Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (87)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-87

ரும்பும் காந்தமும் வடிவத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், செயல் பாட்டில் வேறுபடுகின்றன. அதேபோல் சிலர்மட்டும் மற்றவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த கூட்டத்திலும் ஈர்ப்பு மையமாக மாறுகிறார்கள். புத்திகாரகனாகிய புதனும், காந்தசக்தியுள்ள வடக்கு முனையாக இருக்கும் ராகுவும் தொடர்புகொண்ட ஜாதகர்களுக்கு ஜனவசியம் அமையும் என்பதைப் பொருத்திப் பார்த்தார் கிருஷ் ணன் நம்பூதிரி.

Advertisment

முகத்தில் ஆர்வத்தையும், அடிமனதில் கவலையை யும் தேக்கிவைத்துக்கொண்டு பிரசன்னம் பார்க்க வந்தார் இளைஞர் ஒருவர். தான் தேர்ந் தெடுத்துள்ள அரசியல் வாழ்க்கை நல்ல எதிர் காலத்

ரும்பும் காந்தமும் வடிவத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், செயல் பாட்டில் வேறுபடுகின்றன. அதேபோல் சிலர்மட்டும் மற்றவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த கூட்டத்திலும் ஈர்ப்பு மையமாக மாறுகிறார்கள். புத்திகாரகனாகிய புதனும், காந்தசக்தியுள்ள வடக்கு முனையாக இருக்கும் ராகுவும் தொடர்புகொண்ட ஜாதகர்களுக்கு ஜனவசியம் அமையும் என்பதைப் பொருத்திப் பார்த்தார் கிருஷ் ணன் நம்பூதிரி.

Advertisment

முகத்தில் ஆர்வத்தையும், அடிமனதில் கவலையை யும் தேக்கிவைத்துக்கொண்டு பிரசன்னம் பார்க்க வந்தார் இளைஞர் ஒருவர். தான் தேர்ந் தெடுத்துள்ள அரசியல் வாழ்க்கை நல்ல எதிர் காலத்தைத் தருமா என்பதே அவர் கேள்வி. ஆழியூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னம் மேஷத் திலமைந்தது. லக்னாதிபதி செவ்வாய் உச்சமாகி, லக்னத் தில் ஐந்தாமதிபதியாகிய சூரியன் இருந்ததாலும் ராஜமரியாதை, சுபகீர்த்தி யோகம் உண்டு. மேஷத்தில் சூரியனும், மகரத்தில் செவ்வாயும் உச்சம்பெற்று, கடகத்தில் சந்திரன் ஆட்சிபெற்றிருந்ததால் அரச யோகம் கிடைக்குமென்பது உறுதியானது. புதனும் ராகுவும் தொடர்பிலிருந்ததால், ஜனவசியத்தால் பிரபலமடைவார் என்ற யோகப் பலனும் பிரதிபலித் தது. வெகுஜனங்களைக் குறிக்கும் பதினொன்றாம் பாவமும், சனிபகவானும் வலிமை குன்றியிருந்ததால் பரிகாரம் கட்டாயமானது.

திருச்சி- திருநெடுங்கள நாதர் திருக்கோவிலுக்குச் சென்று வாராகி அம்மனை வழிபட்டால் சகல ஜனவசியம் ஏற்படுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் செய்தவர் பொதுவாழ்வில் புகழ் பெற்றார்.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜாதத்தில் ஒவ்வொரு பாவமும் ஜீவன், சரீரம் என பிரிக்கப்பட்டு பலன்காணும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. லக்னம் தொடங்கி ஒவ்வொரு பாவத்திற்கும், அந்த பாவாதிபன் எந்த வீட்டில் இருக்கி றாரோ அந்த வீட்டதிபதினும், நிற்குமிடமும் அந்தந்த பாவங்களுக்கு ஜீவனென்றும், பாவாத் பாவ ராசிக்கு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டதிபதி சரீரம் என்றும் பெயராகும். ஒவ்வொரு பாவங்களுக்கும் ஜீவனையும் சரீரத்தையும் அறியாவிடில் அந்த ஜாதகத்திற்கு அவ்வித பாவபலம் தவறிப்போகக் கூடுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

விவாகரத்து வழக்கு வெற்றிபெறுமா?

கேள்வி: என் மனைவியை சில கருத்து வேறுபாடு களால் பிரிந்துவிட்டேன். விவாகரத்து வழக்கு நீதிமன்றத் தில் நிலுவையிலுள்ளது.

அந்த வழக்கில் வெற்றிகிடைக்க வாய்ப்புண்டா ?

-வெங்கடேசன், மயிலாடுதுறை.

(எண்-95; சதயம்-3; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னத்திற்கு ஏழாமதிபதியாகிய சூரியன் ஆறிலிருப்பது திருமண வாழ்வில் பிரிவினையைக் காட்டுகிறது.

* எட்டாமதிபதி ஏழிலிருப்பது திருமண வாழ்வில் அமைதிக் குறைவைத் தெரிவிக்கிறது.

* ஆறாம் பாவாதிபதி பன்னிரண்டில் இருப்பது, வழக்கு இழுபறியாக இருப்பதைக் குறிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானமாகிய துலாத்தில் கேது அமர்ந்திருப்பதும் சிறப்பல்ல.

* நான்கில் அமர்ந்துள்ள செவ்வாய் குடும்ப மகிழ்ச்சியைக் கெடுக்கும்.

* இரண்டில் குரு இருப்பது ஓரளவுக்கு ஆறுதலான பலனைத் தரும்.

* சோழி லக்னம் அமைந்த சதயம் மூன்றாம் பாதம் இல்லறத்திற்கு இடையூறானது.

* விருச்சிக மாதத்தில் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

* வழக்கு சுமூகமாக முடிவுக்கு வர, பரிகாரம் செய்யவேண்டும்.

பரிகாரம்

தேரடி விநாயகர் கோவிலில் பரிகார பூஜை செய்தால் நல்ல பலன் உண்டாகும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala230922
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe