ஆள், படை, அம்பாரி என்று பெரிய கூட்டத்துடன் வந்தவரைப் பார்த்துத் துணுக்குற்றார் கிருஷ்ணன் நம்பூதிரி. வந்தவரின் மோதிரக் கைகள் வணங்கி விலகின. தன்னுடன் வந்தவர்களைத் தவிர்த்துவிட்டு, தன் சோகத்தை ஜோதிடரிடம் இறக்கிவைத்தார். தன் குழந்தைகள் இருவரும் அங்கத்தில் குறை உடையவர்களாய்ப் பிறந்தது, தீராத மனசங்கடத்தைக் கொடுத்துவிட்டது.
அதன் காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். காடம்புழா பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
""சோழி லக்னத்தின் பாதகாதிபதி ஒன்பது, இரண்டு மற்றும் பதினோராமிடத்துடன் தொடர்பு கொண்டி ருப்பதால், தெய்வத்தின் சொத்தை அபகரித் ததால் ஏற்பட்ட தொல்லை இது. ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவாதிபதிகள் இரண்டு, பன்னிரண் டாமிட தொடர்பு கொண்ட தால் தேவ கோபம் ஏற்பட்டுள் ளது'' என்று சொல்லி முடித்தார். பிரசன்னம் கேட்கவந்தவர் வருத்தத்தில் தலை குனிந்தார். தன் தந்தை அது போன்ற தவறைச் செய்ததாகவும், ஆனாலும் அவர் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பதையும் தெரிவித்தார். "வஞ்சிப்பான் வாழ்வான். ஆனால் அவன் மகன் வாழ மாட்டான்' என்பதே பழமொழி. கோவில் சொத்தைத் திருடியவன் குலம் நாசமாகும் என்பதைத் தெரிவித்து, இனிமேலாவது இறைப் பணிசெய்து தீவினையைக் குறைத் துக்கொள்ளுமாறு அறிவுரை கூறி விடை கொடுத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழிப் பிரசன்னத்தில் அமையும் லக்னம் சிரசோதயமா? பிருஷ்டோதயமா? உபயோதயமா என்று ஆராய்ந்து பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் தனி சிறப்பு. சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மிதுனம், கும்பம் சிரசோதய ராசிகளாகும். மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம் பிருஷ்டோதய ராசிகளாகும். மீனம் உபயோதய ராசியா கும். சிரசோதயம் என்றால் தலையில் உதயமாகும் ராசி என்றும்; பிருஷ்டோத யம் என்றால் பின் பக்கத்தில் உதயமாகும் ராசி என்றும்; உப யோதயம் என்றால் இருபுறமும் உதய மாகும் ராசி என்றும் பொருள் கொள்ளலாம். சிரசோதயத்தில் இருக்கக்கூடிய கிரக மானது தசையின் ஆரம்பத்தில் நற்பலனைக் கொடுக்கும். பிருஷ்டோதயத்தில் இருக்கக்கூடிய கிரகம் தனது தசையின் பிற்பகுதியில் நன்மையைக் கொடுக் கும். உபயோதயத்தில் இருக்கக்கூடிய கிரகம் தசையின் நடுவில் நன்மையைக் கொடுக்கும். பிரசன்னத்தில். சிரசோதய ராசிகள் லக்னமாக வந்தால் நன்மையைத்தரும். பிருஷ்டோதய ராசிகள் லக்னமாக வந்தால் தீமையைத் தரும். உபயோதய ராசி லக்னமாக வந்தால் பாதி நன்மையைத் தரும். இவற்றை முழுமையாக ஆராய்வதனால் ரகசியங்களைத் துல்லியமாக அறியலாம்.
ஜாதகர் நேரிடையாக ஒரு காரியத்தினைச் செய்வாரா? அல்லது ஜாதகர் மறைந் திருந்து அதனை நடத்துவாரா? ஜாதகரின் எதிரிகள் நேரிடையாக எதிர்க்கிறார்களா அல்லது மறைமுகமாகவா என்ற உண்மை வெளிப்படும். சில காரியங்கள் ஆரம் பிக்கும்போது வெற்றியைக் கொடுக்கிறமாதிரி இருந்து, பின் தோல்வியைக் கொடுக்கும். வேறுசில காரியங்கள் ஆரம் பிக்கும்போது தோல்வியைக் கொடுக்கிறமாதிரி இருந்து, பின் வெற்றியைக் கொடுக்கும். இதுபோன்று பல கேள்விக் கான ரகசிய பதில்களை பிரசன்ன லக்னம் அமையும் ராசியின் தன்மையைக்கொண்டு கூறலாம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு செய்வினையின் மூலப்பொருள் புதைக் கப்பட்டுள்ள இடத்தை பிரசன்ன ஆரூடத்தின் மூலம் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
* பிரசன்ன லக்னத்திற்கு கேந்திரத்தில் மாந்தி நின்று சனியின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்பட்டால், பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்று அறியலாம்.
* மாந்தி வர்க்கோத்தமம் பெற்றால் இரு வேறு இடங்களில் மறைக்கப்பட்டிருக்கும்.
* மாந்தியுடன் ராகு சேர்ந்திருந்தால் பாம்புப் புற்றுக்கு அருகிலுள்ளது எனலாம்.
* மாந்தி, பிரசன்ன லக்னத்திற்கு நான்கில் அமைந்தால் வீட்டிற்குள் உள்ளது.
இதேபோல் புதைக்கப்பட்ட பொருளின் உருவத்தையும் கண்டறியும்முறை கேரள ஜோதிடத்திலுண்டு.
பிரிவினை தீருமா?
கேள்வி: எனக்குத் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீரென்று பிரச்சினை தலை தூக்கிவிட்டது. என் மனைவிக்கு என்மேல் காரணமில்லாமல் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த பிரிவு தொடருமா? விவாகரத்தில் முடியுமா என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.
பெயர் தெரிவிக்க விரும்பாத வாசகர்
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 83; உத்திராடம் மூன்றாம் பாதம், மகர நவாம்சம்)
* சோழி லக்னத்திற்கு ஏழில் மாந்தி அமைவது மனைவி யுடன் ஏற்பட்ட மன வேறுபாட் டைக் குறிக்கிறது. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 2, 7, 12 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் அந்த பாவங்களுக்குத் தீயபலன் உண்டாகும். லக்னத் திற்கு கேந்திரத்தில் மாந்தி இருப்பதால், கணவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்த தவறுகளுக்கேற்ப சரியான தண்டனைகளை உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும். ஏழில் மாந்தி இருப்பதால் வாய்ச் சண்டை, வீண்விவாதங்களால் மனநிம்மதியை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.
* சனி பகவானின் மகனாகிய மாந்தி சனியின் நட்சத்திரமாகிய பூசத்தில் அமர்வதும், சனியின் ஏழாம் பார்வையைப் பெறுவதும் கெடுபலனையே காட்டுகிறது.
* எட்டாம் வீட்டின் அதிபதியாகிய சூரியன் சோழி லக்னத்திற்கு மூன்றில் பூரட்டாதி நான்காம் பாதத்தில் இருப்பது, கணவன்- மனைவியின் அந்தரங்க உறவில் ஏற்பட்ட திருப்தியின்மையே பிரிவுக்குக் காரணம் என்பதைத் தெரிவிக்கிறது.
* சோழி லக்னமாகிய மகரத்திற்கு பாதகஸ்தானமாக விருச்சிகம் அமைவதும், தாம்பத்திய உறவில் உண்டான முரண்பாடே கணவன்- மனைவி யின் கருத்து வேறுபாட் டிற்குக் காரணமானது.
* சோழி லக்னத்திற்கு ஐந்தில் ராகு இருப்பது, கணவர் குடிப்பழக்கம், போதைப் பொருளுக்கு அடிமையானதாலும் இல்வாழ்க்கையில் பிரச்சினை உண்டானது. இதனாலும் திருமண வாழ்க்கை கடினமாக மாறியது.
* பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டில் ராகுவும் செவ்வாயும் அமர்ந்து விட்டதால் பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டது. செவ்வாய்க்கு தோஷப் பரிகாரம் தேவை.
* ஐந்தில் ராகு, செவ்வாயுடன் கூடியிருந்தாலும், குருவின் ஐந்தாம் பார்வையைப் பெறுவதால் நிலைமை சீராகும் என்ற ஆறுதல் கிடைக்கிறது.
* குரு பகவானின் ஏழாம் பார்வை மாந்தியின்மீது பதிவதால் கெடுபலன்கள் குறையும்.
* குரு பகவான் கும்ப ராசியில் அதிசாரப் பிரவேசம் செய்யும் காலத்தில் ஓரளவுக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்
* சனிபகவான் தனது இரு மனைவியர்களான "மந்தா' தேவி, "ஜேஷ்டா' தேவியுடனும், தனது மகன்களான "குளிகன், மாந்தி' ஆகியோருடனும் காட்சியளிக்கும் திருநரையூர் அருள்மிகு ராமநாதர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
* செம்பு வளையம் அணிவதும், செப்புப் பாத்திரத்தில் நீர் அருந்தி வருவதும் செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரமாக அமையும்.
(தொடரும்)
செல்: 63819 58636