கேரள ஜோதிட ரகசியங்கள்! (30)

/idhalgal/balajothidam/kerala-jothida-ragasiyams-30

பிரசன்னம் பார்க்கவந்த இளம் பெண்ணின் முகத்தில் சோகம் முதுமையைக் கூட்டியது. தனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்றும், வேலை விஷயமாக வெளிநாடு சென்ற கணவர், திடீரென்று இறந்துவிட்டதாகவும் தெரிவித் தார். அந்த மரணத்தில் தனக்கு சந்தேகமிருப் பதாகவும், பிரசன்ன ஆரூடத்தின்மூலம் உண்மையை அறிய வேண்டுமென்று கூறினார்.

கிருஷ்ணன் நம்பூதிரி ஆரியங்காவு பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கினார்.

f

சோழி லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சம், அனுஷம் நான்கில் அமைந்தது. சனி சாரத்தில் இருந்து, அதில் கோட்சார கேது அமர்வது, தற்கொலை யைக் காட்டியது. மாந்தியின் அமைப்பும் அதை உறுதிசெய்தது. மனோகாரகனாகிய சந்திரனும் பாதிக்கப்பட்டதால், மனக்குழப்

பிரசன்னம் பார்க்கவந்த இளம் பெண்ணின் முகத்தில் சோகம் முதுமையைக் கூட்டியது. தனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்றும், வேலை விஷயமாக வெளிநாடு சென்ற கணவர், திடீரென்று இறந்துவிட்டதாகவும் தெரிவித் தார். அந்த மரணத்தில் தனக்கு சந்தேகமிருப் பதாகவும், பிரசன்ன ஆரூடத்தின்மூலம் உண்மையை அறிய வேண்டுமென்று கூறினார்.

கிருஷ்ணன் நம்பூதிரி ஆரியங்காவு பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கினார்.

f

சோழி லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சம், அனுஷம் நான்கில் அமைந்தது. சனி சாரத்தில் இருந்து, அதில் கோட்சார கேது அமர்வது, தற்கொலை யைக் காட்டியது. மாந்தியின் அமைப்பும் அதை உறுதிசெய்தது. மனோகாரகனாகிய சந்திரனும் பாதிக்கப்பட்டதால், மனக்குழப்பத் தால் இந்த கதி நேர்ந்தது. வேலைசெய்த அலுவலகத்தில் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்குக் காரணமானது.

பிரசன்ன ஆரூடத்தின் பலன்களை மறைக்கக் கூடாது என்பதால், வெளிப் படையாகத் தெரிவிக்கப் பட்டது. சோகமான சேதியென்றாலும், பிரசன்னம் கேட்க வந்தவருக்கு அது உண்மையென்று புரிந்தது. அவர் மனம் நிம்மதியடைந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒருவரின் தொழில் பற்றிய ஆய்வில் தசாம்ச சக்கரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதே கேரள ஜோதிடத்தின் சிறப் பாகும். தசாம்ச சக்கரத்தில் ஆறாம் வீடு வலுவாக இருந்தால் ஜாதகர் சம்பளம் பெறுபவர் எனலாம். மாறாக ஏழாமிடம் வலுவாக இருந்தால் ஜாதகர் சுய தொழிலுக்கு உரியவர். தசாம்சத் தில் ஐந்தாம் வீடு வலுப்பெறக் கூடாது.

அசுப விளைவைத் தரக்கூடியது.

* தசாம்சத்தில் ஒன்பதாம் வீடும், ஒன்பதாம் வீட்டு அதிபனும் மேலதிகாரி யைக் குறிக்கும். இவை பாதிக்கப்பட்டால் மேலதிகாரியின் தொந்த ரவு இருக்கும்.

* தசாம்சத்தில் லக்னாதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் சுயதொழில் செய்வார்.

* தசாம்ச லக்னத் துடன் ராகு தொடர்பி லிருந்தால் ஜாதகர் தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்.

* தசாம்ச லக்னம், பத்தாம் வீடு, பத்தாம் வீட்டு அதிபனும் வலுவானால் மிக நல்லது.

* தசாம்சத்தில் சூரியன் வலுவாக இருந்தால் ஜாதருக்கு நிர்வாகத் திறமை அதிக மிருக்கும்.

* தசாம்சத்தில் சனி வலுவாக இருப்பின் ஜாதகரின் சுயதொழிலில் நல்ல பணி யாளர்கள் அமைவார்கள்.

* பத்தாம் வீட்டின் அதிபதி, தசாம்ச லக்னாதிபதி மற்றும் தசாம்சத்தில் உச்சமடைந்த கிரகம் ஆகியவை தொழிலின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.

போட்டியில் வெற்றி கிடைக்குமா?

கேள்வி: இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வரும் அரசு போட்டித் தேர்வில் பங்குபெறுகிறேன்.

அதில் எனக்கு வெற்றி கிடைக்குமா?

-இராஜசேகர், விழுப்புரம்.

(பிரசன்ன ஆரூட எண்- 25; புனர்பூசம்- 1-ஆம் பாதம்) ப் போட்டித் தேர்வு களைக் குறிக்கும் சோழி லனத்தின் ஆறு மற்றும் பதினொன்றாவது பாவங் களின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கடகத்தில் நீசகதியிலிருக்கிறார். ஆனாலும் நவாம்சத்தில் கும்ப ராசி ஏறுவதால், வெற்றிக்கு பாதிப்பில்லை.

* ராசியில் செவ்வாய் நீசகதியிலிருப்பது ஜாதக ரின் அச்சத்தைக் காட்டு கிறது.

* சோழி லக்னம் குருவின் நட்சத்திரத்தில் அமைவது வெற்றி தரும்.

*சோழி லக்னத்திற்கு ஆறி லுள்ள கேது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். ஆறில் கேது இருந்தால் எதிரிகளை வெல்லலாம்.

*சோழி லக்னத்திற்கு மூன்றாம் வீடு (வெற்றி ஸ்தானம்) சிம்மம். இது அரசுத் தேர்வில் வெற்றி கிடைக்குமென்பதை உறுதிசெய்கிறது.

*சிம்ம ராசியின் அதிபதி யாகிய சூரியன் சோழி லக்னத்தில் அமைவது சிறப்பு.

*பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு ஒன்பதில் அமைவது நன்மை தரும். தெய்வ அருள் உண்டு.

*நவாம்ச சக்கரத்தில் லக்னம் மீனமாக அமைந்து, அதில் சுக்கிரன் உச்சம்பெறுவது வெற்றிக்கு வலுசேர்க்கும்.

*ஆறு, பதினொன்றாம் வீட்டதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம்பெறுவதால், பரிகாரம் தேவை. செவ்வாய்க்கிழமை திருசெந்தூர் முருகனை வழிபட்டால், வெற்றி நிச்சயம்.

bala200821
இதையும் படியுங்கள்
Subscribe