Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 142

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-lalgudi-gopalakrishnan-142

ருளைவிட்டு ஓடுவதால் அதை வெல்ல முடியாது. ஒளியைக்கொண்டே அதை விரட்டமுடியும். ஒளி இல்லாவிட்டால் விழியும் உதவாது; வழியும் தெரியாது. கடலோடிகளுக்கு வழிகாட்டும் நட்சத் திரமாக வடக்கு நட்சத்திரம் அமையும். அதுபோல், துன்பத்தின் இருளில் சிக்கி தத்தளிப்பவர்களுக்கு ஜோதிடமே, ஜோதி யாக நின்று வழிகாட்டு மென்பதே கிருஷ்ணன்

Advertisment

நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்க வந்தவரின் மனம் துன்ப குளத்தில் மூழ்கி யிருந்தது. தன் மகன், திடீரென்று கண் பார்வையை இழந்துவிட்டதாகவும், எந்த மருத்துவ சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்று கூறி வருந்தினார். வயில்யம் குன்னு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத் திற்கு பன்னிரண்டில் சூரிய சந்திரர்கள் அமர்ந்து கண்நோயின் தீவிரத்தை தெரிவித்தனர். லக்னாதிபதியும்

ருளைவிட்டு ஓடுவதால் அதை வெல்ல முடியாது. ஒளியைக்கொண்டே அதை விரட்டமுடியும். ஒளி இல்லாவிட்டால் விழியும் உதவாது; வழியும் தெரியாது. கடலோடிகளுக்கு வழிகாட்டும் நட்சத் திரமாக வடக்கு நட்சத்திரம் அமையும். அதுபோல், துன்பத்தின் இருளில் சிக்கி தத்தளிப்பவர்களுக்கு ஜோதிடமே, ஜோதி யாக நின்று வழிகாட்டு மென்பதே கிருஷ்ணன்

Advertisment

நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்க வந்தவரின் மனம் துன்ப குளத்தில் மூழ்கி யிருந்தது. தன் மகன், திடீரென்று கண் பார்வையை இழந்துவிட்டதாகவும், எந்த மருத்துவ சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்று கூறி வருந்தினார். வயில்யம் குன்னு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத் திற்கு பன்னிரண்டில் சூரிய சந்திரர்கள் அமர்ந்து கண்நோயின் தீவிரத்தை தெரிவித்தனர். லக்னாதிபதியும் சனியின் பார்வையிலிருந்தது. லக்னாதிபதி எட்டில் மறைந்ததாலும் நேத்ரபாவம் புதனால் பாதிக்கப்பட்டதாலும் கண் நரம்பு தொடர்பான பிரச்சினையே இந்த தொல்லைக்குக் காரணமென்பது தெரிந் தது. திருவாரூர் தூவாய் நாதர் கோவிலில் பரிகார பூஜைகளை செய்தபின் வர்ம சிகிச்சை முறையில் வைத்தியம் செய்தால் கண்பார்வை பெறலாமென்ற உபாயம் சொல்லப்பட்டது. பிரசன்னத்தில் சொல்லப் பட்ட பரிகாரத்தையும் வர்ம சிகிச்சையையும் செய்து கண் ஒளிபெற்றார். வாழ்க்கைக்கு ஜோதிடம் ஒளியூட்டியது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் லக்ன பாதகாதிபதி துன்பத்தைத் தருவதுபோல் மாரகாதிபதியும் எதிர்பாராத விபத்துக்களை உண்டாக்கி, நிலைகுலைய செய்வார் என்பதே உண்மை. மாரகாதிபதிகளின் வலிமைமையைக் கணக் கிட்டு, ஜாதகருக்கு வரப்போகும் ஆபத்தை அறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

Advertisment

சர லக்னங்களுக்கு இரண்டு மற்றும் ஏழா மதிபதியும், மாரகாதிபதிகள். ஸ்திர லக்னங் களுக்கு, மூன்று மற்றும் எட்டாமதிபதிகளும் உபய லக்னங்களுக்கு ஏழு மற்றும் பதி னோராமதிபதி மாரகதிபதிகளாவார்கள். மாரகாதிபதி 6 8, 12-ஆமிடதில் மறைந்தாலோ அல்லது நீசம் பெற்றாலோ அல்லது பகை கிரகத்தோடு அஸ்தங்கம் பெற்று இருந்தாலோ மாரகதன்மை கொடுக்க வாய்ப்பில்லை. எட்டாம் பாவம் பலமிழந்து சனிபகவானும் எட்டாம் அதிபதியும் பகை நீசம் பாவகிரக பார்வை பெற்றிருந்தால் மட்டுமே, கண்டங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையுண்டாகும். மாரகாதிபதிகள், சுப கிரகங்களின் பார்வையைப் செய்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு கள் குறையும். அதுவே பாவகிரக பார்வை பாவகிரக சேர்க்கை பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் கோட்சாரத்தில், ஆயுள் காரகனாகிய, சனிபகவானும், சாதகமான அமைப்பில் இல்லாவிட்டால், மாரகத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

பதவி உயர்வு கிடைக்குமா?

கேள்வி: நான் பத்து வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத் தில் பணி புரிந்துவருகிறேன். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்க வில்லை. எப்போது பதவி உயர்வு கிடைக்கும். பரிகாரம் உண்டா?

(எண்- 31; பூசம்- 3; ராசியாதிபதி- கடகம்; நட்சத்திராதிபதி- சனி).

* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாமிடத்தில் சூரியனிருப் பது வருமான இழப்பைக் காட்டுகிறது.

* பிரசன்ன லக்னத்திற்கு எட்டில் சனிபகவான் இருப்பது கடின உழைப்பிற்கு பலனில்லாமல் போனதையும் பதவி உயர்வில் காலதாமத்தையும் குறிக்கிறது.

* வருமானத்தைக் குறிக்கும் இரண்டாமிடத்திலிருக்கும் சந்திரனை சனி பகவான் பார்ப்பதால் ஊதிய உயர்வில் தடையும் அதனால் மனசோர்வும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

* பத்தாமிடத்திலிருக்கும் குருவால் வாழ்க்கையில் பிரச்சினைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும். ஆனாலும், குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருப்பதால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகத்தால் திடீர் பதவி உயர்வும், எதிர்பாராத தனவரவும் உண்டாகும்.

* சோழி லக்னத்திற்கு நான்காம் பாவத்தில் கேது இருப்பதால் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும், * நான்காம் பாவத்தில் குருவின் பார்வை பதிவதால் தீய பலன்கள் சற்று குறையலாம்.

* பரிகாரத்தாலும் கடவுளின் கருணையாலும் பலன் கிடைக்கும்.

பரிகாரம்

நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் சிங்காரவேலரை செவ்வாய்க்கிழமை செந்நிறமலர்களைக் கொண்டு பூஜைசெய்தால் பதவி உயர்வு கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala061023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe