Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 156

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-156

பாம்பு கடியின் விஷத்தால் இறப்ப வர்களைவிட பயத்தால் இறப்ப வர்களே அதிகம். பயத்தை வெளிக்காட்டுவதே அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும். சோகம், பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் சோகை யைக் காட்டியது. தனக்கு மாரகாதிபதி தசை நடப்ப தாகவும் கனவிலும் தனக்கு அடிக்கடி இறந்து போவது போன்ற காட்சி வருவதாக சொல்லி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம் தன் அச்சத்தைப் போக்க வேண்டும் என்ற கோரிக் கையை வைத்தார். காடாம்புழா பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், அனுஷம் மூன்றிலமைந்தது. ஆயுள் காரகனாகிய சனி பகவானின் சாரத்தில் லக் னம் அமைந்ததே ஆறுத லைத் தந்தது. எட்டாம் அதிபதி வலுவுடன் இருந்தார். சூரியன்மீது ராகு பயணிக்கும் அமைப்பால் மனதில் பயம் உண்டா னதை அறியமுடிந்தது. மனோ காரகனாகிய சந்திர னும், கேதுவின் சாரத்திலிருந்ததால

பாம்பு கடியின் விஷத்தால் இறப்ப வர்களைவிட பயத்தால் இறப்ப வர்களே அதிகம். பயத்தை வெளிக்காட்டுவதே அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும். சோகம், பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் சோகை யைக் காட்டியது. தனக்கு மாரகாதிபதி தசை நடப்ப தாகவும் கனவிலும் தனக்கு அடிக்கடி இறந்து போவது போன்ற காட்சி வருவதாக சொல்லி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம் தன் அச்சத்தைப் போக்க வேண்டும் என்ற கோரிக் கையை வைத்தார். காடாம்புழா பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், அனுஷம் மூன்றிலமைந்தது. ஆயுள் காரகனாகிய சனி பகவானின் சாரத்தில் லக் னம் அமைந்ததே ஆறுத லைத் தந்தது. எட்டாம் அதிபதி வலுவுடன் இருந்தார். சூரியன்மீது ராகு பயணிக்கும் அமைப்பால் மனதில் பயம் உண்டா னதை அறியமுடிந்தது. மனோ காரகனாகிய சந்திர னும், கேதுவின் சாரத்திலிருந்ததால் தேவையற்ற கவலையும், மரணபயமும் காரணமாக அமைந்தது. மாரக தசையில் ஒருவர் இறக்க வேன்டும் என்ற அவசியமில்லை என்ற கருத்து தெளிவுபடுத்தப் பட்டது. மாரக தசை மரணத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தருமேயல் லாமல் இறப்பைத் தரும் என்று உறுதியாக கூறமுடியாது. ஜோதிடத்தை அனுபவத்தாலும், நுண்ணறிவாலுமே அறியமுடியும், நூலறிவால் அளக்க முடியாது என்பதும் தெளிவாக்கப்பட்டது. திருக்கடையூர் சென்று, ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் பிறந்த நட்சத்திரநாளன்று மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்தால் மரணபயம் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

மந்தனின் (சனி) புதல்வன் மாந்தி. சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல் பாவ கிரகங்களில் அடங்குபவன். மாந்தி இருக்கும் ராசிநாதன், சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான். திருமணப் பொருத்த விஷயத்தில் மாந்தியையும் சேர்த்து பலன் கூறுவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன் ஆண் ஜாதகத்தில் ஏழிலிருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் ஏழிலிருந்தால் கணவனை இழப்பாள். மாந்தி, லக்னத்தில் இருந்தால் சிந்திக்கும் திறன் குறையும். பாபிகளுடன் இணைந் தால் ஏமாற்றுபவனாக மாறுவான்;. இரண்டில் பாவ கிரகத்துடன் இணைந்தால் ஏழ்மையில் தவிப்பான். மூன்றில் இருந்தால் ஜாதகர் உடன்பிறந்தாரை இழப்பார். நான்காவது வீட்டில் அமைந்தால் கல்வி, வீடு, நிலபுலன்கள் இழக்கச்செய்வார். ஐந்தில் இருந்தால், தவறான செயல்களில் ஈடுபடசெய்வார். ஆறில் இருந்தால் எதிரிகளை கொடூரமாக அழிப்பார். ஏழிலிருந்தால் குடும்பத்தில், சண்டை, சச்சரவை ஏற்படுத்துவார். எட்டிலிருந்தால், எதிபாராத விபத்துகளுக்கு வாய்ப்பு உண்டு. ஒன்பதில் இருந்தால், தந்தையோடு பகை உண்டாகும். பத்திலிருந்தால், தொழிலில் ஏமாற்றம் தருவார். பதினோராமிடத்திலிருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு ஆகியவற்றைக் கொடுக்கும். பன்னிரண்டில் இருந்தால் வறுமையில் வாடுவாரென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

சுய தொழிலில் வெற்றி உண்டா?

கேள்வி: நான், சுயதொழில் செய்ய உள்ளேன். அதில் வெற்றி கிடைக்குமா?

(எண்- 35; ஆயில்யம்- 3; நட்சத் திராதிபதி- புதன்; ராசியாதிபதி- சந்திரன்)

(சோழி லக்னம்- கடகம்; பிரசன்ன லக்னம்- மகரம்; சூரியன்- விருச்சிகம்; சந்திரன்- தனுசு; குரு- தனுசு; புதன், சுக்கிரன்- துலாம்; சனி- மகரம்; செவ்வாய்- மீனம்; ராகு- ரிஷபம்; கேது -விருச்சிகம்.)

* சோழி லக்னத்தில் இரண்டாமதிபதி யாகிய சூரியனின் சாரத்தில் ஆறாமதி பதியாகிய குரு தொடர்பிலிருப்பது தொழில் தொடங்குவதைத் தெரிவிக்கிறது.

* பத்தாமதிபதியாகிய செவ்வாயின் ராசியில் சூரியன் அமர்வதும், சுய தொழிலைக் குறிக்கிறது.

* பதினோராமிடமாகிய லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

* லக்னம் புதன் சாரம் பெற்றிருப்பதால் வாடிக்கையாளர்களுடன் வியாபாரத்தின் ஒப்பந்தங்களை பதிவு செய்துக்கொள்வதே நல்லது.

* சனிபகவானின் ஏழாம் பார்வை லக்னத்தில் பதிவதால் தொழிலாளர்களால் சில பிரச்சினைகள் வரலாம்.

* வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தையும் வாழ்வில் ஏற்படக்கூடிய சுகங்களையும் பதினோராம் வீட்டிலிருக்கும் ராகு உறுதிசெய்கிறது.

* லக்னாதிபதி ஆறிலிருப்பதால் வியாபாரத்தில் பலவழிகளில் செல்வம் வந்தாலும் ஏற்றதாழ்வு வரும். தொழிலில் கடன் வாங்குவதில் எச்சரிக்கைத் தேவை.

பரிகாரம்

* பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்கினால் தொழில் வளமாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala120124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe