கேரள ஜோதிட ரகசியங்கள்! (90)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-90

விதைகள் உறையைக் கிழித்துக்கொண்டு வளர் கின்றன. பறவைக் குஞ்சு கள் முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும். பாதுகாப்பான கோட்டைக்குள் பதுங்கியிருக்கும் அரசனால் சாம்ராஜ்ஜியங்களை விரிவுபடுத்தமுடியாது. அதிக பாதுகாப்பே முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்துவிடும். காட்டுக்கேது வேலி? திரிகோண ஸ்தானங்கள் பாதுகாப்பையும், கேந்திரங்கள் செயலாற்றலையும் தெரிவிப்பதாக அமைகின்றன. கேந்திர கோணாதிபதிகள் சேர்க்கைபெற்றால் அதியோகம் உண்டாவதை கிருஷ்ணன் நம்பூதிரி ஒப்பிட்டு நோக்கினார்.

தள்ளாடும் மனமும் தளராத உடலும்கொண்ட ஒரு நடுத்தர வயதுக்காரர் பிரசன்னம் பார்க்க வந்தார். தன் மகனுக்கு வெளி நாட்டில் கல்விபயிலும் வாய்ப்பு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தன் மகனுக்கு அது பாதுகாப்பாகவும் வெற்றிகரமா

விதைகள் உறையைக் கிழித்துக்கொண்டு வளர் கின்றன. பறவைக் குஞ்சு கள் முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும். பாதுகாப்பான கோட்டைக்குள் பதுங்கியிருக்கும் அரசனால் சாம்ராஜ்ஜியங்களை விரிவுபடுத்தமுடியாது. அதிக பாதுகாப்பே முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்துவிடும். காட்டுக்கேது வேலி? திரிகோண ஸ்தானங்கள் பாதுகாப்பையும், கேந்திரங்கள் செயலாற்றலையும் தெரிவிப்பதாக அமைகின்றன. கேந்திர கோணாதிபதிகள் சேர்க்கைபெற்றால் அதியோகம் உண்டாவதை கிருஷ்ணன் நம்பூதிரி ஒப்பிட்டு நோக்கினார்.

தள்ளாடும் மனமும் தளராத உடலும்கொண்ட ஒரு நடுத்தர வயதுக்காரர் பிரசன்னம் பார்க்க வந்தார். தன் மகனுக்கு வெளி நாட்டில் கல்விபயிலும் வாய்ப்பு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தன் மகனுக்கு அது பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் அமையுமா என்பதற்காகப் பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். கொத்தகுளங்கரா பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

சோழி லக்னம் ரிஷபமாக அமைந்து, அதன் தர்மகர்மாதிபதியாகிய சனிபகவான் கல்விக்கு அதிபதியாகிய புதனுடன்கூடி வலுத்திருந்த தால் வெளிநாட்டுப் பயணம் வெற்றிதரும் என்ற பலன் உறுதியானது. ஆனாலும், ஸ்திர ராசி யாகிய ரிஷபத்திற்கு சனிபகவான் பாக்கியாதி பதியும் பாதகாதிபதியுமாவ தால் நல்லது நினைத்து தீங்கு செய்யும் அனுகூல சத்ரு. அதனால் பரிகாரம் செய்வது நல்லதென்பதும் சொல்லப் பட்டது. சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சனியின் பாதகத்திலிருந்து விடுபடலா மென்ற உபாயத்தை சொல்லிமுடித்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

எதிர்பார்த்ததுபோல் அந்த மாணவனுக்கு கடவுச்சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பரிகாரத்தால் தடை நீங்கியது. பிரசன்ன ஆரூடத்தின் தொலைநோக்கைக் கண்டு வியப்பு மேலிட்டது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகருக்கேற்ற தொழிலைத் தேர்ந் தெடுக்கும் முறையே "ஜீவன பிரகரணம்'.

ஜாதகரின் குணம், திறமை, கர்மாவின் தாக்கம் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, வெற்றி கரமான தொழிலைக் கண்டறிந்து கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. லக்னம் அல்லது சந்திரன் இவையிரண்டில் எது வலிமையானதோ, அதன் பத்தாம் வீட்டோனே ஜீவன காரக னாவான். பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அமையப்பெற்று சுப பார்வை பெற்றாலும் கண்டிப்பாக அதிகாரமிக்க உயர்பதவிகளை வகிக்கும் யோகமுண்டாகும். பத்தாமதிபதி பலம்பெற்று சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று, பத்தாம் வீட்டையோ பத்தாமதிபதி யையோ குரு பார்வை செய்தால் அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு, உயர்பதவி களை வகிக்கக்கூடிய யோக முண்டாகும். பத்தாம் வீட்டோன் அமரும் ஆங்கீசாதி பதியின் காரகத்திற்கேற்ற தொழிலே அமையுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

dd

பொருளாதார அபிவிருத்தி உண்டாகுமா?

கேள்வி: நான் பத்து ஆண்டுகளாக எல்லா முயற்சிகளையும் செய்து கடினமாக உழைக்கி றேன். ஆனாலும் நான் செய்யும் வியாபாரத் தில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. எதிர் காலத்திலாவது பொருளாதார அபிவிருத்தி உண்டாகுமா?

-பெயர் சொல்ல விரும்பாத வாசகர், சென்னை.

(எண்-99; பூரட்டாதி-3; நட்சத்திராதிபதி- குரு; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்திருப்பது கோடீஸ்வர யோகத்தைக் காட்டுகிறது.

* இரண்டு மற்றும் பதினொன் றாமதிபதியாகிய குரு சோழி லக்னத்தில் அமர் வதும் தன லாபத்தைக் குறிக்கிறது.

* இரண்டாமிடத்திலிருக்கும் நீச புதன் வியாபார திட்டமிடுதலில் உள்ள குறையை சுட்டிக்காட்டுகிறது.

* பன்னிரண்டில் இருக்கும் சுக்கிரன் சுபர் பார்வை பெறாமல் பாவிகளு டன் சேர்ந்திருப்பது, வீண் விரயத்தைக் காட்டு கிறது.

* மூன்றாமதிபதியாகிய செவ்வாய் பன்னிரண்டாமிடத்தில் அமர்வது, துனிச்சலான முடிவு களை எடுக்காததால் வியாபாரத்தில் பின்னடை வைக் காட்டுகிறது.

* நான்கில் ராகு இருப்பதால் நன்மைகளை விட தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும்.

* பரிகாரம் செய்தால் வெற்றிபெறலாம்.

பரிகாரம்

திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாரை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தரிசனம் செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala141022
இதையும் படியுங்கள்
Subscribe