பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் பார்வையில் உயிரோட்டம் குறைந்திருந்தது. தன்னுடைய ஐந்து வயதுக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே இதயத்தில் குறைபாடு இருப்பதாகவும், மருத்துவர்களால் சரிசெய்யமுடியவில்லை என்றும் கூறி வருந்தினாள். தன்னுடைய குழந்தையின் ஆயுளை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்பி னாள். ஸ்ரீ ராஜமாதங்கியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்திற்கு எட்டா மிடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள்காரகனாகிய சனிபகவான் இருப்பதாலும், அந்த இடத்திற்கு சுப கிரகங்களின் பார்வை இருப்ப தாலும், ஜாதகர் நீண்ட ஆயுளைப் பெறுவார் என்னும் மகிழ்ச்சியான செய்தி உறுதியானது. ஆனாலும் சந்திரன் பாவ கிரகங்களுடன் இணைந்து, தேய்பிறைச் சந்திரனாக கிரகண அமைப்பிலிருப்பதால், குழந்தைக்கு பாலாரிஷ்டம் என்னும் ஆயுள் தோஷம் உண்டாகிறது. எட்டு வயதுவரை இந்த தோஷம் நீடிக்கும். எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும்
பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் பார்வையில் உயிரோட்டம் குறைந்திருந்தது. தன்னுடைய ஐந்து வயதுக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே இதயத்தில் குறைபாடு இருப்பதாகவும், மருத்துவர்களால் சரிசெய்யமுடியவில்லை என்றும் கூறி வருந்தினாள். தன்னுடைய குழந்தையின் ஆயுளை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்பி னாள். ஸ்ரீ ராஜமாதங்கியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்திற்கு எட்டா மிடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள்காரகனாகிய சனிபகவான் இருப்பதாலும், அந்த இடத்திற்கு சுப கிரகங்களின் பார்வை இருப்ப தாலும், ஜாதகர் நீண்ட ஆயுளைப் பெறுவார் என்னும் மகிழ்ச்சியான செய்தி உறுதியானது. ஆனாலும் சந்திரன் பாவ கிரகங்களுடன் இணைந்து, தேய்பிறைச் சந்திரனாக கிரகண அமைப்பிலிருப்பதால், குழந்தைக்கு பாலாரிஷ்டம் என்னும் ஆயுள் தோஷம் உண்டாகிறது. எட்டு வயதுவரை இந்த தோஷம் நீடிக்கும். எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை ஜென்ம நட்சத்திர நாட்களில் வணங்கினால் நோய் விரைவில் தீருமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. காலச் சக்கரம் உருண்டோடியது. பல ஆண்டுகள் கழித்து, பிரசன்னம் பார்க்கவந்த பெண் தன் குழந்தை யின் நோய் நீங்கிவிட்டதென்ற செய்தியை மகிழ்ச்சி யோடும் நன்றியோடும் தெரிவித்தாள். எல்லா புகழும் பிரசன்ன ஜோதிடத்தைக் கண்டறிந்து அருளிய மகான்களையே சேரும் என்பதை கிருஷ்ணன் நம்பூதிரி புரிந்துகொண்டார்; புன்னகைத்தார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
இயற்கைக்கு மாறான முறையில் இறந்தவருக்கு சரியான சடங்குகளை செய்யாவிட்டால் ஆவிகளால் தொல்லை உண்டாகும். பூத, பிரேத சாபங்களால் ஏற்படும் தொல்லைகளை பிரசன்ன ஆரூடத்தின் மூலம் துல்லியமாக அறிந்து, அதற்கான சரியான பரிகாரங்களைக் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
1. பிரசன்ன ஆரூடத்தில் சோழிலக்னத் திற்கு பாதக ஸ்தானத்திலோ, எட்டாம் வீட்டிலோ மாந்தி அமைந்தால் ஜாதக ருக்கு ஆவிகளால் தொல்லை இருப்பதை அறியலாம்.
2. ராசி அல்லது நவாம்சத்தில் செவ்வாயின் வீட்டில் மாந்தி தொடர்பு பெற்றிருந்தா லும் ஜாதகர் பூத, பிரேத சாபத்தால் துன்பத்தை அனுபவிப்பார்.
