Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 153

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-153

ண் இல்லாதவர் விளக்கின் உஷ்ணத்தை அறிவார். ஆனால் ஒளியை அறியமாட்டார். வாழ்க்கையில் வரும் ஆபத்துகளை அனுபவிக்கும் மனிதர் அதன்காரணத்தை அறியமாட்டார். ஒருவர் செய்த தவறுகளுக்கான தண்டனையே துன்பங்களாக வந்துசேருகிறது. பிரசன்னம் பார்க்க வந்தவரின் பதட்டம், அவருடைய பிரச்சினைக்கான விடையைத்தேடி அலைகிறார் என்பதைத் தெளிவாக்கியது. தான் ஒரு பேராசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், தான் செய்யாத தவறுக்கு சிறை சென்றதாகவும் கூறி வருந்தினார். இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுக்கு காரணமறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். கொடுங்ககலூர் பகவதியை வ

ண் இல்லாதவர் விளக்கின் உஷ்ணத்தை அறிவார். ஆனால் ஒளியை அறியமாட்டார். வாழ்க்கையில் வரும் ஆபத்துகளை அனுபவிக்கும் மனிதர் அதன்காரணத்தை அறியமாட்டார். ஒருவர் செய்த தவறுகளுக்கான தண்டனையே துன்பங்களாக வந்துசேருகிறது. பிரசன்னம் பார்க்க வந்தவரின் பதட்டம், அவருடைய பிரச்சினைக்கான விடையைத்தேடி அலைகிறார் என்பதைத் தெளிவாக்கியது. தான் ஒரு பேராசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், தான் செய்யாத தவறுக்கு சிறை சென்றதாகவும் கூறி வருந்தினார். இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுக்கு காரணமறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். கொடுங்ககலூர் பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்தின் அதிபதி, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீட்டோடு தொடர்பிலிருந்தார். ஆறாம் வீட்டோன், சனி, ராகுவுடன் இணைந்து, பந்தன யோகத்தைக் காட்டினார். பத்தாம் பாவம், பட்சி திரோகாணத்திலமைந்ததால், பட்சி சாபமும் தெளிவாகத் தெரிந்தது. அவர் பறவைகளை கூண்டிலடைத்து வைத்து துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டார். எந்த தவறும் செய்யாத பறவைகளை கூண்டிலடைப்பது, தீவினையை கூட்டும். அவற்றை சுதந்திரமாக பறக்க விடுவதே பரிகாரமாகக் கூறப்பட்டது. பரிகாரம் பலித்தது. பறவைகளும், மனக்கவலைகளும் பறந்து விட்டன.

Advertisment

lkk

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பொதுவாக, ஒரு ஜாதகத் தில் யோகாதிபதி, பாதகாதி பதி, மாரகாதிபதியை லக்னத் தைக்கொண்டும் ராசியைக் கொண்டும் கணக்கிடுகிறோம். அதுபோல் ஒவ்வொறு பாவத்திற்குமான யோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி களையறிந்து பலன் கூறுவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. உதாரணத்திற்கு கடக லக்னத்திற்கு யோகாதிபதியாகிய செவ்வாய் அதற்கு ஏழாம் பாவமும், களத்திர ஸ்தானமுமாகிய மகரத்திற்கு மாரகனும் பாதக ஸ்தானாதிபதியுமாகிறார். அதனால் கடக லனக்காரர்கள் செவ்வாய் புக்தியில் திருமணத்தைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், கடக லக்னத்திற்கு நான்காம் பாவமாகிய துலா ராசிக்கு, யோகாதிபதியாகிய சனியின் புக்தியில் வீடு, வாகனங்களை வாங்குவது, சிறந்த பலனைத் தரும். அந்தந்த பாவகாரகங்களுக்கேற்ப யோகாதிபதிகளையும், பாதகாதிபதிகளையும் அறிந்து செயலாற்றினால் நன்மை யடையலாம் என்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

மன நோய் நீங்குமா?

கேள்வி: என் மகளுக்கு இருப்பதைந்து வயதாகிறது. சில வருடங்களாக அவள் மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகி றாள். நோய் நீங்க பரிகாரம் உண்டா?

dd(பிரசன்ன எண்- 70; கேட்டை- இரண்டாம் பாதம்; நட்சத்திராதிபதி- புதன்; ராசியாதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னத்திற்கு எட்டில் பிரசன்ன காலத்து லக்னம் அமைவதும், அதில் மனோகாரகனாகிய சந்திரன் அமர்வதும், மன நோயின் தாக்கத்தைக் காட்டுகிறது.

* குரு, சூரியன், ராகு, புதன் ஆகிய கிரகங்கள் ஆறாம் வீட்டில் கிரக யுத்தத்திலிருப்பதும் நோயின் கடுமையைக் குறிக்கிறது.

* பன்னிரண்டில் தனித்திருக்கும் கேது நோயாளியின் விரக்தியான மனோ நிலைமையை விளக்குகிறது.

* சோழி லக்னாதிபதி செவ்வாயும் எட்டாமிடத்திலிருப்பதால் நோய் குணமாக நீண்ட நாளாகும் என்பதையே அறியமுடிகிறது.

பரிகாரம்

* சென்னை- கடம்பத்தூர் அருகேயிருக்கும் அகரம் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ மனோன்மணி தேவியை வணங்கினால் மன நோய் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala221223
இதையும் படியுங்கள்
Subscribe