பிரசன்னம் பார்க்கவந்த மூதாட்டியின் மனதும் உடலும் தள்ளாடியது. தன் மகன் திடீரென்று காணாமல் போய்விட்ட தாகவும், ஓரண்டாகியும் அவன் இருப்பிடத் தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார். பிரசன்னத்தின் மூலமாவது தீர்வு கிடைக்காதா என்னும் ஆதங்கம் புரிந்தது. ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பதினொன்று, மூன்று மற்றும் எட்டாம் பாவங்களைக்கொண்டு ஆராய்ந்ததில், காணாமல் போனவர் தொலைதூரத்தில் உயிரோடு இருக்கிறார் என்பது உறுதியானது. ஏழாம் வீடும் சனியும் பாபகர்த்தாரி யோகத்தி-ருந்ததால், தன் மனைவியுடன் ஏற்பட்ட மன வருத்தத்தினால் அவர் இல்லம் நீங்கினார் என்ற காரணமும் புரிந்தது. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு பானகத்தை நிவேதனம் செய்து மனமுருக வழிபட்டால், காணாமல் போனவர் வீடு திரும்புவார் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. மூன்று வாரங்கள் பரிகார பூஜை செய்ததும், ஜோதிடரின் கணிப்பில் சொன்னதுபோல் காணாமல் போனவர் வீடு திரும்பினார். பிரசன்னம் பார்க்கவந்த மூதாட்டியின் மனம் குளிர்ந்தது. பிரசன்ன ஜோதிட ருக்கு பாராட்டு குவிந்தது.

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

Advertisment

ஒருவரின் ஜாதகக் கொடுப்பினைப் பலன் எப்போது செயல்படும் என்பதைக் கணிக்க, பாக்கியாதிபதி தசையைத் தேர்ந்தெடுப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாமிடமும், அதன் அதிபதியும் நல்ல யோகப் பலன்களைத் தருவார்கள் என்றா லும், பாக்கியாதிபதியின் தசை சிலருக்கு யோகப் பலன்களை அள்ளித்தருவதில்லை; கிள்ளித்தான் தருகிறது. பாக்கிய ஸ்தானாதிபதி குருவுடன் தொடர்பி-ருந்தாலும், கேந்திர ஸ்தானங்களில் பாக்கியாதிபதி வலுப்பெற்றால் மட்டும்தான் பாக்கியஸ்தானம் வலுவடையும். பாக்கிய தசையில் சக்தியில்லாதோருக்கு, பாக்கியாதிபதியால் சக்திதானம் கிடைக்கும். பாக்கியாதிபதிக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களின்மூலம் முழுப் பலனையும், இரண்டு, ஐந்து, பதினோராம் வீடுகளிலுள்ள கிரகங்களின்மூலம் பாதிப் பலனையும், மூன்று மற்றும் ஒன்பதாம் வீட்டில் அமரும் கிரகங்களின்மூலம் கால்பங்கு பலனையும் தரமுடியும். பாக்கியாதிபதியின் தொடர் பிலுள்ள கிரகத்தின்மூலம் பரிகாரத்தால் பாக்கிய தசையின் பலனை அடையமுடியும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

வீடு விற்பனையாகுமா?

கேள்வி: என் பூர்வீக சொத்தில் வந்த வீட்டினை விற்பனை செய்ய முயற்சிசெய்து வருகிறேன். அதில் பல தடைகள் உண்டாகின் றன. அந்தத் தடைகள் நீங்கப் பரிகாரம் உண்டா?

Advertisment

-திருமதி ஜெயந்தி, கோவை.

(ஆரூட எண்- 57; சுவாதி முதல் பாதம்)

* சோழி லக்னமும் பிரசன்ன லக்னமும் ஒரே வீட்டிலமைந்து, அதில் ராசி அதிபதி யாகிய சுக்கிரன் ஆட்சிபெறுவது சிறப் பான அமைப்பு.

* இரண்டில் கேதுவும், எட்டில் ராகுவும் அமைவது நன்மையென்றாலும், காரியத்தடையும் இழுபறியும் உள்ளதைத் தெளிவாக்குகிறது.

* சோழி லக்னமும் பிரசன்ன லக்னமும் துலாத்தில் அமைந்து, நட்சத்திர அதிபதியாகிய ராகு எட்டாம் வீட்டில் அமர் வதால், சொத்தில் சட்டச்சிக்கல் உள்ளது என்பது உறுதியாகிறது.

ff

* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் கிரகயுத்தம் இருப்பதால், சொத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. லாபாதிபதியும், பாதகாதிபதியுமாகிய சூரியன் கன்னியி-ருப்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

*சோழி லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டின் அதிபதி பன்னிரண்டில் இருப்பதாலும், ஒன்பதாம் வீடு மிதுனமாக அமைவதாலும், மூதாதையரின் உயில் சரியான முறையில் எழுதப்படவில்லை. அதனால் சொத்தை விற்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

*சோழி லக்னமாகிய துலாத்தில் கும்பத்தில் அமரும் குருவின் பார்வை விழும்போது பிரச்சினை சரியாகும்.

பரிகாரம்

*ஞாயிற்றுக்கிழமைகளில் பசுவுக்கு அகத் திக்கீரை தருவதால் தொல்லை நீங்கும்.

* வெள்ளிக்கிழமைகளில் ஏழைளுக்கு உணவு தானம் செய்தால், சொத்து சார்ந்த பிரச்சினைகளி-ருந்து படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636