Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 149

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-149

லைமான், தன் கொம்பின் அழகில் பெருமிதம் கொள்ளும். ஒருநாள், கொம்பின் கிளை, மரக்கிளையினில் மாட்டிக்கொள்ளும். ஓடமுடியாத மான், புலியின் பசிக்கு, பெரு விருந்தாகும். எதை நம் வலிமை என்று எண்ணுகிறோமோ, கால மாற்றத்தால், அதுவே, நமக்கு பாதகமாகவும் மாறும் என்பதே விதி. பிரசன்னம் பார்க்க வந்தவரின், நடை, உடை, பாவனையில், அதிகாரமும், ஆளுமையும் வெளிப்பட்டது. தான் காவல்துறையில், உயர்பதவியிலிருந்த தாகவும், நிர்வாக சிக்கலால் நிகழ்ந்த தவறு, தன் பதவியை பறித்துவிட்டதாகத் தெரிவித்தார். மறுபடியும் அந்த பதவி கிடைக் குமா? என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். மாங்கோட்டுக்காவு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி ல

லைமான், தன் கொம்பின் அழகில் பெருமிதம் கொள்ளும். ஒருநாள், கொம்பின் கிளை, மரக்கிளையினில் மாட்டிக்கொள்ளும். ஓடமுடியாத மான், புலியின் பசிக்கு, பெரு விருந்தாகும். எதை நம் வலிமை என்று எண்ணுகிறோமோ, கால மாற்றத்தால், அதுவே, நமக்கு பாதகமாகவும் மாறும் என்பதே விதி. பிரசன்னம் பார்க்க வந்தவரின், நடை, உடை, பாவனையில், அதிகாரமும், ஆளுமையும் வெளிப்பட்டது. தான் காவல்துறையில், உயர்பதவியிலிருந்த தாகவும், நிர்வாக சிக்கலால் நிகழ்ந்த தவறு, தன் பதவியை பறித்துவிட்டதாகத் தெரிவித்தார். மறுபடியும் அந்த பதவி கிடைக் குமா? என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். மாங்கோட்டுக்காவு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், ரிஷபத் தில் வர்க்கோத்தமமாக அமைந்தது. லக்னத் தில் உச்சம்பெற்ற சந்திரன் இருந்ததால், புகழ், கீர்த்தி, அதிகாரமான பதவியைத் தெரிவித்தது. செவ்வாயும் உச்சம்பெற்று, அவர் பதவி வகிக்கும், காவல்துறையை உறுதிசெய்தது.யோகாதிபதியும், பாதகாதிபதியுமான சனி பகவான், துலாத்திலமைந்தது. ஆறாம் அதிபதியும் பதினோராம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் தனது செல்வாக்கை இழக்கவேண்டிய நிலை வந்தது. அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி யதால் வந்த தொல்லை என்பதை அறிய முடிந்தது. அச்சரபாக்கத்தில் அருள்பாலிக் கும், ஆட்சீஸ்வரரை வணங்கி, செய்த தவறுக்கு வருந்தினால், இழந்த பதவியைப் பெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது.பரிகாரத்தால், அந்த அதிகாரிக்கு, இழந்த பதவியும், நல்லபடிப் பினையும் கிடைத்தது.

Advertisment

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, மந்தனின் மகனாகிய மாந்தியே காரண மாகிறார். மாந்தி யின் நிலையை யும், அவர் தொடர்பு கொள்ளும் கிரகங்களின் தன்மையையும் கருத்தில்கொண்டு, பலனறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. மாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம், தான் இருக்குமிடத் திற்குமுன்னே உள்ள இடத்தையும், தான் இருக்குமிடத்திற்கு பின்னே உள்ள இடத்தையும் பார்க்கும் வலிமையை பெற்றவர். மாந்தி நின்ற ராசியாதிபதி, கேந்திரம் திரிகோணம் ஆகியவற்றில் அமையப்பெற்றால், எதிர்பாராத பெரும் செல்வத்தைத் தருவார்.

லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன் னிரண்டில் சந்திரனுடன் மாந்தி இணைந்தால் ஜாதகர் துர் ஆவிகளினால் துன்புறுத்தப் படுவார். லக்னத்திற்கு நான்கில் கேதுவும் மாந்தியும் சேர்க்கைப் பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்டமாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங் களிலும் தோல்வியே காணப்படும். லக்ன கேந்திரத்தில் மாந்தி இருப்பின் ஜாதகர் பல குற்றங்களைப் புரிவார். ஏழாமிடத் தில் மாந்தி அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் நிம்மதி யற்ற நிலையும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு துன்பம் உண்டாகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

கல்வி உதவித்தொகை கிடைக்குமா?

கேள்வி: நான் உயர் கல்வி யைத் தொடருவதற்காக, கல்வி உதவித் தொகை தேவைப் படுகிறது. அதற்காக ஒரு அறக் கட்டளையின்மூலம் விண்ணப் பித்துள்ளேன். அது கிடைக்குமா? பரிகாரம் உண்டா?

(பிரசன்ன எண்- 50; ஹஸ்தம்- இரண்டாம் பாதம்; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- புதன்.)

* சோழி லக்னாதிபதி, லக்னத் தில் உச்சம்பெற்ற அமைப்பு, கல்வியில் வெற்றிபெறும் நிலை யைக் காட்டுகிறது.

* புதனுடன்கூடிய சூரியன், புதாதித்ய யோகத்தை குறிப்பதால், கல்வியில் வளர்ச்சி உண்டு; தடையில்லை.

* பிரசன்ன கால லக்னம் திரிகோணத்திலமைவது சிறப்பு.

* ராகுவுடன் குருபகவான் எட்டிலிருப்பது சிறப்பல்ல.

* சுக்கிரன் பன்னிரண்டில் இருப்பதால், உதவித்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

* பரிகாரத்தால் வெற்றிபெறலாம்.

பரிகாரம்

* பௌர்ணமியில் கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் பரிகார பூஜை செய்தால், கல்வி உதவித்தொகை கிடைத்து, உயர் கல்வியை தொடரலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala241123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe