பிரசன்னம் பார்க்கவந்த பெரியவரின் பக்தியும், ஆன்மிக ஈடுபாடும் அவரது நெற்றியில் எழுதப்பட்டிருந் தது. தான் பலகாலமாக பூஜை செய்துவந்த ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியின் பிரதிமை காணாமல் போய்விட்டதாகவும், அதை பிரசன்ன ஆரூடத் தின்மூலம் கண்டறிய முடியுமா என்பதுவுமே அவரது மனசங்கடத் தால் எழுந்த கேள்வி.

ஸ்ரீபாலா திரிபுர சுந்தரியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. நஷ்டப் பிரசன்னம் என்ற முறையில் நஷ்டப்பட்ட சொத்து இருக்கும் திசையை சந்திரனைக் கொண்டும், எட்டாம் பாவத்தைக் கொண்டு பொருள் இருக்குமிடத் தையும், ஏழாம் வீட்டைக்கொண்டு திருடியவரையும் கண்டறிந்தார். திருடியவர் அவர் வீட்டின் பணியாள் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டார். திருட்டுப்போனது வெள்ளி சிலை என்பதும், களவாடிய வன் அதை விற்பதற்கு அஞ்சி தன் வீட்டில் வைத்துள்ளான் என்பதை யும் கிருஷ்ணன் நம்பூதிரி புரிந்து கொண்டார். கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்தால் திருடியவன் மனம்மாறி திருடிய பொருளை எடுத்த இடத்திலேயே திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவான் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகார பூஜை செய்ததும், ஜோதிடரின் கணிப்பில் சொன்னதுபோல் சிலை திரும்பக் கிடைத்தது. பிரசன்னம் பார்க்கவந்தவர் அதிசயத்தால் விக்கித்துப்போனார்.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

முற்பிறவியில் நாம் செய்த வினைப்பயனே இந்தப் பிறவியில் இன்ப- துன்பமாக அமைகிறது. செல்வந்தர்கள்- எளியமக்கள் என யாராயினும் அனைவரது வாழ்விலும் அவரவர் தகுதிக்கேற்ப கடன் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஒருசிலருக்கு கடனைத் திரும்ப செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு கடன் முடிவதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ அதன்படிதான் கடனால் அவதிப்படும் வாழ்க்கையும், கடன்படாத வாழ்க்கையும் அமைகிறது. இதேபோல் நோயால் வாழ்க்கை முழுவதும் தொல்லையை அனுபவிக் கும் கர்ம ஜாதகமும் உண்டு. கேந்திர, திரிகோணங்களை ஆராய்ந்து, கர்மவினைகளை அறிந்து பரிகாரங் களைச் செய்தால் மட்டுமே கர்மாவால் வந்த வினையை மடை மாற்றம் செய்யமுடியும். ஒரு ஜாதகத்தை ஆராயும்போது கர்ம ஸ்தானத்தைப் பரிசீ-த்த பின்னரே பலன்களைக் கணிப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

வீண்பழி நீங்குமா?

கேள்வி: நான் என் அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒரு இளம் விதவைப் பெண்ணுக்கு இரக்கப்பட்டு சில உதவிகள் செய்தேன். சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு என்னைப் பற்றி அவதூறு பேசி வருகிறார்கள். அதனால் என் வீட்டிலும் அலுவலகத்திலும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகிவிட்டேன். என்மீதுள்ள அவதூறு நீங்கி இந்த நிலை மாறுவதற்குப் பரிகாரம் உண்டா?

-கோவர்த்தனன், மதுரை.

(ஆரூட எண்-21; திருவாதிரை முதல் பாதம்)

ப் சோழி லக்னம் மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால், இந்த பிரசன்னம் அவதூறினால் ஏற்பட்ட மனக் குழப்பம் பற்றியது என்பதை அறியமுடிகிறது.

ப் சந்திரன் சோழி லக்னத்திற்கு இரண்டில் ஆட்சி பெற்றாலும் சனி பகவானின் பார்வை யால் தோஷமடைகி றது. இதுதவிர சந்திரன் அமர்வதும் சனியின் பூச நட்சத்திரத்தில் என்பது அதிக தீமை தரும்.

ப் சோழி லக்னத் திற்கு எட்டாமிடத்தில் லக்னமும், பாதகாதிபதியும் சனியுடன் கூடுவது- மறைமுக விரோதிகளின் சதி திட்டத்தையும், அதனால் வரும் பாதகத்தையும் குறிக்கிறது.

ப் சோழி லக்னத்திற்கு ஐந்து, பன்னிரண்டாம் வீட்டின் அதிபதி ஐந்தாம் வீட்டில் ஆட்சிபெறுவது, ஒரு பெண்ணின் நட்பால் வந்த தொல்லை என்பதை உறுதிசெய்கிறது. ப் சோழி லக்னம் அமையும் நவாம்சம்- ராகு தசை, குரு புக்தி என்பதால், ஒரு பெண்ணால் அவமானம் ஏற்பட்டது.

ப் எட்டாமிடத்தில் அமரும் சனிபகவான் திருவோண நட்சத்திரத்தில் அமர்வதால், இந்த அவதூறானது உதவிபெற்ற பெண்ணே தீய எண்ணத்தால் உருவாக்கிய வதந்தி என்பதே ரகசியம்.

ப் குருவின் பார்வையும் சந்திரன்மீது பதிவதால், இந்தப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் என்பதே ஆறுதல் தரும் சேதி.

ப் தவறான எண்ணம் கொண்டவர் களுக்கு உதவி செய்தால் தொல்லைகளே வந்துசேரும்.

பரிகாரம்

பௌர்ணமியில் காஞ்சி காமாட்சியம்மனை வழிபட்டால் தொல்லை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636