அறிவின் அழகு முகத்தில் தாண்டவ மாடியது. பிரசன்னம் பார்க்கவந்தவர் அதிகம் படித்தவர் என்றும், உயர்பதவியில் உள்ளவர் என்பதும் புரிந்தது. தன் அண்ணன் வெளிநாடு சென்றதாகவும், சில மாதங்களாக அவரிடமிருந்து எந்த தகவலுமில்லை என்பதையும் தெரிவித்தார். சில நாட்களுக்குமுன் அவர் தன் கனவில் தோன்றி தான் இறந்துவிட்டதாகக் கூறியதையும் தெரிவித்தார். அவர் உயிருடன் உள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளவே பிரசன்னம் பார்க்க வந்ததாக விளக்கினார்.
முல்லக்கல் பகவதியைப் பிரார்த்தனை செய்து பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன சோழி லக்னம் மகரமாக அமைந்து, இரண்டில் மாரகாதிபதி அமர்ந்து எட்டாமிடத்துப் பார்வையால் மாரக தோஷத்தைக் காட்டினார். லக்னம் அமைந்த நவாம்சத்தின் அறுபத்து நான்காவது நவாம்சமும் மரணத்தை உறுதிப்படுத்தியது. பிரசன்னத்தில் சொல்லப்பட்ட உண்மைகளைத் தெரிவித்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. சில நாட்கள் கழித்து, பிரசன்னத் தில் தெரிவிக்கப்பட்டவை சரியானவை என்னும் செய்தி வெளிச்சத்திற்கு வந்தது. பிரசன்னம் கேட்க வந்தவர் வியந்து போனார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு கேந்திரம் மற்றும் திரிகோணங்களின் வ-மையைக் கணக்கிட்டு ஜாதகத்தின் வ-மையைக் காண்பதுபோல், உபஜெய ஸ்தானம் மற்றும் பணபர ஸ்தானம் ஆகியவற்றைக் கொண்டு ஜாதகரின் வெற்றியையும் வாழ்க்கையின் வளத்தையும் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. உபஜெய ஸ்தானம் (லக்னம் முதல் 3, 6, 10, 11) மூன்றாமிடம் தைரியத்தையும், ஆறாமிடம் எதிரிகள், நோய், பகை பற்றியும், பத்தாமிடம் ஒருவரின் கடமை பற்றியும், பதினொன்றாமிடம் ஒருவர் அடையும் லாபத்தினைப் பற்றியும் கூறுகிறது. பணபர ஸ்தானம்.
(லக்னத்திலிருந்து 2, 5, 8, 11) இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் அளவினைச் சொல்கிறது. ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினையால் வரும் தனயோகத்தினைக் குறிக்கும். எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டிக்காட்டுகிறது. பதினொன்றாமிடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் சேமிப்பைக் குறிக்கிறது என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
தொழிலில் தடை நீங்குமா?
கேள்வி: நான் நிதி நிர்வாகம் தொடர்பாக கல்வி பயின்று தனியார் நிறுவனங்களுக்கு நிதி ஆலோசகராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த மூன்று ஆன்டுகளாக என் தொழி-ல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொழிலில் தடை நீங்குமா?
-ஜெயராமன், சென்னை.
(பிரசன்ன ஆரூட எண்- 99; பூரட்டாதி 3-ஆம் பாதம்)
* சோழி லக்னத்திற்கு பத்தாமிடத்தில் கேது தனித்திருப்பது தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவைக் காட்டுகிறது.
* சோழி லக்னத்திற்கு ஐந்தாமிடம் மிதுனமாகி அதில் சுக்கிரன் இருப்பது, ஜாதகர் நிதி ஆலோசகராகத் தொழில் புரிவதை உறுதிப்படுத்துகிறது.
* கும்ப ராசிக்கு பாதகாதிபதியாகிய சுக்கிரன் ஐந்தாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்தமர்வது, அரசாங்கத்தாலும் ஜாதருக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
* மூன்று மற்றும் பத்தாம் அதிபதியாகிய செவ்வாய் ஆறாவது வீட்டில் நீசமடைவது சூழ்நிலையின் தீவிரத்தைக் குறிக்கிறது.
* சோழி லக்னத்தில் குரு இருந்து, பாதுகாப்புக்குரிய இடமாகிய துலாத்தை ஒன்பதாம் பார்வையால் பார்த்தாலும் அது பாதக ஸ்தானமாகிறது.
* சோழி லக்னத்தின் அதிபதியாகிய சனி பன்னிரண்டாமிடத்தில் மறைவதும் பாதகமேயாகும்.
* பரிகாரங்களைச் செய்தால் ஆறு மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்
* செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்யவேண்டும்.
* சனிக்கிழமை காலை (6.00-6.30) சிவன் கோவிலுக்குச் செல்லவேண்டும்.
* வியாழக்கிழமை காலை (8.00-09.00) சிவன் கோவிலில் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு பூஜை செய்யவேண்டும்.
* சிக்கல் சிங்காரவேலரை வணங்குவது நல்லது. கையெழுத்துப்போடும் பேனாவை அங்கு கொடுத்து அருள் பெறுவதால் பிரச்சினைகள் நீங்கும்.
* பூஜையில் கஜேந்திர மோட்சம் படத்தை வைத்து மாதம் ஒருமுறை திருவோண நட்சத்திரத்தில் பூஜை செய்யவேண்டும்.
(தொடரும்)
செல்: 63819 58636