Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (89)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-89

ரங்கள் பழுத்த இலை களை உதிர்க்கின்றன. பறவை கள் பழைய இறகுகளை இழக்கின்றன. காலம், ஆண்டுகளை மணித்துளிகளாகக் கரைத்துவிட்டு காலாவதியாகிறது. உலகம் தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்கிறது. இதையே மனிதர்கள் ஜனனம்- மரணமெனும் இன்ப- துன்பங்களாகக் காண்கிறார்கள். மோட்ச திரிகோணங்களாக அமைந் துள்ள நான்காம் பாவமும் (ஜனனம்), எட்டாம் பாவ மும் (ஆயுள்), பன்னிரண் டாம் பாவமும் (மரணம்) ஏற்படுத்தும் ஒத்திசைவே வாழ்க்கை என்பதைப் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

நிகழ்காலத்துக் கவலை யும், எதிர்காலத்து நம்பிக்கை யும் அலைமோதும் மனது டன் பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு இளைஞர். தன் தந்தை விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்துவிட்ட தாகத் தெரிவ

ரங்கள் பழுத்த இலை களை உதிர்க்கின்றன. பறவை கள் பழைய இறகுகளை இழக்கின்றன. காலம், ஆண்டுகளை மணித்துளிகளாகக் கரைத்துவிட்டு காலாவதியாகிறது. உலகம் தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்கிறது. இதையே மனிதர்கள் ஜனனம்- மரணமெனும் இன்ப- துன்பங்களாகக் காண்கிறார்கள். மோட்ச திரிகோணங்களாக அமைந் துள்ள நான்காம் பாவமும் (ஜனனம்), எட்டாம் பாவ மும் (ஆயுள்), பன்னிரண் டாம் பாவமும் (மரணம்) ஏற்படுத்தும் ஒத்திசைவே வாழ்க்கை என்பதைப் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

நிகழ்காலத்துக் கவலை யும், எதிர்காலத்து நம்பிக்கை யும் அலைமோதும் மனது டன் பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு இளைஞர். தன் தந்தை விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்துவிட்ட தாகத் தெரிவித்தார். அவ ருக்கு நினைவு திரும்புமா என்பதை மருத்துவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை என்பதால் பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். கண்ண னூர் பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

சோழி லக்னத்திற்கு எட்டில் நீச சந்திரன் அமர்ந்ததாலும், அது செவ்வாய் நின்ற நட்சத் திரத்திற்கு இரண்டாவதாக அமைந்ததாலும், மரணத் திற்கு ஒப்பான சுய நினை விழத்தல் என்ற பிரச்சினையைக் காட்டியது. பன்னிரண் டாமிடத்தைவிட எட்டாமிடம் வலுத்திருந்த தாலும், ஆயுள்காரகனாகிய சனிபகவான் சாதகமான நிலையில் இருந்ததாலும் நோயுற்றவரின் ஆயுளுக்கு பாதகமில்லை என்ற உறுதி கிடைத்தது. சோழி லக்னம் பரணி நட்சத்திரத்தில் நின்றதால் பரிகாரம் செய்தால் இருப்பத்தோரு நாட்களுக்குப் பின் நினைவுதிரும்பும் என்ற ஆறுதலான பதில் கிடைத்தது. துளசியை வழிபாடு செய்வதும், சந்திர மௌளீஸ்வரருக்கு தாரா பாத்திரத்தை உபயமாகத் தருவதும் பலனளிக்கும் என்ற பரிகாரம் கூறப்பட்டது.

kj

Advertisment

பரிகாரம் பலித்தது. நோயுற்றவர் இருப்பத் தோராவது நாளில் கண்விழித்தார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாததகத்தில் திரிகோண பரிசோதனை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது கேந்திரத்தை ஆராய்வது. கேந்திர வீடுகளை ஆராய்ந்து ஜாதகரின் வாழ்க்கை நிலையைத் துல்லியமாகக் கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய கேந்திரத்தில்தான் கிரகங்கள் திக்பலம் பெறுகின்றன. குரு அல்லது புதன் லக்னத்தில் திக்பலம் பெற்றவர்கள் இந்த அமைப்புள்ளவர்கள். எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கக் கூடியவர்கள். அதேபோல் நான்கில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும், ஏழாம் வீட்டில் சனி இருந்தாலும், பத்தாம் வீட்டில் சூரியன் அல்லது செவ்வாய் இருந்தாலும் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

வழக்கின் முடிவு என்ன?

கேள்வி: நான் சில ஆண்டுகளாக, வருமானவரி கட்டத் தவறிவிட்டேன்.

அதற்காக என்மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவென்ன?

-பெயர் சொல்ல விரும்பாத வாசகர், சென்னை.

dd

(எண்-7; பரணி-3; நட்சத்திராதிபதி- சுக்கிரன்; ராசியாதிபதி- செவ்வாய்.) ப் சோழி லக்னம் ராகு- கேதுவால் சூழப் பட்டதால், இந்தப் பிரச்சினை பெரிய பாதகத்தைத் தருமென்பதில் ஐயமில்லை.

* எட்டாமதிபதி இரண்டில் அமர்வ தால் அபராதத்தால் பெரும் தன நஷ்டம் உண்டாகும்.

* ஆறாம் பாவத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம் பெற்றிருக்கக்கூடாது. ஆறாம் பாவத்தில் நின்ற கிரகத்தின் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க, ஜாதகரை வழக்கு, சச்சரவுகள் தாக்கும்.

* ஆறில் சூரியன் அமர்ந்ததால் கூடிய விரைவில் வழக்கு முடிவுக்கு வரும்; அதனால் தொல்லை நீங்கும்.

* பிரசன்ன லக்னம் சோழி லக்னத்திற்கு எட்டில் அமைவது பின்னடைவைக் காட்டுகிறது.

* ஒன்பது, பன்னிரண்டாமதிபதி விரயத்திலிருப்பதால் அபராதம் கட்ட வேண்டிய நிலைவரும். ஆனால் சிறைதண்டனை இல்லை.

* பத்தில் சனி ஆட்சிபெற்றிருப்பதால் ஓரளவு பாதகம் குறையும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala071022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe