Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (99)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-99

லகம், இரவுகள் மற்றும் பகல்களாலான ஒரு சதுரங்கப் பலகை. மனிதர்கள் ஊழ்வினையால் சதுரங்கக் காய்களாக்கப்பட்டு நகர்த்தப்படுகின்றனர். சிறை வைக்கப்படுகின்றனர். முடிவில் வீழ்த்தப்படுகின்றனர்.

Advertisment

அவரவர் செய்யும் தீவினையே தண்டனையாக வருவதை ஜோதிடத்தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

களைப்பான முகத்துடன் நோயாளிபோல் ஒரு நடுத்தர வயதினர் பிரசன்னம் பார்க்க வந்தார். தான் செய்யாத தவறுக்கு வழக்கில் சிக்கி சிறைசென்று, பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தனக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைக்குமா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சதியால் சதுரங்க சேனையிடம் சிக்கியவருக்கு பிரசன்னம் பார்க்கவேண்டிய அவசியம் உண்டானது. மடிப்பேட்டை பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.

dd

Advertisment

சோழி லக்னத்திற்கு ஆறாமிடத்தில்

லகம், இரவுகள் மற்றும் பகல்களாலான ஒரு சதுரங்கப் பலகை. மனிதர்கள் ஊழ்வினையால் சதுரங்கக் காய்களாக்கப்பட்டு நகர்த்தப்படுகின்றனர். சிறை வைக்கப்படுகின்றனர். முடிவில் வீழ்த்தப்படுகின்றனர்.

Advertisment

அவரவர் செய்யும் தீவினையே தண்டனையாக வருவதை ஜோதிடத்தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

களைப்பான முகத்துடன் நோயாளிபோல் ஒரு நடுத்தர வயதினர் பிரசன்னம் பார்க்க வந்தார். தான் செய்யாத தவறுக்கு வழக்கில் சிக்கி சிறைசென்று, பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தனக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைக்குமா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சதியால் சதுரங்க சேனையிடம் சிக்கியவருக்கு பிரசன்னம் பார்க்கவேண்டிய அவசியம் உண்டானது. மடிப்பேட்டை பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.

dd

Advertisment

சோழி லக்னத்திற்கு ஆறாமிடத்தில் லக்னாதி பதியுடன் பாவிகளின் சேர்க்கை இருந்ததாலும், அதில் ராகுவின் பார்வை பதிந்ததாலும் பந்தன யோகத்தால் சிறைக் குச்சென்ற நிலையைக் காட்டியது. ஒன்பதாம் பாவத்திலும் பத்தாம் பாவத்திலும் பாதகாதிபதி இருந்ததால், ஆகாமிய கர்மாவின் விளைவே என்றறியப்பட்டது. அறு பத்து நான்காவது நவாம் சத்தில் குரு இருந்ததால், கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட பறவைகளின் சாபத்தால் வந்த வினையென்பதும் உறுதியானது. பிரசன்னம் பார்க்கவந்தவர் பிரசன்னம் காட்டிய உண்மையை வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். பறவை களை விடுவித்தால் வழக்கிலிருந்து விடுபடலாம் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பறவைகள் விடுவிக்கப்பட்டன. பிரசன்னம் பார்க்க வந்தவர் விடுதலையாகி, சுதந்திரப் பறவையானார். பிரசன்ன ஆரூடம் மீண்டும் ஒருமுறை தன் பெருமையைக் காட்டியது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜனன ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகத்தின் உச்சம், நீசம், வக்ரம், அஸ்தங்கம் போன்ற நிலைகளை பரீட்சித்தபிறகே பலன் காணுதல் கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சூரியனை நெருங்கும்போது, பஞ்சபூத கிரகங்களாகிய செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்தும் அஸ்தங்கமடைகின்றன.

அஸ்தங்கமடைந்த கிரகம் சூரியனிடம் தனது வலிமையை இழந்துவிடுகிறது. சூரியனுக்கு முன் அல்லது பின் மூன்று டிகிரிக்குள் அஸ்தங்க மடையும் கிரகத்திற்கு பார்வை யும் இல்லாமல் போகிறது. சூரியனுக்குப் பின்னால் ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைவதை விட சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கமடையும் நிலையில் ஓரளவுக்கு பாதகம் குறையும்.

கிரகங்களின் அஸ்தங்க பாகை அளவு: சுக்கிரன்- 9 டிகிரி; குரு- 11 டிகிரி; புதன்- 13 டிகிரி; சனி- 15 டிகிரி; செவ்வாய்- 17 டிகிரி. இந்த பாகைக்குள் சூரியனுக்குமுன் அல்லது பின் இந்த கிரகங்கள் இருப்பின் அஸ்தங்கம் முழுமையாக ஏற்படும்.

அஸ்தங்கமடைந்த கிரகம் ஆதிபத்திய வலுவையிழந்து காரகத்துவத்தை மட்டுமே தரும் அமைப்பில் இருக்கும். அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் தசாபுக்திப் பலன்கள் சூரிய தசையில் மட்டுமே கிடைக்கும். சந்திரன் சூரியனுடன் நெருங்கி இணைவது அமாவாசை யோகம். சந்திரனுக்கு அஸ்தங்க தோஷமில்லை. குரு அஸ்தங்கமடைந்தால் நல்ல பலன்களை சூரியன் எப்போதும் ஜாதகருக்கு அளிக்கிறது. சூரியனுடன் புதன் அஸ்தங்கமடைந்தால், தோஷம் விலகி, யோகம் உண்டாகுமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

கூட்டுத் தொழிலில் வெற்றியுண்டா?

கேள்வி: நான் என்னுடைய இளைய சகோதரருடன் சேர்ந்து மருத்துவ உபகரணங் களை விற்பனை செய்யவுள்ளேன். அதில் வெற்றி கிடைக்குமா?

dd

-விவேக், மேட்டுப்பாளையம்.

(எண்- 19; மிருகசிரீடம்- 3; நட்சத்திராதி பதி- செவ்வாய்; ராசியாதிபதி- புதன்.)

* சோழி லக்னத்தில் மூன்றாமதி பதியாகிய சூரியன் லக்னாதிபதியுடன் இனைவது, இளைய சகோதரருடன் சேர்ந்து கூட்டுத்தொழில் தொடங்குவதைத் தெரிவிக்கிறது.

* இளைய சகோதர காரகனாகிய செவ்வாய் பதினொன்றாமிடமாகிய லாப ஸ்தானத்தில் இருப்பதால் கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும்.

* லக்னத்தில் புதன் ஆட்சிபெற்றிருப்பதால், கூட்டு வியாபாரத்தின் ஒப்பந்தங்களைப் பதிவு செய்துகொள்வதே நல்லது.

* கூட்டுத்தொழிலைக் குறிக்கும் பாவமாகிய ஏழாம் பாவத்தின் அதிபதி பத்தா மிடத்தில் இருப்பது, கூட்டு வியாபாரத்தில் வெற்றியைக் காட்டுகிறது.

* வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சுகங்களையும் பதினொன்றாம் வீட்டிலிருக்கும் ராகு உறுதி செய்கிறது.

* இரண்டாமதிபதி ஏழிலிருப்பதால், வியாபாரத்தில், பலவழிகளில் செல்வம் வந்தாலும் ஏற்றத் தாழ்வும் வரும். திட்டமிடுவதில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்

சொர்ணாகர்ஷண பைரவரை வணங்கி னால் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala091222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe