Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 159

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-159

டும் நதி, தடுக்கும் கற்களைத் தூக்கி எறிந்தும், பாறைகளைத் தாண்டிக் குதித்தும், மலைகளைப் பணிந்தும் செல்லும். அது போல் எல்லாருடைய வாழ்க்கை நீரோட்டத் திலும் தடைகள் உண்டாவது இயல்பானதே. பிரச்சினையை அணுகும்முறையே, வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும். போராடித் தோற்ற தோற்றத்துடன், பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு இளைஞர். தனக்கு, எதிரிகளால், அடிக்கடி தொல்லை வருவதாகவும், மனநிம்மதி யில்லாமல் வாழ்வதாகவும் வருந்தினார். பிரசன்ன ஆரூடத்தின்மூலம், பிரச்சினைக்கு முடிவுகாண வந்ததாகத் தெரிவித்தார். கொடுங்கலூர் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், மேஷத்தில் பரணி இரண்டாம் பாதத்திலமைந்தது. சத்ரு ஸ்தானாதிபதியாகிய ஆறாமதிபதி, புதன், ஏழாம் வீட்டிலிருந்தது பார்ப்பவரெல்லாம் பகைவர், எதிரிலிருப்பவரெல்லாம் எதிரி என்ற நிலை ஏற்பட

டும் நதி, தடுக்கும் கற்களைத் தூக்கி எறிந்தும், பாறைகளைத் தாண்டிக் குதித்தும், மலைகளைப் பணிந்தும் செல்லும். அது போல் எல்லாருடைய வாழ்க்கை நீரோட்டத் திலும் தடைகள் உண்டாவது இயல்பானதே. பிரச்சினையை அணுகும்முறையே, வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும். போராடித் தோற்ற தோற்றத்துடன், பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு இளைஞர். தனக்கு, எதிரிகளால், அடிக்கடி தொல்லை வருவதாகவும், மனநிம்மதி யில்லாமல் வாழ்வதாகவும் வருந்தினார். பிரசன்ன ஆரூடத்தின்மூலம், பிரச்சினைக்கு முடிவுகாண வந்ததாகத் தெரிவித்தார். கொடுங்கலூர் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், மேஷத்தில் பரணி இரண்டாம் பாதத்திலமைந்தது. சத்ரு ஸ்தானாதிபதியாகிய ஆறாமதிபதி, புதன், ஏழாம் வீட்டிலிருந்தது பார்ப்பவரெல்லாம் பகைவர், எதிரிலிருப்பவரெல்லாம் எதிரி என்ற நிலை ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது. ஒரு பகைவரை வெல்லுவதற்கு, சாம, தான, பேத, தண்டம் என்ற நான்குமுறைகளில் எதைப் பயன்படுத்தவேண்டும் என்பதையறிவதே வெற்றியைத் தரும். ஆறாம் வீட்டைக் கட்டுப்படுத்தும் வீடு பன்னிரண் டாம் வீடாகும். அதனாலேயே ஒரு வீட்டில் உச்சமாகும் கிரகம், உச்ச வீட்டிற்கு ஏழாம் வீட்டில் நீசமாகும். லக்னாதிபதியும், தைரிய காரகனுமாகிய செவ்வாய் கடகத்திலிருந்தது. பன்னிரண்டாம் வீட்டதிபதியாகிய குரு, பத்தாம் வீட்டில் நீசமாகியது. பிரசன்னம் பார்க்க வந்தவரின் தைரியக்குறைவே எதிரிகளின் ஆயுதமாகியது.

Advertisment

KJ

கும்பகோணம் மாவட்டம் குடவாசல் அருகிலுள்ள சேங்காலிபுரம் ஆலயத்தில் அருள்புரியும், கார்த்தவீர்யார்ஜூனரை வழிபட்டால் எதிரிகளை வெல்லலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. மனதில் பயம் நீங்கியது. பகைவரை வென்றார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

சிலருக்கு ஜனன ஜாதகம் கணிக்கப் படாமலிருக்க வாய்ப் புண்டு. அப்படியே, கணிக்கப்பட்டாலும் பிறந்த நேரம் தவறாகக் குறிக்கப்பட்டிருக் கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் பலனறிய பிரசன்ன ஜோதிடம் மட்டுமே வழியாக அமையும்.

பிரசன்ன ஜோதிடத் தின்மூலம், ஜாதகம் இல்லாதவர் களுக்கும் வழிகாட்டும்முறையே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒருவருக்கு ஜனன கால விவரங்கள் தெரியாமலிருந்தால் கணிக்கப்படும் நஷ்ட ஜாதகத்திலும் ஒரு குறிப் பட்ட கேள்விக்கு மட்டும் விடை யறிய விரும்பினாலும், பிரசன்னஆரூடத்தின்மூலம் பலன் காணலாம். கேள்வி கேட்கப்படும் நேரத்தில், பிரசன்ன ஆரூடம் கணிக்குமிடத்தில் உதயமாகும் லக்னமே பிரதானமானது. உதாரணமாக- ஒரு காரியம் நிறைவேறுமா? என்று கேட்கப்படும் கேள்விக்கு, பிரசன்ன காலத்தில் உதயமாகும் லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் வளர்மதியும் (வளர்பிறை சந்திரன்) லக்னாதிபதியும் கூடியிருந்து, குரு அல்லது யோகாதிபதிகளால் பார்க்கப்பட்டாலும், லக்னத்தில், லக்னாதிபதியும், பத்தாம் பாவாதிபதி யும் கூடி நின்றாலும், காரியம் நிறைவேறும். லக்னாதிபதிக்கும், பத்தாம் பாவாதிக்கும் நேரடி தொடர்போ, பார்வையோ இல்லாமல் போனால், காரியம் நிறைவேறாது. கர்மஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவமும், பிரசன்ன லக்னமுமே, பலன்களை முடிவு செய்யும். பிரசன்ன லக்னத்தின் அதிபதியும், பத்தாம் பாவதிபதியும் எந்தெந்த பாவங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால் காரியம் நிறைவேறும் காலத்தையும், தன்மையையும் அறியலாம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

மறு வாழ்வு கிடைக்குமா?

கேள்வி: எனக்கு திருமணமானமான ஒரு வருடத்தில், விபத்தில், கணவரை இழந்துவிட்டேன். இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், என் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகுமா? என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

* லக்னத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியாகிய செவ்வாய் ஆறாம் பாவத்திலிருப்பது மாங்கல்ய தோஷத்தைக் காட்டுகிறது.

* சோழி லக்னம் சித்திரை மூன்றாம் பாதத்தில் துலா ராசியில் வர்க்கோத்தமாகிறது.

* எட்டாமிடத்தில் சூரியன், புதன் இருப்பது, ஜாதகர் தமக்கு நேர்ந்த துயரத்தில் இருந்து மீளவில்லை என்று தெரிகிறது.

* இரண்டாம் திருமணத் திற்கான வாய்ப்பை, ஒன்பதாமிடத்தைக் கொண்டு பார்க்க அதன் அதிபதியாகிய புதன் எட்டாமிடத்திலிருப்பதால் பரிகாரம் செய்தபின் மறுமணம் செய்துகொல்வது நல்லது.

* ஏழில் ராகு, சுக்கிரன் சேர்க்கை இருப்பதால், தோஷம் வலுவாக இருக்கிறது.

பரிகாரம்

சென்னை- திருநீர்மலை சென்று, நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவிலில் பரிகார பூஜை செய்தால் திருமணதோஷம் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.

(தொடரும்)

செல்: 63819 58636

Advertisment
bala020224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe