Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 144

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-144

வேடனின் வலையில் சிக்குண்ட பூனை, வலையை அறுத்து தன்னைக் காப்பாற்றும் எலியை உண்பதில்லை. ஆனால், மனிதனோ தன்னை ஆதரிப்ப வரையே வீழ்த்துகிறான். அகங் காரத்தால் வரும் ஆசையே, பொறாமையெனும் பகையை உண்டாக்குகிறது. மனிதருக்கு, முற்பிறவியின் தொடர்பால் மட்டுமே, பிறரிடம் நட்பும், பகை யும் உண்டாகிறது. பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் கோபமும், கவலையும், பின்னி பிணைந்திருந்தது. தன் தொழிலில் உதவியாளராக இருந்தவர், தனக்கு துரோகம் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகத் தெரிவித் தார். அவரால் மேலும் பிரச்சினைகள் வருமா என்பதையறியவே பிரசன்னத்தின் துணையை நாடி வந்திருந்தார். கொடுங்கலூர் பகவதியை வழிபட்டு, பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், மீன ராசியிலமைந்தது. ஆறா மிடத்தில், குருவும், சூரியனும் அமர்ந்திருந்தனர். சத்ரு ஸ்தானத் தில்,

வேடனின் வலையில் சிக்குண்ட பூனை, வலையை அறுத்து தன்னைக் காப்பாற்றும் எலியை உண்பதில்லை. ஆனால், மனிதனோ தன்னை ஆதரிப்ப வரையே வீழ்த்துகிறான். அகங் காரத்தால் வரும் ஆசையே, பொறாமையெனும் பகையை உண்டாக்குகிறது. மனிதருக்கு, முற்பிறவியின் தொடர்பால் மட்டுமே, பிறரிடம் நட்பும், பகை யும் உண்டாகிறது. பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் கோபமும், கவலையும், பின்னி பிணைந்திருந்தது. தன் தொழிலில் உதவியாளராக இருந்தவர், தனக்கு துரோகம் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகத் தெரிவித் தார். அவரால் மேலும் பிரச்சினைகள் வருமா என்பதையறியவே பிரசன்னத்தின் துணையை நாடி வந்திருந்தார். கொடுங்கலூர் பகவதியை வழிபட்டு, பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், மீன ராசியிலமைந்தது. ஆறா மிடத்தில், குருவும், சூரியனும் அமர்ந்திருந்தனர். சத்ரு ஸ்தானத் தில், சூரியன் இருந்து, அரசு விரோதத்தைக் காட்டினார்.

Advertisment

அதனால், தொழிலில் ஏற்பட் டுள்ள முடக்கம் தெளிவானது. பத்தாமிடத்து, அதிபதியான, குரு, சத்ரு ஸ்தானம் புகுந்ததால், தொழிலில் எதிரியின் கை ஓங்கியிருப்பதை அறியமுடிந்தது. சூரியன், சுக்கிரனின் சாரத்திலிருந்ததால், எட்டாமிட தொடர் பும் ஏற்பட்டது. ஆறாமிடம், எதிரியையும், எட்டாமிடம், துரோகியையும், சுட்டிக் காட்டியது. திருச்சி- உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், பரிகார பூஜை செய்தால், பகை அழிந்து, புது வாழ்வு பெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் பலன் கிடைத்தது. வஞ்சித்தவர் வீழ்ந்தார். தருமம் வென்றது.

Advertisment

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் கிரக பலன்களை கண்டறியும்போது அந்த கிரகம், நேர்கதியில் சஞ்சரிக்கிறதா? வக்ரகதியில் செல்கிறதா? என்பதை ஆராய்ந்து அறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சூரியனோடு ஒரு கிரகம் சேர்ந்திருப்பது அஸ்தங்க கதி. அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவதை குறிப்பது உதயகதி. சூரியனுக்கு இரண்டாமிடத்தில் கிரகங்கள் இருப்பது துரித கதி. சூரியனுக்கு மூன்றாமிடத்தில் கிரகங்கள் இருப்பது சமகதி. சூரியனுக்கு நாங்காமிடத்தில் கிரகங்கள் இருப்பது மந்தகதி. சூரியனுக்கு ஐந்து மற்றும் ஆறாமிடத் தில் கிரகங்கள் வரும்போது வக்ரகதி. சூரியனுக்கு ஏழு மற்றும் எட்டாமிடத்தில் கிரகங்கள் வரும்போது அதிவக்ரகதி. சூரியனுக்கு ஒன்பது, பத்தாமிடத்தில் வரும்போது வக்ர நிவர்த்திகதி. சூரியனுக்கு பதினோராமிடத்திலும் பன்னிரண்டாமிடத்திலும் கிரகங்கள் வரும்போது அதிதுரித கதி உண்டாகிறது. கிரக வக்ரமென்பது, கிரகங்கள் சூரியனை விட்டு ஒரு குறிப்பிட்ட தூரம் விலகும்போது ஏற்படும் நிலை. விலகிப்போன கிரகம் மறுபடியும் சூரியனின் எல்லைக்குள் வருவதே வக்ரநிவர்த்தி. குரு, செவ்வாய், சனி கிரகங்கள் ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்போது வக்ரகதி நிலை ஏற்படுகிறது.

அந்த கிரகத்திற்கு ஏழாமிடத்தில் சூரியன் வரும்போது அதி வக்ரமும், ஒன்பதாமிடத்திற்கு வரும் போது வக்ரநிலை முடிவடைந்து நேர்கதி அடைகிறது தந்தையை விட்டு பிரிந்த மகன் மறுபடியும் மனம் திருந்தி தந்தையைச்சேர்வது போன்ற நிகழ்வு. சூரியனின் எல்லைக்கு வெளியே இருக்கும் கிரகம், தன் இயல்பான குணத்திலிருந்து மாறுபடும். கிரகத்தின் குண விகாரமே, வக்ரம் எனப் படுவது. வாள் பின்னால் சென்று விட்டு முன்னால் நகரும்போது வேகமும், வலிமையும், பெறுவதுபோல், வக்ரநிவர்த்தி காலத்தில், கிரக பலம் கூடும், என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

பணியில் பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?

கேள்வி: எனக்கு பணியில் பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்குமா?

(எண்- 41; பூரம்- 1; நட்சத்திராதிபதி- சுக்கிரன்; ராசியாதிபதி- சூரியன்).

* சோழி லக்னத் திற்கு ஒன்பதிலிருக்கும் குருபகவானின் பார்வை லக்னத் தில் விழுவதால் ஆசை நிறைவேறும்.

* பத்தாமிடத்தின் அதிபதியாகிய சுக்கிரன் லக்னத்திலிருப்பது பணியில் பதவி உயர்வையும் அதிகார மேன்மையையும் காட்டுகிறது.

* நான்காமிடத்தோன் மூன்றாமிடத்தில் அமர்வதால் இடமாற்றம் உண்டு.

* பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு ஐந்திலமைவதும் நல்ல அறிகுறியையே தெரிவிக்கிறது.

* ஆறாமதிபதியாகிய சனிபகவானின் ஏழாம் பார்வை பதவி உயர்வில் ஏற்படும் தாமதத்தை காட்டுவதால் பரிகாரம் தேவை.

* சோழி லக்னத்தின் யோகாதிபதிகளாகிய குருவும், செவ்வாயும் இணைந்த அவதாரமாக விளங்கும் முருகப்பெருமானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம்

திருவேரகம் என அழைக்கப்படும். ஸ்வாமி மலை- சுவாமிநாத சாமியை வழிபட் டால் செல்வமும் செல்வாக்கும் பெருகும்

(தொடரும்)

செல்: 63819 58636

bala201023
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe