Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (86)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-86

ல்லா உயிர்களுக்கும் தப்பிப் பிழைப்பதே வாழ்க்கை என்றாகி விட்டது. நரியை நம்பி விருந்துக்குச் சென்ற ஆடுபோல், வஞ்சகரின் வலையில் பலரும் மாய்ந்துவிடுகிறார்கள். எல்லாருக்கும் பலமும், பலவீனமும் சமமாகவே உள்ளன. பிறர் பலவீனத்தைத் தன் பலமாக மாற்றுபவரே வெற்றிபெறுகிறார். ஒரு ஜாதகத்தில் புதன் வலுத்திருந்தால்‌‌ புத்திசாலித்தனத்தைக் கொண்டும், சுக்கிரன் வலுத்திருந்தால் அதிர்ஷ்டத்தை நம்பியும் வாழலாம். இது அந்தந்த கிரகங்களின் ஆரோகண, அவரோகண கதியை அடிப்படை யாகக் கொண்டவை. இளமையின் இறுதியிலும், முதுமையின் துவக்கத்திலுமிருந்த ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். தான் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தன்னுடைய மகள், தவறான நட்பால் பள்ளிப்படிப் பைத

ல்லா உயிர்களுக்கும் தப்பிப் பிழைப்பதே வாழ்க்கை என்றாகி விட்டது. நரியை நம்பி விருந்துக்குச் சென்ற ஆடுபோல், வஞ்சகரின் வலையில் பலரும் மாய்ந்துவிடுகிறார்கள். எல்லாருக்கும் பலமும், பலவீனமும் சமமாகவே உள்ளன. பிறர் பலவீனத்தைத் தன் பலமாக மாற்றுபவரே வெற்றிபெறுகிறார். ஒரு ஜாதகத்தில் புதன் வலுத்திருந்தால்‌‌ புத்திசாலித்தனத்தைக் கொண்டும், சுக்கிரன் வலுத்திருந்தால் அதிர்ஷ்டத்தை நம்பியும் வாழலாம். இது அந்தந்த கிரகங்களின் ஆரோகண, அவரோகண கதியை அடிப்படை யாகக் கொண்டவை. இளமையின் இறுதியிலும், முதுமையின் துவக்கத்திலுமிருந்த ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். தான் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தன்னுடைய மகள், தவறான நட்பால் பள்ளிப்படிப் பைத் தொடரமுடியாமல் அவதிப்படுகிறாள் என்று சொல்லி வருந்தினார். பிரசன்னத்தில் பரிகாரத்தைக் கண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டார். செம்புக்காவு பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

சோழி லக்னம்

Advertisment

உத்திராடம் இரண்டில மைந்து, மகர ராசியில் இடம்பெற்றது. பிரசன்ன லக்னம் ஆயில்யத்திலும், சந்திரா லக்னம் பூரத்திலு மிருந்தது. பிரசன்ன லக்னமாகிய கடகத்திற்கு பாதகாதிபதியாகிய சுக்கிரனின் சாரத்தில் சந்திரனிருந்து, சுக்கிரன் ராகுவின் நட்சத்திரமாகிய சதயத்தில் இருந்ததாலும், வாழ்க்கைக்குப் பகையாக மலர்ந்த தீய நட்பும், அதனால் கல்வியின் பின்னடைவும் உறுதியானது. திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜைசெய்தால், இந்த தோஷம் விலகுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. முருகப் பெருமானின் அருளால் பனி விலகி சூரியன் உதித்தது போல் சங்கடம் விலகி சாதகமான பலன் கிடைத்தது.

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு ராசி சக்கரத் திலுள்ள லக்னத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியத் துவம் வாய்ந் தது ஆரூட லக்னம்.

ஒரு ஜாதகரின் உண்மைத் தன்மையைக் காட்டுவது ராசி சக்கரத்திலுள்ள ஜனன லக்னம். அந்த ஜாதகரை உலகம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதைக் காட்டுவதே ஆரூட லக்னம். இந்த ஆரூட லக்னத் தைக்கொண்டு ஒருவரின் செல்வாக்கைக் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

லக்னத்திலிருந்து லக்னாதி பதி நின்ற வீடுவரை எண்ணி, அந்த தொகையை லக்னாதி பதி அமர்ந்த வீட்டிலிருந்து எண்ணினால் வருவதே ஆரூட லக்னம். ஆரூட லக்னத்திற்கு ஆறில் சுக்கிரன் இருந்தால் திருமணத்தடை அல்லது மண வாழ்வில் அமைதி குறையும். ஆரூட லக்னத்தில் குரு அல்லது வளர்பிறைச் சந்திரன் அமர்ந்தால், ஜாதகரின் மறைவுக்குப் பின்னும் புகழ் நிலைக்குமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

இரண்டாம் திருமண வாய்ப்புண்டா?

கேள்வி: என் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். இரண்டாம் திருமண வாய்ப்புண்டா? அந்தத் திருமண வாழ்க்கை நிலைக்குமா?

-ராஜ கணபதி, சிதம்பரம்.

(எண்: 58; ஸ்வாதி-2; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி- சுக்கிரன்.)

* சோழி லக்னத்திற்கு இரண்டாமதிபதி யாகிய செவ்வாய் எட்டிலிருப்பது, மறுமணத்தைக் காட்டுகிறது.

* ஏழில் ராகு அமைவதும் இரண்டாம் திருமணத்தை உறுதி செய்கிறது.

* ஒன்பதாம் வீட்டோன் விரய ஸ்தானத்திலமைவது, கடுமையான தோஷத்தைக் குறிக்கிறது.

Advertisment

ff

* சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானமாகிய சிம்மத் தில் சுகபோக காரகனாகிய சுக்கிரன் இருப்பதும் சிறப் பில்லை.

* சோழி லக்னத்திற்கு அறுபத்து நான்காவது நவாம்சத்தில் மங்கள காரகனா கிய செவ்வாய் இருப்பதால், பரிகாரம் செய்தபின் இரண்டாவது திருமணத்தை முடிவுசெய்யலாம்.

* சனிபகவானின் பார்வையும் சோழி லக்னத்தில் பதிவதால் இரண்டாம் திருமணத்தைத் தேர்வுசெய்வதில் அதிக எச்சரிக்கை தேவை.

பரிகாரம்

திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞீ- என்ற இடத்திலுள்ள பைஞ்ஞீ-வனேஸ்வரர் கோவிலில், வெள்ளிக்கிழமை, வாழைக் குப் பரிகார பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் கைகூடும்..

(தொடரும்)

செல்: 63819 58636

bala160922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe