Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 158

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-158

ட்சத்திரங்கள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டி ருந்தாலும், இரவில் மட்டுமே தெரிகின் றன. ஜோதிடத்தின் மேன்மை, எல்லா காலத்திலும் வழி காட்டியாக இருந்தாலும், ஆபத்து வரும்போது மட்டுமே, மக்கள் அதை மதிக்கிறார்கள். பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகம், கவலையால், இருண்டிருந்தது. தான், தோல் நோயால், பல ஆண்டுகளாக அவதிப்படுவதாக வருந்தினார். மருத்துவச் சிகிச்சையால், எந்த பலனும் கிடைக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரம் தேடி வந்திருந்தார். காடாம்புழா பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், மேஷ ராசியில் கேதுவின் சாரத்தில் அமைந்தது. சனிபகவானும், சந்திரனும், ஆறிலமர்ந்து, நோயின் தீவிரத்தைக் காட்டியது. ஆறாமதிபதியாகிய புதன், ராகுவின் இணைவில், எட்டாம் வீட்டிலமைந்தது. சோழி லக்னாதி பதியும், தோலுக்கும், ஆரோக

ட்சத்திரங்கள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டி ருந்தாலும், இரவில் மட்டுமே தெரிகின் றன. ஜோதிடத்தின் மேன்மை, எல்லா காலத்திலும் வழி காட்டியாக இருந்தாலும், ஆபத்து வரும்போது மட்டுமே, மக்கள் அதை மதிக்கிறார்கள். பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகம், கவலையால், இருண்டிருந்தது. தான், தோல் நோயால், பல ஆண்டுகளாக அவதிப்படுவதாக வருந்தினார். மருத்துவச் சிகிச்சையால், எந்த பலனும் கிடைக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரம் தேடி வந்திருந்தார். காடாம்புழா பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், மேஷ ராசியில் கேதுவின் சாரத்தில் அமைந்தது. சனிபகவானும், சந்திரனும், ஆறிலமர்ந்து, நோயின் தீவிரத்தைக் காட்டியது. ஆறாமதிபதியாகிய புதன், ராகுவின் இணைவில், எட்டாம் வீட்டிலமைந்தது. சோழி லக்னாதி பதியும், தோலுக்கும், ஆரோக்கியத் திற்கும் காரகனான, செவ்வாய், பன்னிரண்டிலமர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தது. நாகப் பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கோலக்காவில் அருள் புரியும், சப்தபுரீஸ்வரரை வழிபட்டால், தோல் நோய் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. சூரியனின் தொழுநோய் தீர்த்த, திருத்தாள முடையாரின் அருளால் பிரசன்னம் பார்க்கவந்தவர், மேகப்புண் நீங்கி, மோகன வடிவம் பெற்றார்.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

சில ஜாதகங்களில் கிரகங்கள் உச்சமாகி ராஜயோகத்தை தரும் இடத்தில் இருந்தாலும், அந்த ஜாதகர், வாழ்க்கை முழுவதும் துன்பத்திலேயே உழல் கிறது. இதற்கு காரணம், அவருக்கு யோகத் தைத் தரவேண்டிய கிரகங்கள், அவயோகியின் தொடர்பில் இருப்பதுதான். ஒரு ஜாதகத்தை ஆராயும்போது, முதலில், யோகி, அனு யோகி, அவயோகிகளைக் கண்டறிவதே, கேரள ஜோதிடத் தின் சிறப்பு.

சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை = யோகி இந்த மூன்றின் கூட்டுத் தொகையை மேஷத்தை முதலாகக் கொண்டு கணக்கிட எந்த நட்ச்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி, அந்த ராசியின் அதிபதி அனுயோகி. யோகியின் நட்சத்திரலிருந்து கணக்கிடவரும் ஆறாவது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகியாகும். யோகியும், அனுயோகியும் நல்ல பலன்களையும், அவயோகி தீய பலன்களையும் தருவார்கள். ஒரு ஜாதகத்தில் யோகி என்பவர் மிகச்சிறந்த பலனை அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்குவார். யோகி கெடாமல் நல்ல நிலையில் உள்ள ஜாதகங்கள் யோக ஜாதகங்கள் ஆகும். யோகியும், அணுயோகியும், தசாபுக்திக்கு அப்பாற்பட்டு அந்த ஜாதகருக்கு நல்ல பலன் களைத் தருவார்கள். ஒரு ஜாதகத்தில் யோகியானவர் வக்ரம் நீசமாகாமல் இருந்தால் மட்டுமே, நற்பலன்கள் ஏற்படும். அவயோகி ஆறு அல்லது எட்டுக்குடையவரின் சாரம் அஸ்தங்கதம் வக்ரம் பெற்றிருந்தால் கெடுபலன்கள் குறையும். யோகியானவர் அவ யோகியின் சாரம் பெற்றா லும் அவயோகியானவர் யோகியின் சாரம் பெற்றாலும் கெடு பலன்களையே கொடுப் பார்கள் என்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.

குடும்ப சண்டை தீருமா?

கேள்வி: எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. சமீப கலமாக, எனக் கும், என் மனைவிக்கும் அடிக்கடி, தகுந்த காரண மில்லாமல் சண்டை உண்டாகிறது. இந்த விவகாரம், விவாகரத்தில் முடியுமா? என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

(பிரசன்ன எண்- 45; உத்திராடம்- முதல் பாதம்; ராசி, நட்சத்திராதிபதி- சூரியன்).

(சோழி லக்னம், பிரசன்ன லக்னம்- சிம்மம்; சூரியன், ராகு, புதன்- மேஷம்; குரு- மீனம்; சனி- கும்பம்; சந்திரன், சுக்கிரன்- ரிஷ பம்; செவ்வாய்- மிதுனம், கேது- துலாம்.)

* சோழி லக்னத்திற்கு ஏழில் சனிபகவான் அமர்ந்து, லக்னத்தைப் பார்பது, மனைவியுடன் ஏற்பட்ட மன வேறுபாட்டை குறிக்கிறது.

* லக்னம், நட்சத்திர அதிபதியாகிய சூரியன், சோழி லக்னத்திற்கு பாதகத் தில் இருப்பது, கணவன்- மனவியின் அந்தரங்க உறவில் ஏற்பட்ட திருப்தியின் மையே பிரிவுக்குக் காரணம் என்பதைத் தெரிவிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு ஒன்பதில் ராகு இருப்பது, கணவரின் நடத்தையிலுள்ள சந்தேகத்தால் இல்வாழ்க்கையில் பிரச் சினை உண்டானது. இதனாலும், திரு மண வாழ்க்கை கடினமாக மாறியது.

* தெய்வத்தின் அருளைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில் ராகுவும், சூரியனும் அமர்ந்துவிட்டதால் பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டது.

* குருபகவானின் ஏழாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின்மீது பதிவதால், பரிகாரம் செய்தால், கெடுபலன்கள் குறையும்.

பரிகாரம்

நாமக்கல் மாவட்டத்தில் திருசெங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று பரிகார பூஜைசெய்தால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala260124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe