கேரள ஜோதிட ரகசியங்கள்! (10)

/idhalgal/balajothidam/kerala-jothida-secret-10

வலை நிறைந்த கண்களும், கண்களைச் சுற்றியிருந்த கருவளையமும் வந்தவரின் வயதைக்கூட்டியது. பிரசன்னம் பார்க்க வந்தவர் சொல்லமுடியாத மனவேதனையிலிருப்பது கிருஷ்ணன் நம்பூதிரிக்குப் புரிந்துவிட்டது.தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்குமா? அவனுடைய எதிர்காலம் வளமாக அமையுமா என்பதே அவருடைய கேள்வி. திருச்சூர் ஊரகத்தில் அருளாட்சி செய்யும் இறைவி "அம்மாதிருவடி'யை வேண்டி பிரசன்னத்தைத் துவக்கினார். பிரசன்ன லக்னத்தின் எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவத்தைப் பரிசோதனை செய்தபின் அதிர்ந்து போனார். ஐந்தாம் பாவத்தில் செவ்வாயும், பன்னிரண்டாம் பாவத்தில் சுக்கிரனும் இருந்ததால் இந்த பிரசன்னம் பார்க்கப்படுபவர் உடலைக் கெடுக்கும் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர் என்பது தெளிவானது.

பன்னிரண்டாம் பாவம் வலுத்து அசுப கிரகப் பார்வையும் இருந்ததால் அவர் தற்போது சிறைவாசத்தில் இருப்பதும் தெரிந்தது. தனக்கு பிரசன்ன ஜோதிடத்தில் கிடைத்த தகவல்களை வந்தவரிடம் சொல்லிமுடித்தார். பிரசன்னம் பார்க்க வந்தவர் மனவேதனையுடன் தலைக்குனிந்தார். இனிமேல் ஜோதிடரிடம் எதையும் மறைக்கமுடியாது என்பதையுணர்ந்து நடந்த சம்பவங்களை எடுத்துரைத

வலை நிறைந்த கண்களும், கண்களைச் சுற்றியிருந்த கருவளையமும் வந்தவரின் வயதைக்கூட்டியது. பிரசன்னம் பார்க்க வந்தவர் சொல்லமுடியாத மனவேதனையிலிருப்பது கிருஷ்ணன் நம்பூதிரிக்குப் புரிந்துவிட்டது.தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்குமா? அவனுடைய எதிர்காலம் வளமாக அமையுமா என்பதே அவருடைய கேள்வி. திருச்சூர் ஊரகத்தில் அருளாட்சி செய்யும் இறைவி "அம்மாதிருவடி'யை வேண்டி பிரசன்னத்தைத் துவக்கினார். பிரசன்ன லக்னத்தின் எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவத்தைப் பரிசோதனை செய்தபின் அதிர்ந்து போனார். ஐந்தாம் பாவத்தில் செவ்வாயும், பன்னிரண்டாம் பாவத்தில் சுக்கிரனும் இருந்ததால் இந்த பிரசன்னம் பார்க்கப்படுபவர் உடலைக் கெடுக்கும் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர் என்பது தெளிவானது.

பன்னிரண்டாம் பாவம் வலுத்து அசுப கிரகப் பார்வையும் இருந்ததால் அவர் தற்போது சிறைவாசத்தில் இருப்பதும் தெரிந்தது. தனக்கு பிரசன்ன ஜோதிடத்தில் கிடைத்த தகவல்களை வந்தவரிடம் சொல்லிமுடித்தார். பிரசன்னம் பார்க்க வந்தவர் மனவேதனையுடன் தலைக்குனிந்தார். இனிமேல் ஜோதிடரிடம் எதையும் மறைக்கமுடியாது என்பதையுணர்ந்து நடந்த சம்பவங்களை எடுத்துரைத்தார். தீயபழக்கங்களுக்கு அடிமையான தன் மகன் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டான் என்ற உண்மையையும், பிரசன்ன ஆரூடத்தின் சிறப்பையும் ஒப்புக்கொண்டார்.

dd

பலதீபிகையில் "பாவசிந்தாத்யாயம்' என்ற பகுதியில் கூறப்பட்டுள்ள பாவத்பாவம் கேரள ஜோதிடர்களால் மட்டுமே சரியாகக் கையாளப்படுகிறது. ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதகரின் லக்னத்திலிருந்து கேள்விக்கு தொடர்புடைய பாவம் எதுவோ அதையே லக்னமாகக்கொண்டு, அதிலிருந்து பன்னிரண்டு பாவங்களின் பலன்களையும் சொல்லும் முறையே பாவாத்பாவம். உதாரணத்திற்கு கடக லக்ன ஜாதகரின் சொத்துகள் பற்றி அறிய ஜாதகக் கட்டத்திலுள்ள நான்காமிடமாகிய துலாத்தைக்கொண்டு பலன் அறியவேண்டும். இந்த சொத்தின்மீது வம்புதும்பு வழக்குகள் வருமா என்பதை அறிந்திட, துலாத்திலிருந்து அதன் சத்ரு ஸ்தானமாகிய மீனத்தைக்கொண்டு பலன் அறியவேண்டும். சொத்து கைவிட்டுப் போகுமா? அல்லது கைவசமாகுமா என்று அறிய, துலாத்திலிருந்து இழப்புகளைத் தரும் விரய ஸ்தானமாகிய கன்னியையும், வரவுகளைத் தரும் லாப ஸ்தானமாகிய சிம்மத்தையும்கொண்டு பலன் அறியவேண்டும். இதுவே பாவாத்பாவப்படி மிகச்சரியான வழிமுறையாகும். இந்த முறையை பிரசன்ன ஆரூடத்தில் பொருத்திப்பார்க்க துல்லியமான பலன்களைக் காணலாம்.

(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 22- திருவாதிரை- 2-ஆம் பாதம்)

மன நோயா? செய்வினைக் கோளாறா?

கேள்வி: என் மனைவி சென்ற சில ஆண்டுகளாக மனநிலைக் குழம்பிய வராகக் காணப்படுகிறார். யாரோ தனக்குள் இருந்து தன்னைக் கட்டுப்படுத்துகிறார் கள் என்றும், அதன் கட்டளையைத் தன்னால் மீறமுடியவில்லையென்றும் புலம்புகிறார். மனோதத்துவ மருத்துவர்கள் பலவிதமான சிகிச்சைகள் கொடுத்தும் பலனில்லை. மந்திரவாதிகளும், சாமியாடிகளும் சொல்லிய பலவித பரிகாரங்களைச் செய்தும் நோய் தீரவில்லை. இது செய்வினைக் கோளாறா? பிரேத சாபமா என்பதையும், அதற்கான பரிகாரத் தையும் பிரசன்ன ஆரூடத்தின்மூலம் கண்டறிந்து கூறமுடியுமா?

-நாதன், பேரூர், கோவை.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

* கேள்வி கேட்பவர் உண்மையான நோக்கத்தை அறியும் சூட்சுமத்தையும் கேரள ஜோதிடர்களால் பிரசன்ன ஆரூட சக்கரத் தைக்கொண்டு அறியமுடியும்.

*கேரள ஜோதிட ரகசியங்கள்! (10) லக்ன கேந்திரத்தில் சந்திரனும், சனியும், அஸ்தங்கதமான புதனும் இருந்தாலும்-

* சந்திரன்மீது செவ்வாய், புதனின் முழுப்பார்வை அமைந்தாலும்-

* லக்னத்தில் பாவ கிரகங்கள் வலிமை பெற்றாலும்-

* குரு, புதன் பிரசன்ன லக்னத்திற்கு பாதகத்தில் இருந்தாலும், கேள்வி கேட்பவர் தவறான நோக்கத்தை உடையவர்.

* சோழி லக்னம் குறிப்பிடும் நட்சத்திரமாகிய திருவாதிரையின் அதிபதி ராகு பன்னிரண்டாம் வீட்டில் அமர்வது பாதகம்.

* சோழி லக்னாதிபதி புதன் எட்டாமிடத்திலிருப்பது ஜாதகர் துன்பத்தில் மூழ்கியிருக்கிறார் என்று தெரிகிறது.

* சோழி லக்னத்திற்கு எட்டாமிடத்தில் ஐந்து கிரகங்கள் கூடி கிரக யுத்தத்திலிருப்பது துரதிஷ்டத்தைக் குறிக்கிறது.

* மனோகாரகனும் இரண்டாம் பாவாதிபதியாகிய சந்திரன் நீசமடைந்து கேதுவுடன் இணைந்திருப்பது ஜாதகரின் மனம் அவர் கட்டுப்பாட்டிலில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

* பிறரைத் துன்புறுத்தி சுகம் காணும் மாந்தி சோழி லக்னத்தில் அமைவது, ஜாதகரை மூன்று ஜென்மங்களில் அமானுஷ்ய பிரச்சினை தொடர்ந்து வருவதைக் குறிக்கிறது.

* மனதைக்குறிக்கும் நான்காம் வீட்டின் அதிபதி எட்டாம் வீட்டில் அமைவது, ஜாதகரின் மனம் அவர் கட்டுப்பாட்டிலில்லை என்பதைக் காட்டுகிறது.

* எட்டாமிடத்தில் புதன், சனி, குருவின் சேர்க்கை, ஜாதகர் பிரம்ம ராட்சதரால் பாதிப்படைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிரம்ம ராட்சஷர்கள் என்பவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்து இயற்கைக்கு மாறான மரணமடைந்த அந்தணர்களின் ஆன்மாக்கள். கடந்தக் கால எதிரிகளைக்கூட அவர்களால் பழிவாங்கமுடியும்.

* முற்பிறவியின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஒன்பதாமிடத்து அதிபதி சோழி லக்னத்திற்கு எட்டாமிடத்தில் இருப்பது பூர்வஜென்ம சாபத்தை விளக்குகிறது.

* குரு, கும்ப ராசிக்கு அதிசார கதியில் வரும்போது ஓரளவு தொல்லைகள் குறையும்.

* பரிகாரங்ளைச் செய்தால், ராகு மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் முழுமையான பலனைப் பெறலாம்.

பரிகாரம்

* உங்கள் ஊரிலுள்ள அருள்மிகு பட்டீஸ்வரர் கோவிலுக்கு திங்கட்கிழமைகளில் சென்று சிவனையும் மனோன்மணி அம்மனையும் வழிபட்டால் இந்தத் தொல்லை நீங்க வழிகிடைக்கும்.

* மூன்று அமாவாசைகளில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை தரிசித்து சிறப்புப் பூஜைகள் செய்தால் பூரண குணம் உண்டாகும்.

* கார்த்திகை மாத வளர்பிறை கைசிக ஏகாதசியில் விரதமிருந்து திருக்குறுங்குடிக் கோவிலில் வழிபாடு செய்தால் பிரம்மராட்சதர் தொல்லை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala190321
இதையும் படியுங்கள்
Subscribe