3. பிரசன்ன ஆரூட சக்கரத்தில் மாந்தி, ராகுவுடன் தொடர்பிலிருந்து, அது எட்டாம் வீடாக அமைந்தால், பாம்பு கடித்து அகால மரணமடைந்தவரின் ஆவியால் துன்பம் உண்டாகும்.
4. மாந்தி, சனியுடன் தொடர்பிலிருந்து, அது பன்னிரண்டாம் வீடாக அமைந்தால், பசியாலும் தாகத்தாலும் அகால மரணமடைந்தவரின் ஆவியால் துன்பம் உண்டாகும்.
5. மாந்தி, தேய்பிறைச் சந்திரனுடன் தொடர்பிலிருந்து, அது நீர் ராசியாகவும், சோழி லக்னத்திற்கு எட்டாம் வீடாகவும் அமைந்தால் நீரில் மூழ்கி அகால மரணமடைந்தவரின் ஆவியால் துன்பம் உண்டாகும்.
இவ்வாறு எந்தவகை ஆவியால் தொல்லை உண்டானது என்பதையறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். பிரேதங்களை திருப்திப்படுத்த பார்வன சிரார்த்தம், ஷேத்திர பிண்டம், தில ஹோமம், சமாராதனை போன்றவற்றைச் செய்ய வேண்டும். பிரேத சாபத்தின் இருப்பதேழு வகைகளையும் பரிசோதித்த பின்னரே பரிகாரம் சொல்வதால், கேரள ஜோதிடர் களின் கணிப்பு சிறப்பாக அமைகிறது.
அலுவலகத்தில் வேலை நிலைக்குமா?
கேள்வி: நான் பத்தாண்டுகளாக வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியிலிருக் கிறேன். என்மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளேன். இந்த நிலை மாறுவதற்குப் பரிகாரம் உண்டா?
-மணிமாறன், காஞ்சிபுரம்.
(ஆரூட எண்- 72; கேட்டை நான்காம் பாதம்)
* சோழி லக்னம் விருச்சிகத்தில் அமைந்து, அதன் பாதக ஸ்தானம் கடகமாக வும், பாதகாதிபதி சந்திரனாகவும் அமைகிறது.
* சந்திரன் சோழி லக்னத்திற்கு இரண்டில், வருமானத்தைக் குறிக்கும் வீட்டில் அமைவதால், வேலை சம்பந்தப் பட்ட கேள்வி என்பது உறுதியாகிறது.
* சோழி லக்னத்திற்கு ஒன்பதாமிடம் பாதகமாவதால், மேலதிகாரிகளின் அதிருப்தியையும், அதனால் வரும் பாதகத்தையும் குறிக்கிறது.
* பிரசன்ன லக்னத்தின் ஆறாமதிபதி பதினொன்றில் இருப்பது, தொழிலில் பிரச்சினை தீருமென்பதைத் தெரிவிக்கிறது.
* 15-11-2021-க்குப் பிறகு புதிய வேலை கிடைக்கும்.
* பத்தாமிடத்தில் சூரியனிருப்பதால், அதிகாரமான பதவி கிடைக்கும்.
* ஆறாமதிபதி பத்தாமிடத்துத் தொடர்பு பெற்றதால் வேலையில் பிரகாச மான எதிர்காலம் உண்டு.
* மனைவியின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை.
* வேலை செய்யும் நாட்டின் அரசாங்கத்தால் தொல்லைகள் வரலாம்.
* பிரசன்ன காலத்து தசாபுக்திகளைக் கொண்டு கணக்கிட்டால், 15-7-2026 வரை வேலையில் பிரச்சினை பெரியதாக பாதிக்காது.
பரிகாரம்
* செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்ய வேண்டும். சனிக்கிழமை காலை (6.00-6.30) சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
* வியாழக்கிழமை காலை (8.00-09.00) சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்குப் பூஜை செய்ய வேண்டும்.
* வீட்டுப் பூஜையறையில் கஜேந்திர மோட்சம் படத்தை வைத்து, மாதம் ஒரு முறை திருவோண நட்சத்திரத்தில் பூஜை செய்யவேண்டும்.
செல்: 63819 58636
(தொடரும்)