ஊரை நம்பி, உறவை நம்பி ஏமாந்தவர்களில் அறிவுடை நம்பியும் ஒருவன். கவலை தோய்ந்த முகத்துடன் கிருஷ்ணன் நம்பூதிரிக்கு எதிரில் அமர்ந்தான். சில ஆண்டுகளாக தான் செய்யும் எல்லா காரியங்களும் தோல்வியில் முடிவதாகவும், பழகியவர்கள் பகையாளி களாக மாறிவிட்டதையும் சொல்லிமுடித்தான். கேரளத்தில் பள்ளசேனா எனும் ஸ்தலத்தில் அருளாட்சி செய்யும் "மீன்குளத்தி' பகவதி அம்மனைத் தொழுதபின் பிரசன்னம் தொடங்கியது.
தெய்வானுகூலத்தைக் குறிக்கும் கர்மப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. சூரியனுக்கு பன்னிரண்டில் அசுபர் அமைந்து அது ஒன்பதாம் பாவத்தொடர்பு பெற்றதாலும், தேவகோபத்தை குறிப்பிடும் கிரகத்துடன் குளிகனும் மாந்தியும் தொடர்பிலிருந்ததாலும் பூஜைக்குறிய பொருளை சரியாகப் பராமரிக்கப்படாத தால் வந்த தேவகோபமே பிரச்சினைக்கான காரணம் என்பது தெளிவானது. அதில் நில ராசியாகிய ரிஷபத்தில் ரோகிணி மூன்றாம் பாதத்தின் மிதுன நவாம்சத் தொடர்பாலும் அந்த பூஜைக்குறிய பொருள் பெருமாளுக்குரியது என்பது அறியப்பட்டது.
இதைக்கேட்ட அறிவுடை நம்பியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. தன் தந்தை பூஜித்து வந்த சாளக்கிராமத்தை அவர் காலத்திற்குபின் பூஜை செய்யாமல் பரண்மீது வைத்துவிட்டதனால் வந்த தொல்லையை அறிந்தான். ஈசுவரனுக்குரிய பாணலிங்கம், அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி, சிலா விஷ்ணுவின், வடிவமான சாலக்கிராமம், சூரியனுக்குரிய ஸ்படிகம், விநாயகரின் உருவான சோணபத்ரக்கல் போன்றவற்றை உரிய பூஜை செய்யாமல் வீட்டில் வைத்திருந்தால் கெடுபலன்கள் உண்டாகும். சாளக்கிராமத்திற்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து பெருமாளை வழிபட்டால் தோஷம் நீங்குமென்று அறிவுறுத்தப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தால் தன் வாழ்வில் ஒளி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து வியந்துபோனான் அறிவுடை நம்பி.
நஷ்டப் பிரசன்னம் எனும் திருட்டுப்போன பொருட்களைப் பற்றிய பிரசன்னத்தில், சோழி லக்னத் தின் நவாம்சத்தைக்கொண்டு திருட்டுப்போன பொருளையும், லக்ன திரேகாணத்தைக்கொண்டு திருடனின் உருவ அமைப்பையும், லக்னத்தின் ராசியைக்கொண்டு திருடப்பட்ட பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தையும் காணும் முறையயை கேரள ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள்.சோழி லக்னத்தில் குரு அமர்ந்தால் திருடப்பட்ட பொருள் பூஜை அறையிலும், செவ்வாய் அமர்ந்தால் ஆயுதங்கள் இருக்குமிடத்திலும், சந்திரனிருந்தால் தண்ணீர்த் தொட்டிக்கு அருகிலும் இருக்கும். இதுபோல் லக்னத்தில் அமையும் கிரகங்களின் காரகங்களைக்கொண்டு பல விவரங்களை அறியலாம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 47. உத்திரம் மூன்றாம் பாதம்; கும்ப நவாம்சம்) மனநோய் தீருமா?
கேள்வி: என் மனைவி மனநோயால் பாதிக்கப் பட்டுள்ளார். மருத்துவர் கள் இந்த நோயை பல்வகை ஆளுமை நோய் (Multiple Personality Disorder) என்று குறிப்பிடுகிறார்கள். பலவித சிகிச்சை களுக்குப் பிறகும் பயனில்லை. பிரசன்ன ஆரூடத்தின்மூலம் இந்த நோய் தீர பரிகாரம் கூறமுடியுமா?
-பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பைஷஜ்ய பிரசன்னம் எனும் நோய்க்கான பிரசன்னம் காணும்போது கீழ்க்கண்ட தசாபுக்திகளை ஆராய்ந்து துல்லியமான பலன்களைக் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
ப் வலிமை இழந்த லக்னாதிபதியின் தசை.
ப் ஆறாம் வீட்டு அதிபதியின் தசை.
ப் ஆறாம் வீட்டில் அமைந்துள்ள கிரகத்தின் தசை.
ப் ஜனன ஜாதகத்தில் பலவீனமாக உள்ள கிரகங்களின் கோட்சார அவஸ்தை.
ப் சூரியன் மற்றும் செவ்வாயின் அறுபத்து நான்காவது நவாம்சத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசைபுக்தி நிகழும் காலம்.
ப் பிரசன்ன லக்னமும், உதய லக்னத் திற்கு நான்காவதாக சோழி லக்னமும் வருவது. நான்காம் பாவம் சம்பந்தப்பட்ட கேள்வி என்று தெரிகிறது.
ப் பிரசன்ன லக்னாதிபதி புதன் ஆறாம் பாவத்தில் அமர்வது, புத்தி தொடர்பான நோய் சம்பந்தபட்ட கேள்வியைக் காட்டுகிறது.
ப் பிரசன்ன லக்னம் பெண் ராசியாக வருவதும், லக்னாதிபதி கும்பத்தில் பெண் கிரகம் சுக்கிரனோடு சேர்வதும் பெண்ணைப் பற்றிய கேள்வி என்று சொல்கிறது.
ப் சந்திரன் அஷ்டமத்தில் ராசியிலும், நவாம்சத்தில் ரோகாதிபதி சனியோடு சேர்ந்து ரிஷபத்தில் நிற்பதும் மனபோராட்டத்தைக் காட்டும்.
ப் சனி, ராகு இருவரும் ராசியில் சந்திர ராசியில் நிற்பது அதீத மன அழுத்தத்தைக் காட்டும்.
ப் ராகு, சந்திரன் நட்சத்திரத்தில் ராசியில் அமர்ந்து அம்சத்தில் கடகத்தில் இருப்பதும், அதுவே காலபுருஷனின் நான்காம் பாவமாவதும் மரபுமீறிய மனநோய் என்று தெரிகிறது.
ப் சந்திரன் வீடு அம்சத்தில் நான்கில் கெடுவது, ராசியில் சந்திரன் எட்டில் இருப்பதும் மனநோயை உறுதிப்படுத்துகிறது.
ப் கடகமும் மேஷமும் சர ராசியாவது, மனதில் பல புதிய எண்ண ஓட்டங்கள் அடிக்கடி மாறுவது தெரிகிறது.
ப் ராசியில் நான்காம் அதிபதியோடு மூன்றாம் அதிபதி குரு நீசமாக சேர்வது, மனநோயால் மிகுந்த தொல்லை ஏற்படுவது தெரிகிறது.
ப் சர ராசிகள் அதிகமாக மனநோயைக் காட்டுவதால் பல்வகை ஆளுமை நோய் (multi personality disorder) என்ற உளவியல் கோளாறைக் காட்டுகிறது.
பரிகாரம்
ப் ஸ்ரீரங்கம் சென்று தாயாரை முதலில் சேவித்தபின் ராமானுஜர் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு, மேட்டழகிய சிங்கராகிய நரசிம்மரை சேவித்துப் பின் அரங்கநாதரை சேவிக்கவேண்டும்.
ப் தக்ஷிண காளி என்ற அம்பாளின் உருவத்தை வீட்டில் வைத்து ஒவ்வொரு அமாவாசையன்றும் பூஜித்தால் மனம் தெளிவுபெறும்.
ப் இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி மீனம் ஏறும்பொழுது இந்த நோயிலிருந்து பூரண குணம் கிடைக்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636