Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 157

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-157

சு மந்தைக் கூட்டத்தில் ஒரு கன்றானது தாய் பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல ஒருவன் செய்த நல்ல கர்மங்களின் விளைவும் தீய கர்மங்களின் விளைவும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. எவனும் எப்பொழுதும் ஒரு கணம்கூட கர்மம் செய்யாமல் இருக்கமுடியாது. பித்ரு கர்மாவை சரிவர செய்யாதவரின் யோகப் பலன்கள் பயனளிக்காமல் போகும். வாழ்வில் துன்பம் மட்டுமே மிஞ்சும். பிரசன்னம் பார்க்கவந்தவரின் சோகமும் பதற்றமும் அவருடைய நிலைமை யைத் தெளிவாக விளக்கியது. தன் குடும்பம் அடிக்கடி நோயாலும் விபத்தாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியின்றி வாடுவதாகத் தெரிவித்தார். அதன் காரணத்தையறிந்து, பரிகாரம் தேடவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். கொட்டன்குளக்கரா தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், ரிஷப ராசியில் மிர

சு மந்தைக் கூட்டத்தில் ஒரு கன்றானது தாய் பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல ஒருவன் செய்த நல்ல கர்மங்களின் விளைவும் தீய கர்மங்களின் விளைவும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. எவனும் எப்பொழுதும் ஒரு கணம்கூட கர்மம் செய்யாமல் இருக்கமுடியாது. பித்ரு கர்மாவை சரிவர செய்யாதவரின் யோகப் பலன்கள் பயனளிக்காமல் போகும். வாழ்வில் துன்பம் மட்டுமே மிஞ்சும். பிரசன்னம் பார்க்கவந்தவரின் சோகமும் பதற்றமும் அவருடைய நிலைமை யைத் தெளிவாக விளக்கியது. தன் குடும்பம் அடிக்கடி நோயாலும் விபத்தாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியின்றி வாடுவதாகத் தெரிவித்தார். அதன் காரணத்தையறிந்து, பரிகாரம் தேடவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். கொட்டன்குளக்கரா தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், ரிஷப ராசியில் மிருகசிரீட நட்சத்திரத்தின் முதல் பாதத்திலமைந்தது. ஒன்பதாமிடமும் பாதக ஸ்தானமுமாகிய மகரத்தில் குருபகவான் ராகுவுடன் இணைந்திருந்தது. ஒன்பதாம் வீட்டுக்கு உடையவரான சனிபகவான் விரயத்தில் இருந்ததாலும் மறைந்த முன்னோர் கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டியது. பித்ரு காரியங்களை சரிவர செய்யாததால் அவருக்கு தொல்லைகள் உண்டாவதைத் தெளிவாக்கியது. திருப்புள்ளானி (இராமநாதபுரம்) சென்று, திலா ஹோமம் செய்தால் பித்ரு சாபம் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தின் பலனால் துன்பம் நீங்கி சுகம்பெற்றார்.

Advertisment

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

நீண்டகாலமாக தொல்லை தரும் நோயை குணமாக்க, நல்ல நாளில் சிகிச்சையைத் தொடங்கவேண்டும். சிகிச்சை தொடங்குவதற்கான சாதகமான நாளையும் நேரத்தையும் கணக்கிடும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. தாராபலம், சந்திர பலம், பஞ்சகம் பார்க்கவேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு முக்கியமாக மிருத்தியு பஞ்சகம் மற்றும் ரோக பஞ்சகம் கூடாது. பௌர்ணமி திதி கூடாது. செவ்வாய் மற்றும் புதன் இருவரும் வக்ரநிலை அடையும்போது அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்கவேண்டும்... பௌர்ணமி- பிரதமை, அமாவாசை- பிரதமை மற்றும் துவாதசி- ஏகாதசி ஆகிய திதிகளுக்கு இடையே யான இரண்டு விநாழிகைகள், அபாயத்தையும், மிகுந்த கெடுதலையும் தரும் காலமாகும். கோட்சாரத்தில், நோயாளியின் லக்னத்தி-ருந்தோ அல்லது சந்திரா லக்னத்தி-ருந்தோ 4 மற்றும் 7-ஆம் பாவங்களில், அசுப கிரகங்கள் இடம்பெறக் கூடாது. அறுவை சிகிச்சை செய்யப்படும் காலத்தில் சந்திரன் மிருத்யு பாகைகளில் இருந்தால் அது நோயாளியை பாதிக்கும்.

(மேஷத்தி-ருந்து மீனம் வரையிலான மிருத்யு பாகைகள் முறையே- 08ளி 25ளி 22ளி 22ளி 21ளி 01ளி 04ளி 23ளி 18ளி 20ளி 20ளி 20ளி). சந்திரன் மேஷத்தில் இருக்கும்போது மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. கோட்சாரச் சந்திரன், ஜனனச் சந்திரனைச் சந்திக்கும்போது அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்கவேண்டுமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

திருமணத்தடை விலகுமா?

கேள்வி: எனக்கு 36 வயதாகிறது. திருமண பாக்கியம் கைகூடி வரவில்லை.நல்லமனைவி அமையும் வாய்ப்பு உண்டா? அதற்கு செய்யவேண்டிய பரிகாரம் என்ன?

(சோழி லக்னம்- மேஷம்; பிரசன்ன லக்னம்- விருச்சிகம்; குரு- மேஷம்; சனி- கும்பம்; சுக்கிரன், கேது- கன்னி; சூரியன், செவ்வாய்- துலாம்; புதன்- விருச்சிகம்; சந்திரன்- சிம்மம்.)

* சோழி லக்னாத்தின் ஏழாம் அதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியு மாகிய, சுக்கிரன் நீசத்தில் இருப்பதால் களத்திர தோஷமிருப்பதைத் தெளிவாக்குகிறது.

* ஏழாம் அதிபதி சுக்கிரனுடன் கேது இருப்பதால் கூடிவரும் திருமண தொடர்புகள் முழுமை பெறாமல் போவதைக் குறிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு எட்டில் பிரசன்ன லக்னம் அமைவது ஜாதகரின் மனக் கவலையைக் காட்டுகிறது.

* ஏழாமிடத்தில் நீச சூரியனும், செவ்வாயும் இணைந்திருப்பதும் சாதகமான பலனைத் தராது.

* சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானத் தி-ருக்கும் சனிபகவான் தன் மூன்றாம் பார்வையால் சோழி லக்னத்தை பார்ப்பதால் தடையும் தாமதமும் ஏற்பட் டதை அறியமுடிகிறது.

* சோழி லனத்தில் குரு அமர்ந்து ஏழாமிடத்தைப் பார்ப்பதால் பரிகாரத்தால் பலன் உண்டாகும்.

பரிகாரம்

* கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் துர்க்கைக்கு நெய் தீபமேற்றி பரிகார பூஜைசெய்தால் திருமணத்தடை விலகுமா?

(தொடரும்)

செல்: 63819 58636

Advertisment
bala190124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe