காரணத்தைக் கண்டு கொண்டார் நம்பூதிரி. அவர்களின் மகன் இப்போது வேறொரு ஆன்மாவின் பிடியில் உள்ளான் என்றும், அந்த ஆன்மா இவர்களின் குடியிருக்கும் வீட்டில், வீட்டைக் கட்டிக்கொடுத்த ஒரு இளைஞனின் ஆன்மா என்றும், அவனை இலங்கையிலிருந்து அழைத்துவந்து அடிமையாக நடத்திக் கொடுமைப்படுத்தியதில், யாருமற்ற அந்த இளைஞன் அந்த வீட்டின் கட்டட வேலை செய்யும்போதே தூக்கிட்டு இறந்து, முப்பது வருடங்கள் கழித்து அந்த பரம்பரையில் முளைத்த இளந்தளிரைப் பிடித்துத் தன் ஆசைகளைத் தீர்ப்பதாகவும், அவன் அநியாயமாக இறந்ததற்குப் பழிவாங்க வந்திருப்பதாகவும் கூறினார்.

வந்த தம்பதிகள் அவமானத்தால் தலைகுனிந்தனர்.

Advertisment

குழந்தையின் உயிரைக் காக்க வேண்டின், இறந்த ஆன்மாவுக்கு செய்யவேண்டிய அந்திமக் காரியங்களைச் செய்து, பின் மாங்கோட்டு பகவதியிடம் சரணடையச் சொன்னார். ஆனாலும் இதனால் குழந்தை உயிர்காக்கப்படுமேயன்றி, குடும்பத்தின் வளம் அழிந்துவிடுமென்றும், பாவத்தின் பலனை அனுபவிக்கதான் வேண்டுமென்றும் கூறி பிரசன்னத்தை முடித்தார் நம்பூதிரி.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

வர்ணதா லக்னத்தின் அமைப்பைக்கொண்டு ஒருவரின் நிறத்தையும், திரேக்காணத்தின் அமைப்பைக்கொண்டு அவரின் உருவ அமைப்பையும் கணிக்கும் வழிமுறைகள் கேரள ஜோதிடத்தில் மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. சோர பிரசன்னம் என்று கூறப்படும் களவுப் பிரசன்னத்தில் திருடன், திருட்டுகொடுத்த பொருள், அவற்றின் உருவ அமைப்பு மற்றும் வண்ணத்தை அறியவும், விவாகப் பிரசன்னத்தில் வரனின் உருவம், வண்ணம் அறியவும் இந்த லக்னம் பயன்படுத்தபடுகிறது.

ஹோரா லக்னம் மற்றும் ஸ்ரீ லக்னம் ஆகியவற்றின் அமைப் பைக்கொண்டே ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நலனைக் குறிக்கும் ஹோரா லக்னாதி பதி, அவரிலிருந்து இரண்டாம் மற்றும் பதினோ ராம் அதிபதிகளைக்கொண்டே அர்த்த திரிகோணத்தின் ஆதியை ஆராய்வது கேரள ஜோதிடத்தின் மற்றொரு சிறப்பு.

கேள்வி: என் மகள் திருமணம் செய்து கொள்வாளா? (ஜாதகம் கொடுக்கப் பட்டுள்ளது. ரகசியத்தின் பொருட்டு ஊர், பெயர் மறைக்கபட்டுள்ளது.)

* லக்னாதிபதியும் கேதுவும் எட்டாம் பாவத்தில் சேர்வது ஒருவித மனோ மாறுபாடு உள்ளதென்று தெரிகிறது.

* எட்டாம் பாவம் கும்பமாகவும், அதன் அதிபதி நீசமாக இருப்பதும், இவருக்கு வாழ்க்கைத்துணை மரபு மீறியவராக இருப்பார் என்றும், செவ்வாய், ஐந்தாமதிபதி நீசமாக இருப்பது, வாழ்க்கைத்துணை பெண்ணாக இருப்பாள் என்றும், ஓரினச் சேர்க்கைத் திருமணமாக இருப்பதும் தெரிகிறது.

* எனினும் சனிதசை முடியும் காலம், சூரிய புக்தியின் ஆரம்பத்தில் இந்த ஓரினச் சேர்க்கைத் துணையிடமிருந்து பிரிவேற்படும்.

* புதன் தசையின் ஆரம்பத்தில், குரு கோட்சாரத்தில் மீனம் ஏறியவுடன் மரபிற்குட்பட்ட திருமண வாழ்க்கை அமையும்.

* புதன் "ஞாதி காரகன்' என்று ஜைமினிமுறை ஜோதிடத் தில் வருவதால், முந்தைய நட்புகள், வாழ்க்கை முறை அத்தனையும் மாற்றிவிடும் வாய்ப்பைக் கொடுப்பார்.

* அதேபோல் புதன் தசையில் சுவாசக் கோளாறுகள் வந்து வாழ்க்கை முழுக்க தொடரும்.

* குரு தார காரகனாக இருப்பதால், செவ்வாய் மற்றும் சனி இருக்கும் வீடுகளின்மீது நேர்மறை அர்கலம் செலுத்துவதால், வைதீக முறையிலேயே திருமணம் நடக்கும்.

* சனி, செவ்வாய் இங்கு அர்கலம் தருவதால், இரு வீட்டாருக்கிடையே மனஸ்தாபம் வந்து மறையும்.

* ஆரூட லக்னம், ஹோரா லக்னம், ஸ்ரீ லக்னம் ஆகியவை இரண்டு, பதினொன்றாம் இடங்கள் தொடர்புகொள்வதால், இந்த ஜாதகர் மிகவும் பணவசதி படைத்தவராக வாழ்வார்.

* லக்னாதிபதி, குரு இருவரும் பாவச் சக்கரத்தில் சேர்ந்திருப்பதால், பெரிய நோய் எதுவும் ஜாதகரைத் தாக்காது. 74 வருடங்கள், 6 மாதங்கள் வாழ்வார்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala101221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe