கேரள ஜோதிட ரகசியங்கள்! (94)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-94

புகழேணியின் உச்சியைத் தொடுபவர்கள் பெரும்பாலும், அந்திமக் காலத்தில் வலியும் வேதனையும் நிறைந்த முடிவையடைகிறார்கள்.

ஆற்றங்கரையில் செழுமை யாக வளரும் மரம், அதே ஆற்றின் மண்ணரிப்பால் வேரறுந்து வீழும். எதிர்பாராத விளைவு களை உண்டாக்கும். சனியும் செவ்வாயும் நவாம்சத்தில் வர்கோத்த மம், ஆட்சி, உச்சம் பெற்றால் அபரிமிதமான செல்வாக்கு ஏற்படும். சனியும் செவ்வாயும் மாரக ஸ்தானங்களைத் தொடர்புகொண்டால் துர் மரணத்தையும் விளைவிக்கும். இரு வீட்டின் ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்தைத் தொடர்புகொள்கிறார்களோ, அந்த வீட்டின் பலனை முதலிலும், இன்னொரு வீட்டின் பலனை அடுத்தும் செய்வார்கள். இந்த சிந்தனை அன்று வரப்போகும் பிரசன்னத்திற்கு கட்டியம் கூறுவதாக கிருஷ்ணன் நம்பூதிரி உணர்ந்தார்.

பிரசன்னம் பார்க்கவந்தவர் நடமாடும் நகைக்கடை

பிரசன்னம் பார்க்கவந்தவர் நடமாடும் நகைக்கடைபோல் ஜொலித்தார். தன் தந்தை கடுமையான உழைப்பால் முன்னேறி, பெரிய தொழில் சாம்ராஜியத்தையே உருவாக்கினார் என்றும், ஆனால் அவருடைய இறுதிக்காலம் வலியும் வேதனையும் நிறைந்ததாக இருந்தது என்ற சோகத்தையும் தெரிவித்தார். தந்தையின் மரணத்திற்குப்பிறகு, குடும்பத் தில் அமைதி குறைந்துவிட்டது; அதற்கான காரணத்தையறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். கோளூர்‌ பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

சனி, செவ்வாய் சேர்க்கை மகர ராசியில் இருந்ததால் ஜாதகர் தனது கடுமையான உழைப்பால் தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கும் வேலை கொடுக்கக் கூடிய முதலாளியாக உருவெடுத்தவர் என்பது புரிந்தது. சுக்கிரனும் சந்திரனும் சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் கேதுவுடன் கூடியதால், ஜாதகரின் குடும்பம் ஒரு அபலைப் பெண்ணின் சாபத்தால் பாதிக்கப் பட்டுள்ளதைக் காட்டியது. மகரம் கர்ம ஸ்தான மாகி, சனி ஆட்சியும், செவ்வாய் உச்சமும் பெற்று சாபத்தின் கடுமையைக் காட்டினார் கள். ஆதரவற்றோர் விடுதியிலுள்ள பெண் களுக்கு தான, தர்மங்கள் செய்தால் பெண்சாபம் தீருமென்ற பரிகாரம் கூறப் பட்டது. பரிகாரத்தால் சாபம்நீங்கி அமைதி திரும்பியது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

முற்பிறவியின் கடனைக் கழிப்பதற்காகவே ஒருவருக்கு இப்பிறவியில் தொழில் அமைகிறது. அதனால் ஒரு ஜாதகரின் தொழில்பற்றி அறிய சனி பகவனின் பாவத் தொடர்பைக்கொண்டு அறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. காலபுருஷ லக்னத் திற்கு பத்தாம் வீடும், சனிபகவானின் ஆட்சிவீடுமாகிய மகரம் கர்ம ராசியாகும். தொழில்காரகன் சனி என்பதால், சனியோடு சம்பந்தம்பெறும் கிரகங்களின் காரகத்துவத் தொழிலே ஜாதகனுக்கு அமையும். சனிக்குப் பத்தாமிடம், சனிக்குத் திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனியோடு இணையும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகியவற்றில் எந்த கிரகம் வலிமையானதோ அதன் காரகங்களே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்குமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

வலிப்புநோய் தீருமா?

கேள்வி: என் மகள் இரண்டான்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்படுகிறாள். பலவித மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லை. அந்த நோய் தீருமா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-முருகன், சேலம்.

(எண்-6; பரணி- 2; நட்சத்திராதிபதி- சுக்கிரன்; ராசியாதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னத்தில் ராகுவும் ஆறில் சந்திரனும் இருப்பதால் வலிப்பு நோயின் அறிகுறி தென்படுகிறது.

* மேஷ லக்னத்திற்கு, புதன் மூன்று, ஆறுக்குடைய ஆதிபத்திய விசேஷமில்லாத பாவர் என்பதால், மேஷத்துக்கு இவர் வலுப்பெற்றிருப்பது நன்மைகளைச் செய்யாது.

* ஆறில் சுக்கிரன் இருப்பது நரம்புத் தளர்ச்சியை குறிகாட்டுகிறது.

* லக்னத்திற்கு ஆறாமிடத்தில் கிரகயுத்தம் ஏற்படுவதும் சிறப்பில்லை.

* பன்னிரண்டில் அமர்ந்த குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் நோய் தீருவதற்கான வாய்ப்புண்டு.

* ஆறாம் வீட்டோன் ஆறாமிடத்திலிருப்பதும் நோய்தீர வழிவகுக்கும்.

* ஆறாமதிபதியும் சனிபகவானும் பதினொன்றா மிடமாகிய கும்பத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பரிகாரத்தால் நோய் கட்டுப் படும்.

பரிகாரம்

திருவெண்காடு எனும் திருத்தலத்தில் அருள்புரியும் சுவேதாரண்ய சுவாமியை வழிபட்டால் நோய் தீரும். திருச்சி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில், தன்வந்திரி பகவானை தரிசித்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கி சுகம்பெறலாம். திருவாதிரை நட்சத் திரத்தில் சிதம்பரம் நடராஜரை வழி பட்டால் பூரணகுணம் உண்டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala111122
இதையும் படியுங்கள்
Subscribe