Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (102)

/idhalgal/balajothidam/kerala-jothidam-102

ரைநிலவே அழாதே! உனக்குள் பூரண நிலவு மறைந்திருக்கிறது. தோற்றவரென்று எவருமில்லை. தன் திறமையை வெளிப்படுத்தாதவரே உண்டு. இவ்வுலகில் பிறப்பதே முதல் வெற்றி. தன்னை முழுமை யாக உணர்வதும், உணர்ந்ததை உலகுக்கு வெளிப்படுத்துவதுமே வாழ்க்கை. இந்த கருத்தின் யதார்த்தம் கிருஷ்ணன் நம்பூதிரியின் மனதைக் கவர்ந்தது. உபஜெய ஸ்தானங் களின் தன்மையை அறிந்தால் மட்டுமே ஒரு ஜாதகர் வெற்றியடையமுடியும். உயிரோட்டமே இல்லாத முகத்து டன், கவலையை சுமந்துவந்தவர் ஒரு நடு வயதுக்காரர். தான் செய்த எந்த வியாபாரமும் வெற்றி தரவில்லை யென்றும், துரதிர்ஷ்டம் துரத்துகிறதென்றும் புலம்பித் தீர்த்தார். சேர்தலா கார்த்தியாயினி தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கின

ரைநிலவே அழாதே! உனக்குள் பூரண நிலவு மறைந்திருக்கிறது. தோற்றவரென்று எவருமில்லை. தன் திறமையை வெளிப்படுத்தாதவரே உண்டு. இவ்வுலகில் பிறப்பதே முதல் வெற்றி. தன்னை முழுமை யாக உணர்வதும், உணர்ந்ததை உலகுக்கு வெளிப்படுத்துவதுமே வாழ்க்கை. இந்த கருத்தின் யதார்த்தம் கிருஷ்ணன் நம்பூதிரியின் மனதைக் கவர்ந்தது. உபஜெய ஸ்தானங் களின் தன்மையை அறிந்தால் மட்டுமே ஒரு ஜாதகர் வெற்றியடையமுடியும். உயிரோட்டமே இல்லாத முகத்து டன், கவலையை சுமந்துவந்தவர் ஒரு நடு வயதுக்காரர். தான் செய்த எந்த வியாபாரமும் வெற்றி தரவில்லை யென்றும், துரதிர்ஷ்டம் துரத்துகிறதென்றும் புலம்பித் தீர்த்தார். சேர்தலா கார்த்தியாயினி தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் சுபகிரகங்கள் நின்று வசுமதி யோகத்தைக் காட்டின. மூன்றாமதிபதியாகிய புதன் பத்தாமிடத்திலிருந்தது வெற்றி வாய்ப்பைக் காட்டியது. புதனின் காரகத்தைக் குறிக்கும் ஆலோசகர், ஏஜென்சி தொழிலைச் செய்தால் ஜாதகர் வெற்றிபெறுவாரென்று அறிவுறுத்தப்பட்டது. வைஷ்ணவி தேவியை வணங்கினால் வெற்றி நிச்சயமென்ற உபாயமும் சொல்லப் பட்டது. பாதை மாறியதால் வெற்றிப் பயணம் தொடங்கியது. பிரசன்ன ஜோதிடம் எனும் கலங்கரை விளக்கத்தின் ஒளி பல கப்பல்களைக் கரைசேர்த்தது.

aa

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

மணமக்களின் ராசி, நட்சத்திரப் பொருத்தங்ளைப் பார்ப்பதும், சரியான முகூர்த்த நாளைக் குறிப்பதுமே திருமணத்தை உறுதிசெய்யாது. சில நேரங் களில் நிச்சயமான திருமணத் திலும், தடையுண்டாகும். முதலில் மணமக்களின் ஜாதகப்படி திருமண யோகத்தைத் தரும் தசாபுக்தியும், கோட்சாரமும் அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே, பொருத்தம் பார்ப்பது கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆண் ஜாதகத்தில், சுக்கிரனுக்கு திரிகோணாதிபதிகள் மற்றும் சுக்கிரன் அமரும் வீட்டின் யோக, பாதகாதிபதிகளை ஆராயவேண்டும். பெண் ஜாதகத்தில் செவ்வாயின் திரிகோணாதிபதிகள் மற்றும் செவ்வாய் அமரும் வீட்டின் யோக, பாதகாதிபதிகளை ஆராயவேண்டும். மணமக்கள் ஜாதகத்தில் நடப்பு தசாபுக்தி நாதர்கள் திருமணத்திற்கு சாதகமா? பாதகமா என்பதையறிந்த பின்னரே திருமணத்திற் கான முயற்சி களை மேற் கொள்ள வேண்டு மென் பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

திருமண வாழ்வில் பிரச்சினை தீருமா?

கேள்வி: எனக்குத் திருமணமாகி ஆறாண்டு களாகின்றன. என் கணவரோடு ஏற்பட்ட மனக் கசப்பால் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். பிரிவு நீங்குமா?

-திருமதி சந்தியா, மதுரை.

(எண்- 58; ஸ்வாதி- 2; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி- சுக்கிரன்.)

* சோழி லக்னத்தின் ஏழாமிடத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்திருப்பது திருமண வாழ்வில் அமைதியில்லாத நிலையைக் குறிக்கிறது.

* ஏழாமிடத்திலிருக்கும் செவ்வாயை சனிபகவான் பார்பதால் மணவாழ்வில் மகிழ்ச்சியைக் குலைக்கும்.

* சோழி லக்னாதி பதியும் சந்திரனும் எட்டாமிடத்திலிருப்பது, மறைமுகமான பிரச்சினையைக் குறிக்கிறது.

* சோழி லக்னத் தின் பாதகாதிபதி யாகிய சூரியன் ஒன்பதாமிடத்திலிருப்பதால் மணமக்களின் பெற்றோருக்குள் ஏற்பட்ட விரோதமே இந்த பிரச்சினைக்கு மூலகாரண மாகிறது.

* லக்னமும் ஏழாம் வீடும் ராகு- கேதுவின் பிடியிலுள்ளதால் தோஷம் கடுமையாக உள்ளது.

* குருபகவான் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

பரிகாரம்

ரதி- மன்மத ஹோமம் செய்தால் பிரிந்தவர் கூடுவார். சஷ்டியில் வேல் வழிபாடு செய்தால், குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டலாம். கேரளாவில்- மாங்கோட்டுகாவு என்ற இடத்திலுள்ள பகவதி கோவிலில் இடைக்கலசம் என்ற பூஜையைச் செய்து, அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala301222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe