Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (91)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-91

விதைக்கிற காலத்தில் சும்மா யிருந்துவிட்டு, அறுவடைக் காலத்தில் வயலுக்குப்போனால் பயனுண்டாகுமா? விதி எல்லாருக்கும் வாழ்க்கையில் முன்னேற ஒரு சந்தர்பத்தைத் தருகிறது.

Advertisment

அதை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொள்பவர்கள் வெற்றியடைகி றார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருவும், முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியும் எல்லா ஜாதகர் களுக்கும் ஒரு நல்வாய்பைத் தருகிறது. சிலர் அதைப் பயன் படுத்திக்கொள்வதில்லை. இந்த கருத்திலுள்ள யதார்த் தத்தை சிந்தித்துப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவரின் பார்வையில் அதிகாரமும், ஆடையில் வறுமையும் தெரிந்தது. தாழ்ந்து வணங்கியவர், வாழ்ந்துகெட்டவர் என்பது புரிந்தது. தான் ஒரு ஜமீன் பரம்ப

விதைக்கிற காலத்தில் சும்மா யிருந்துவிட்டு, அறுவடைக் காலத்தில் வயலுக்குப்போனால் பயனுண்டாகுமா? விதி எல்லாருக்கும் வாழ்க்கையில் முன்னேற ஒரு சந்தர்பத்தைத் தருகிறது.

Advertisment

அதை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொள்பவர்கள் வெற்றியடைகி றார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருவும், முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியும் எல்லா ஜாதகர் களுக்கும் ஒரு நல்வாய்பைத் தருகிறது. சிலர் அதைப் பயன் படுத்திக்கொள்வதில்லை. இந்த கருத்திலுள்ள யதார்த் தத்தை சிந்தித்துப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவரின் பார்வையில் அதிகாரமும், ஆடையில் வறுமையும் தெரிந்தது. தாழ்ந்து வணங்கியவர், வாழ்ந்துகெட்டவர் என்பது புரிந்தது. தான் ஒரு ஜமீன் பரம்பரையின் வாரிசு என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தன்னுடைய கவனக்குறைவால், தன் மூதாதையர் சொத்துகளைப் பிறர் அபகரித்துள்ளதாக வருந்தினார். அந்த சொத்து கள் திரும்பக் கிடைக்குமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். கொத்தகுளங்கரா பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

ff

ஆரூடகால லக்னத்தில் நான்காமதிபதி சஞ்சரித்ததாலும், இரண்டாம் வீட்டோன் நான்கில் அமைந்ததாலும் அபகரிக்கப்பட்ட சொத்து திரும்ப வருமென்பது உறுதியானது. ஆரூட லக்னாதிபதியும், ஏழாம் வீட்டோனும் பரிவர்தனையானதால் இழந்த பொருள் கிடைக்குமென்ற ஆறுதல் உண்டானது.

பூமிகாரகனாகிய செவ்வாய் எட்டில் சஞ்சரிப்ப தால் நீண்ட போராட்டத்திற்குப்பிறகே வெற்றி கிடைக்குமென்பதும் தெளிவானது. கடலூர்- திருநாரையூரிலுள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் பொள்ளாப் பிள்ளையாரை வணங்கினால் மறுவாழ்வு கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் வாழ்வு மலர்ந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்னத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு அனுகூல மான பதில் கிடைக்குமா அல்லது பிரதிகூலமான பலன் உண்டாகுமா என்பதை ஆரூட லக்னத்தைக்கொண்டு ஆராய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆரூட ராசியின் அதிபதி ஆரூட லக்னத்தையோ அல்லது சந்திரனையோ பார்த்தால் அனுகூலமான பலனைத் தெரிவிக்கலாம். ஆரூட ராசியின் ஆட்சி கிரகம், கேள்விக்குரிய பாவாதிபதியோடு சேர்க்கையோ, பார்வையோ, பரிவர்தனையோ பெறாமல்போனால், பிரதிகூல மான பலனே உண்டா கும். உதாரணத்திற்கு, திருமணம் அல்லது கூட்டுத் தொழில் தொடர்பான கேள்வியில் ஆரூட லக்னாதிபதி, ஏழாமதிபதியோடு தொடர்பற்றிருந்தால் அந்த காரியம் நடவா தென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

பணியில் மாற்றம் உண்டாகுமா?

கேள்வி: நான் ஆறு ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடினமாக உழைத் தாலும் முன்னேற்றம் கிடைக்கவில்லை. புதிய வேலை யும், ஊதிய உயர்வும் கிடைக்குமா?

-பெயர் சொல்ல விரும்பாத வாசகர், சென்னை.

(எண்-54; சித்திரை-2; நட்சத்திராதிபதி- செவ்வாய்; ராசியாதிபதி- புதன்.)

* சோழி லக்னத்தில் (கன்னி) சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது புதாதித்ய யோகத்தைக் காட்டுகிறது.

* புதன் உச்சம்பெற்று சோழி லக்னத்தில் இருப்பது, ஜாதகரின் தொழில்சார்ந்த அறிவின் மேன்மையைக் குறிக்கிறது.

* லக்னத்தில் அமையும் நீச சுக்கிரன், பொருளாதாரத்திலுள்ள குறையை சுட்டிக்காட்டுகிறது.

* சோழி லக்னத்திற்கு ஆறில் சந்திரனும், பிரசன்ன காலத்து லக்னமும் அமைவது, இந்தப் பிரசன்னம் ஜீவாதாரம் தொடர்பானது என்பதைத் தெளிவாக்குகிறது.

* குருபகவானின் ஏழாம் பார்வை சோழி லக்னத் திற்கு இருப்பதால் நன்மை உண்டாகும்.

* ஆறாமதிபதியாகிய சனிபகவான் ஐந்திலிருப்பது பணியில் மாற்றத்தைக் காட்டுகிறது.

* சுக்கிரன், சூரியனைக் கடந்து துலா ராசியில் ஆட்சிபெறும் காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலிருக்கும் நள விநாயகரையும் பைரவரையும் வழிபடவேண்டும். அதற்குப் பிறகு மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நன்மையுண்டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala211022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe