Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 145

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-145

கலும், இரவும் மாறி வருவதுபோல் சக்கரம் மேலும், கீழுமை சுழல்வது போல், வாழ்க்கையின் நிலைகள் மாறிவரும். இனிவரும் காலத்தை அறியாத வரை நம் திட்டங்கள் நீரில் எழுதிய எழுத்துகள்போல் நிலையில்லாது போகும். கிருஷ்ணன் நம்பூதிரியின் சிந்தனையை கலைத்தது, அந்த அபயக் குரல். கவலையும், நடுக்கமுமாக வந்திருந்தார் ஒரு முதியவர். வெளிநாடு செல்வதற் கான ஏற்பாட்டிலிருந்த, தன் மகன், விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையிலிருப்பதாக பதறிப்போனார். தன் மகன் மீண்டு வருவானா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். காடாம்புழா பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார்

Advertisment

கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், பரணி நான்காம் பாதத்திலமைந்தது. சனிபகவானும் செவ்வாயும் இணைந்து எட்டாம் வீட்டில் இருந்ததால், எதிர்பாராத விப

கலும், இரவும் மாறி வருவதுபோல் சக்கரம் மேலும், கீழுமை சுழல்வது போல், வாழ்க்கையின் நிலைகள் மாறிவரும். இனிவரும் காலத்தை அறியாத வரை நம் திட்டங்கள் நீரில் எழுதிய எழுத்துகள்போல் நிலையில்லாது போகும். கிருஷ்ணன் நம்பூதிரியின் சிந்தனையை கலைத்தது, அந்த அபயக் குரல். கவலையும், நடுக்கமுமாக வந்திருந்தார் ஒரு முதியவர். வெளிநாடு செல்வதற் கான ஏற்பாட்டிலிருந்த, தன் மகன், விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையிலிருப்பதாக பதறிப்போனார். தன் மகன் மீண்டு வருவானா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். காடாம்புழா பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார்

Advertisment

கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், பரணி நான்காம் பாதத்திலமைந்தது. சனிபகவானும் செவ்வாயும் இணைந்து எட்டாம் வீட்டில் இருந்ததால், எதிர்பாராத விபத்தும் ரத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிந்தது. குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணத்திலிருந்ததால் அந்த ஜாதகருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணத்தையறிய முடிந்தது. வெளிநாடு செல்வதையும் மருத்துமனையையும் குறிக்கும். பன்னிரண்டாம் வீடு பாதகாதிபதி அமர்ந்ததால் பாதகத்தையே தந்தது. குருபகவானின் பார்வை ஆயுள் ஸ்தானத்திலிருந்ததால் ஆயுளுக்கு பாதகமில்லை என்ற ஆறுதல் கிடைத்தது. திருக்கடையூர்- கால சம்கார வீரட்டேஸ்வரரை வழிபட்டு, பரிகார பூஜைகளை செய்தால் விபத்தினால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குனம் பெறுவாரென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது. விபத்தில் பாதிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்.

Advertisment

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகரின் ஆயுளை நிர்ணயம் செய்யாமல் பலன்கூறுவது போகாத ஊருக்கு வழிதேடுவது போலாகும். நாற்பது வயதே வாழ்க்கூடிய மத்திம ஆயுளுடைய ஜாதகருக்கு அறுபது வயதுவரை வரும் யோக பலனைக் கூறுவது, அறிவுடமையாகாது. ஆயுர்தாயம் செய்தபின், ஜாதகப் பலனைக் கூறுவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

சனிபகவான்தான் ஆயுள்காரகன் என்றா லும் மற்ற கிரகங்களும் ஒரு ஜாதகரின் ஆயுள் நாட்களை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றார்கள். கிரகங்களின் இருப்பையும் தொடர்பையும் வைத்து ஆயுளை கணக்கிடுவதே, கிரக ஆயுர்தாயம். ஒவ்வொரு கிரகமும் உச்ச நீச்ச நிலைகளுக்கு ஏற்ப ஜாதகருக்கு ஆயுளை கூட்டியும் குறைத் தும் தருகிறார்கள். ஏழு கிரகங்களும், லக்னமும் தரும் ஆயுளின் கூட்டுத் தொகையே ஒருவரின் வாழ்நாளாக அமையும். ஒருவரின் லக்னம் வலிமை யாக இருந்தால் அது அம்சக ஆயுர்தாயம், சூரியன் வலிமை யாக இருந்தால் பிண்டக ஆயுர்தாயம், சந்திரன் வலிமை பெற்றிருந்தால் நைசார்கிக ஆயுர்தாயம், செவ்வாய் வலிமை கொண்டிருந்தால் பிண்டாஷ்டக ஆயுர்தாயம், புதன் வலிமை எனில் ராசி மஜ ஆயுர்தாயம், குரு வலிமையாக இருந்தால் நட்சத்திர ஆயுர்தாயம், சுக்கிரன் வலிமை எனில் கால சக்கர ஆயுர்தாயம், சனி வலிமையாக இருந்தால் அம்சக ஆயுர்தாயம். ஜனன ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமையாக உள்ளதோ அதன் அடிப்படையில் ஆயுள் பலம் கண்டறியலாம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

வலிப்பு நோய் தீருமா?

கேள்வி: என் மகள், ஆறு ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்படுகிறார். மருத்துவ சிகிச்சையால் பலனில்லை. நோய் தீருமா? பரிகாரங்கள் உண்டா?

(பிரசன்ன எண்- 66; விருச்சிக ராசியாதிபதி- செவ்வாய்; நட்சத்திராதிபதி- சனி நட்சத்திரம்; அனுஷம்- 2.)dd

* சோழி லக்னத்திற்கு ஆறாமிடமாகிய ரோக ஸ்தானத்தில், சந்திரனும், புதனும் கூடியிருப்பது, நரம்பு தொடர்பான நோயைக் காட்டுகிறது.

* ஆறாமிடத்தில் விழும், சனிபகவானின் பார்வை, நோயின் கடுமையை உணர்த்து கிறது.

* பிரசன்ன காலத்து லக்னம், சோழி லக்னத்திற்கு பாதகத்திலமைவதால், மருத்துவ சிகிச்சையால் பலனில்லாமல் போனது.

* சோழி லக்னத்தின் பாதகத்தில் நீச செவ்வாய் அமர்ந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதும் முக்கிய காரணமாகிறது.v ப் பரிகாரத்தால் மட்டுமே நோய் தீரும்.

பரிகாரம்

* பழனிக்கு சென்று முருகப்பெருமானை காலை, பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட வேண்டும். அங்கு பிரசாதமாக கிடைக்கும் சந்தனத்தை தண்ணீரில் கலந்து பருகினால் நோய் நீங்கும்.

* வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகள்செய்தால், நலம் பெறலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala271023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe