Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 151

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-151

குழலோசையும், யாழோசையும் தரும் இனிமையைக் காட்டிலும், மகிழ்ச்சி தரக்கூடியது மழலையின் சொல். காய்காத மரம்போல் மழலை செல்வமில்லாத வாழ்க்கை பாழாகும். சூரியனும், சந்திரனும் இணைந்து வந்ததுபோல், கருத்து ஒருமித்த தம்பதி பிரசன்னம் பார்க்க வந்திருந்தார்கள்.

Advertisment

அமாவாசையின் இருள் முகத்தில் தெரிந்தது. திருமணமாகி பத்தாண்டுகளாகியும், குழந்தை பாக்கியம் இல்லையென்ற தங்கள் மனக்குறையை இறக்கி வைத்தார்கள்.

ஸ்ரீ பரமரா தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்தின் அதிபதியும், ஐந்தாம் வீட்டோனும், இதஸல யோகத்திலிருந்தது. (வேகமாக செல்லும் கிரகம் குறைவான பாகையிலிர

குழலோசையும், யாழோசையும் தரும் இனிமையைக் காட்டிலும், மகிழ்ச்சி தரக்கூடியது மழலையின் சொல். காய்காத மரம்போல் மழலை செல்வமில்லாத வாழ்க்கை பாழாகும். சூரியனும், சந்திரனும் இணைந்து வந்ததுபோல், கருத்து ஒருமித்த தம்பதி பிரசன்னம் பார்க்க வந்திருந்தார்கள்.

Advertisment

அமாவாசையின் இருள் முகத்தில் தெரிந்தது. திருமணமாகி பத்தாண்டுகளாகியும், குழந்தை பாக்கியம் இல்லையென்ற தங்கள் மனக்குறையை இறக்கி வைத்தார்கள்.

ஸ்ரீ பரமரா தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்தின் அதிபதியும், ஐந்தாம் வீட்டோனும், இதஸல யோகத்திலிருந்தது. (வேகமாக செல்லும் கிரகம் குறைவான பாகையிலிருந்து மெதுவாக செல்லும் கிரகத்தின் பின்னாலிருப்பதே, இதஸல யோகம். இது நன்மை தரும்.) துலாம், சோழி லக்னமாகி ஐந்தாமிடமாகிய கும்பத்தில், சனிபகவானுக்கு பின்னால் சுக்கிரன் நின்றது. லக்னாதிபதியும், ஐந்தாம் வீட்டோனும், ஆண் ராசியாகிய கும்பத்தில் நின்றதால், ஆண் குழந்தை பிறக்குமென்ற உறுதி கிடைத்தது. ஆனா லும், மகரத்தில், சூரியனின் நட்சத்திரத்தில், கேது அமைந்தது. குருவின் பார்வையும் ஐந்தாமிடத்திற்கு கிடைக்கவில்லை. பரிகாரம் செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்குமென்ற ஆறுதல் சொல்லப்பட்டது. வியாழக்கிழமை, சந்தான கோபால ஹோமம் செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. தாரா பலம், சந்திர பலத்தை கருத்தில்கொண்டு கணிக்கபட்ட நாளில் செய்த ஹோமத்தால் பலன் கிடைத்தது. வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கு வழிதெரியாமல் கலங்கி நிற்பவர்களுக்கு, ஒளி காட்டும், கலங்கரை விளக்கமாக, பிரசன்னம் ஆரூடம் விளங்குகிறது என்பதே உண்மை.

ff

Advertisment

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்ன ஆரூடத்தில் பிரசன்ன காலத்தில் உதயமாகும் லக்னத்தின் தன்மையைக்கொண்டு பலனறியும் முறையே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. பிரசன்ன லக்னம், சர ராசியில் உதயமானால், களவுபோன பொருள் கிடைத்துவிடும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். பிரசன்னம் பார்க்க வந்தவரின் கவலை நீங்கி வெற்றியுண்டாகும். பிரசன்ன லக்னம், ஸ்திர ராசியில் உதயமானால், பிரசன்னம் பார்க்க வந்தவரின் கோரிக்கை நிறைவேறாது.

சுப காரியங்களில் தடையுண்டாகும். பிரசன்ன லக்னம், உபய ராசியில் உதயமானால், ராசியின்முதல் பகுதியை (0-15 பாகை) ஸ்திர ராசியாகக்கொண்டு, காரியத் தடையயும், இறுதி பகுதியை (16-30 பாகை)சர ராசியாகக்கொண்டு வெற்றியையும் அறிய வேண்டுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

வலிப்பு நோய் குணமாகுமா?

கேள்வி: நான் சில ஆண்டுகளாக, வலிப்பு நோயால் அவதிப்படுகிறேன். என் நோய் தீருமா? பரிகாரம் உண்டா?

(பிரசன்ன எண்-22; திருவாதிரை- இரண்டாம் பாதம்; நட்சத்திராதிபதி - ராகு; ராசியாதிபதி -புதன்.)

* சோழி லக்னம் அமைந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியான ராகு, வாத நோயால் ஏற்பட்ட தொல்லையைக் காட்டுகிறது.

* லக்ன கேந்திரத்தில், சுக்கிரன் சந்திரனுடன் இணைவதும், சர்ப கிரகங்கள் அமைவதும், நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட கோளாறை உறுதிசெய்கிறது.

* லக்னாதிபதியே ரோகஸ்தானமாகிய ஆறாமிடத்திலிருப்பதால் நோயின் கடுமையை அறியமுடிகிறது.

* பிரசன்ன காலத்து லக்னமும் எட்டாமிடத்தில் அமைவதால், நோய் நீங்க பல காலமாகும் என்பதே உண்மை.

* பரிகாரத்தால் நோய் நீங்கும்.

பரிகாரம்

* சனிபகவானின் வாத நோயைத் தீர்த்த ஸ்தலமாகிய திருவாதவூர் திருமறைநாதர் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டால் வலிப்புநோய் தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala081223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe