Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (73)

/idhalgal/balajothidam/kerala-jothidam-73

"கடன்கொண்ட நெஞ்சம்போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்.' அவமானத்திற்கு அஞ்சும் மனிதர்களுக்கு உவமானமாகக் கூறப்பட்டது. கடனே ஒருவருக்கு எதிரியாகவும் நோயாகவும் இருந்து, நோயையும் எதிரியையும் உருவாக்குகிறது. ஆறாம் பாவம் ருண (கடன்), ரோக (நோய்), சத்ரு (எதிரி) ஆகிய காரகங்களை உள்ளடக்கியதன் காரணத்தை கிருஷ்ணன் நம்பூதிரி கண்டு வியந்தார். இந்த கருத்தை வழிமொழிவதுபோல் வந்துசேர்ந்தது ஒரு பிரசன்னம். மனம் சோர்ந்து நடை தளர்ந்து வந்தவர், தான் நெடுநாட்களாக கடன்சுமையில் சிக்கித் தவிப்பதாகவும், அதி-ருந்து விடுபட விரும்புவதாகவும் தெரிவித்தார். முல்லக்கல் பகவதியை தியானத்தில் இருத்தி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advert

பிரசன்ன ஜாதகத்தில், லக்னாதிபதி ஆறாம் பாவத்துடனும் எட்டாம் பாவத்துடனும் இணைந்துள்ளதால், நீண்டகாலக் கடனால் வந்த அவஸ்தையைக் காட்டியது. லக்னாதி பதி ஆறாம் வீட்டதிபதியுடன் பரிவர்த்தனை பெற்று அமர்ந்ததாலும், கடன் பிரச்சினைகள் சூழ்ந்திருப்பது உறுதியானது. ஆறாம் பாவாதிபதியின் தசை மாறினால் ஓரளவுக்கு கடன் கட்டுப்பாட்டில் வருமென்று சொல்லப் பட்டது. செவ்வாய்க்கிழமை பகல் செவ்வாய் ஹோரையில் கடன் தொகையின் ஒரு பகுதியை செலுத்தினால், கடன் தொல்லை விரைவில் முடிவுக்கு வரும். திங்கட்கிழமையன்று திருவாரூர் மாவட்டம் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலிலுள்ள ருண விமோசன -ங்கேஸ்வரரை வணங்கினாலும், நீண்டகால கடன்கள் தீர வழிபிறக்குமென்று பரிகாரம் சொல்லப்பட்டது. திக்கற்றவருக்கு தெய்வமே துனை என்பதுபோல், திசை தெரியாமல் அலைந்த கப்பலை கரைசேர்த்த பிரசன்ன ஆரூடத்தை வணங்கி விடைபெற்றார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜாதக தோஷப் பரிகாரங்களை செய்வதற்காகப் பார்க்கப்படும் முகூர்த்த நிர்ணயத்தில், ஹோரைக்கு முக்கிய பங்குண்டு. எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ, திதி, கிழமை, நட்சத்திர தோஷமோ கிடையாது. சரியான ஹோரைகளில் பரிகாரங்களைச் செய்து வெற்றிபெற வைப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. அரசுசார்ந்த முயற்சிகளுக்கு சூரிய ஹோரையிலும், குடும்பப் பிரச்சினைகள் தீர சுக்கிர ஹோரையிலும், வியாபார மேன்மைக்கு புதன் ஹோரையிலும், மனக்குழப்பங்கள் நீங்க சந்திர ஹோரையிலும், புத்திர பாக்கியம் பெறுவதற்கு குரு ஹோரையிலும், சொத்துப் பிரச்சினைகள் தீர்வதற்கு செவ்வாய் ஹோரையிலும் பரிகாரங்களைச் செய்தால் வெற்றி பெறலாமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

நோயாளி உயிர் பிழைப்பாரா?

கேள்வி: என் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நோயின் கடுமை அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அவர் உயிர் பிழைப்பாரா? பரிகாரம் உண்டா?

Advertisment

dd

-ஜெயராமன், சென்னை.

(எண்-30; பூசம்-2; நட்சத்திராதிபதி- சனி; ராசியாதிபதி- சந்திரன்.)

* சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானமாகிய ரிஷபத்தில் ராகு அமைவது பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

* எட்டாம் வீட்டில் மந்தியும் சோழி லக்னாதிபதியும் இருப்பதால் நோய் குணமாவது கடினம்.

* நவாம்சத்தில், கன்னி ராசியில் சோழி லக்னம் அமைவதால் வயிற்றில் ரோகமென்று தெரிகிறது.

* சோழி லக்னத்தின் ஆறாமதிபதியாகிய குரு பகவான் எட்டாமிடத்தில் இருப்பதால் தீரா நோயாக மாறிவிட்டது.

* எட்டாம் வீட்டதிபதியாகிய சனி பகவான் ஏழிலிருப்பது உயிர் ஆபத்தைக் குறிக்கிறது.

* பரிகாரங்களைச் செய்தால் கடவுள் அருளால் உயிருக்கு வந்த ஆபத்து நீங்கும் வாய்ப்புண்டு.

dd

பரிகாரம்

சென்னையில் தண்டீஸ்வரம் என்னும் திருத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டால் ஆயுள் விருத்தி பெறலாம்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் மகா மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் நோயின் கடுமை குறைந்து ஆபத்து விலகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala170622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe