Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 147

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-147

காற்றால் நெருப்பின் உருவம் மாறும். இடத்தால் மண்ணின் மணமும் மாறும் சீதம் உஷ்ணத்தால் காற்றின் திசையும் மாறும். ஓடையும், அருவியும் மண்ணின் சுவையால் மாறும், ஒளியால் ஆகாயத்தின் நிறமும் மாறும். ஒருவரின் நண்பர்களும் எதிரிகளுமே அவரின் குணத்தைத் தீர்மானிக்கிறார்கள். வயதின் முதிர்ச்சியைவிட பிரசன்ன பார்க்க வந்தவரின் கவலையே, அவருடைய வாட்டத் தைக் காட்டியது. தன்னுடைய மகன் சிலரின் தவறான நட்பால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி சிறை சென்றதாகத் தெரிவித்தார். அவன் திருந்தி நல்வழிக்கு திரும்புவானா என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். நெல்லி குளங்கர பகவதி அம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன லக்னம் விருச்சிகத்தில் அமைந்து சந்திரனும் லக்னத்திலமை

காற்றால் நெருப்பின் உருவம் மாறும். இடத்தால் மண்ணின் மணமும் மாறும் சீதம் உஷ்ணத்தால் காற்றின் திசையும் மாறும். ஓடையும், அருவியும் மண்ணின் சுவையால் மாறும், ஒளியால் ஆகாயத்தின் நிறமும் மாறும். ஒருவரின் நண்பர்களும் எதிரிகளுமே அவரின் குணத்தைத் தீர்மானிக்கிறார்கள். வயதின் முதிர்ச்சியைவிட பிரசன்ன பார்க்க வந்தவரின் கவலையே, அவருடைய வாட்டத் தைக் காட்டியது. தன்னுடைய மகன் சிலரின் தவறான நட்பால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி சிறை சென்றதாகத் தெரிவித்தார். அவன் திருந்தி நல்வழிக்கு திரும்புவானா என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். நெல்லி குளங்கர பகவதி அம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன லக்னம் விருச்சிகத்தில் அமைந்து சந்திரனும் லக்னத்திலமைந்தது. பாவத் பாவமுறையில் ஐந்தாமிடத்திற்கு ஐந்தாமிட மாகிய ஒன்பதாமிடமே புத்திரரின் நண்பர் களைக் குறிக்கும். கடகத்தில் ராகுவும் சனியும் தொடர்புகொண்டிருந்தன. சகவாசா தோஷத் தால் ஏற்பட்ட நாசம் என்பது தெளிவானது.

Advertisment

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்தால் புத்திரர் நல்வழிக்கு திரும்புவார் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத் தால் பலன் கிடைத்தது. வருவான் குருடன் வழி தப்பி ஒரு நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப பிரசன்னம் பார்க்கவந்தவரின் மகன் தான் செய்த தவறுகளுக்கு வருந்தி திருந்தினான்.

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் ஜீவ கோள் மற்றும் சரீர கோள்கள ஆராய்ந்தபின் பலன் சொல்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. மனித உடலில் மிருகத்தின் மனதுடன் இருக்கும் ஒருவரின் செயல்பாடு மிருகத்தைப்போன்றே இருக் கும். அதுபோல் ஒரு பாவத்தின் அதிபதி அமரும் நட்சத்திரத் தின் அதிபதியே அந்த பாவத் தின் ஜீவகோள். அந்த ஜீவ கோள் அமர்ந்த நட்சத்திர அதிபதியே, அந்த பாவத்தின் சரீர கோள். சுயசாரம் பெற்ற கிரகத்திற்கு அவரே ஜீவ கோள். அவர் அமையும் இராசியின் அதிபதியே சரீர கோள். உத்திர நட்சத் திரத்தின் முதல் பாதத்தில் அமரும் சூரியனுக்கும் பூரட்டாதி யிலிருக்கும் குருவுக்கும் அவர்களே ஜீவனும் சரீரமும் ஆவார்கள். ஒரு கிரகம் தசை மற்றும் புக்தியை நடத்தும்போது அந்த கிரகத்தின் ஜீவ சரீர அதிபதிகள் எந்த பாவத்தையும் குணத் தையும் சார்ந்தவர்களோ அந்த பாவத்தையும் குணத்தையுமே குறியிட்டுக் காட்டுவார்கள். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தில் குரு உத்திரத் தில் அமர்ந்து சூரியன் பரணியில் இருக்க அந்த ஜாதகருக்கு குருதசை நல்ல பலன் களைத்தராது. குருவின் குணம் சாத்வீகம் அவரின் ஜீவகிரகமாகிய சூரியனோ ராட்ச சம், சரீர கிரகமாகிய சுக்கிரனும் ராட்சசம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

Advertisment

KJ

கொடுத்த கடன் வசூலாகுமா?

கேள்வி: எனது உறவினரின் புதிய தொழில் முயற்சிக்காக கடன் கொடுத்தேன். பல ஆண்டுகளாகியும் அந்த தொகையை திரும்பப்பெற முடியவில்லை. கொடுத்த கடனை திரும்ப கேட்பதால் பகை உண்டாகிறது. கடன் வசூலாகுமா? பரிகாரம் உண்டா?

(பிரசன்ன எண்- 1; அஸ்வினி- முதல்பாதம்; நட்சத்திராதிபதி- கேது ராசியாதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னாதிபதியும் எட்டாம் அதிபதியுமாகிய செவ்வாய் ஆறாமிடத்திலிருப்பது கடன் கொடுத்ததில் ஏற்பட்ட சிக்கலை அறியமுடிகிறது.

* "கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்ற பழமொழிக்கு ஏற்ப செவ்வாய், கன்னி ராசியிலிருப்பது பெருத்த பின்னடைவைக் காட்டுகிறது.

* சோழி லக்னம் மேஷத்தில் அமைவதால் வராக்கடனைக் குறிக்கிறது.

* லக்னமும் ஏழாமிடமும் சர்ப கிரகங்களுக்குள் அடைவது, உறவில் ஏற்பட்ட பகையை தெளிவாக்குகிறது.

* தன ஸ்தானத்திற்கு பாதகத்தில் சந்திரன் அமைவதால் கடன் வசூல் செய்வதில் இழுபறி நிலையே நீடிக்கும்.

* ஆறாமிடத்தில் சூரியனும் செவ்வாயும் இணைவதால் பிரச்சினை நீதி மன்றத்தால், முடித்துவைக்கப்படும்.

* பரிகாரத்தால் கொடுத்தக் கடன் விரைவில் வசூலாகும்.

பரிகாரம்

* சிங்கப்பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் செய்து துளசிமாலை சார்த்தி வழிபட்டால் கொடுத்த கடன் வசூலாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala101123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe