Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (84)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-84

மாற்றம் என்பது மானுட தத்துவம் மாறுதலே உலகின் மகத்துவம். அலைபாயும் மனதிற்கு நம்பிக்கையே நங்கூரம். பஞ்சபூதங்களை தேகமாகக் கொண்டு, தொண்ணூற்றாறு தத்துவங்களில் இயங்கும் மனமே இந்த உலகை உருவாக்குகிறது என்ற நுட்பமானக் கருத்தை ஜோதிடத்தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. இயங்கும் சக்தி மனமெனும் சந்திரன் இயக்கும் சக்தி ஆத்மகாரக னாகிய சூரியன் என்ற உண்மை தெளிவானது.

Advertisment

dd

கவலை மேகங்கள் பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் சந்திர வதனத்தை மறைத்திருந்தன. தான் எப்போதும் எதிர்மறை எண்ணங்க ளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் மனநிம்மதி குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தாள். பிரசன்ன ஆரூத்தின்மூலம் தன் பிரச்சினைக்கு விடைதேடி வந்திருந்தாள். மாங்கோட்டுக்காவு பகவதியை த

மாற்றம் என்பது மானுட தத்துவம் மாறுதலே உலகின் மகத்துவம். அலைபாயும் மனதிற்கு நம்பிக்கையே நங்கூரம். பஞ்சபூதங்களை தேகமாகக் கொண்டு, தொண்ணூற்றாறு தத்துவங்களில் இயங்கும் மனமே இந்த உலகை உருவாக்குகிறது என்ற நுட்பமானக் கருத்தை ஜோதிடத்தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. இயங்கும் சக்தி மனமெனும் சந்திரன் இயக்கும் சக்தி ஆத்மகாரக னாகிய சூரியன் என்ற உண்மை தெளிவானது.

Advertisment

dd

கவலை மேகங்கள் பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் சந்திர வதனத்தை மறைத்திருந்தன. தான் எப்போதும் எதிர்மறை எண்ணங்க ளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் மனநிம்மதி குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தாள். பிரசன்ன ஆரூத்தின்மூலம் தன் பிரச்சினைக்கு விடைதேடி வந்திருந்தாள். மாங்கோட்டுக்காவு பகவதியை தியானம் செய்து பிரசன்னத் தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன ஜாதகத்தில் சோழி லக்னத்தின் திரிகோணத்தில் சந்திரனும் ராகுவும் கூடியிருக்க, சூரியனும் வலுவிழந்திருந்தது. இந்த கிரகங்களின் இணைவால் ஜாதகருக்கு மனக்குழப்பம் எப்பொழுதும் இருக்கும். மனது ஒரு நிலையாக இருக்காது. நிலையற்ற சிந்தனையால், நிலையான முடிவு எடுக்கமுடியாது. மன அழுத்தம் மனபோராட்டம் எப்பொழுதும் இருக்கும். எது செய்தாலும் மனதளவில் திருப்தி இருக்காது. மனதை கட்டுப் படுத்தவும் முடியாது. மனகுழப்பத்தினால் பெற்ற அனைத்தையும் இழந்து விடுவார்கள். பௌர்ணமி நாளில் கன்னியாகுமரி சென்று பகவதி அம்மனைத் தொழுதால் தோஷம் விலகும் என்பது பரிகாரமாக சொல்லப்பட்டது. ஸ்ரீகன்னியாகுமாரியை வழிபட்டபின் சூரிய சந்திர கோதரிசனம் செய்ததால் பலன் பெற்றார்; மனக் குழப்பம் நீங்கியது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு சோழி பிரசன்னம்போல் ஹோரா பிரசன்னமும் முக்கியமானது.

dd

Advertisment

ஆரூடம் கேட்பவர். எந்த ஹோரையில் எந்த உபஹோரையில் கேள்வி கேட்கிறார் என்பதைக் கணக்கிடும் பிரசன்னமே ஹோரா பிரசன்னம். இந்த முறையில் பிரசன்ன ஆரூடம்மூலம் வெற்றி, தோல்விகளைக் கணிப்பதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒரு ஹோரையின் கால அளவாகிய அறுபது நிமிடத்தில் ஏழில் ஒரு பகுதியாக அமைவதே உப ஹோரை. ஹோரா நாதனும் உப ஹோரா நாதனும் ஒருவருக்கொருவர் ஒன்று, ஐந்து, ஒன்பதில் அமைந்தால், நினைத்த காரியம் முழுமையாக நிறைவேறும். மூன்று, ஏழு, பதினொன்றாக இருந்தால் ஓரளவு வெற்றி கிடைக்கும். இரண்டு, பன்னிரண்டாக அமைந்தால் இழுபறியாகும். நான்கு, ஆறு, எட்டாக அமையுமானால், தோல்வியே ஏற்படுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

பாலாரிஷ்டத்தால் பாதிப்பு உண்டா?

கேள்வி: கடவுளின் அருளால், ஆறு மாதத்திற்குமுன் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, பிறக்கும்போதே இதயத்தில் பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் சொல்கிறார் கள். பாலாரிஷ்டத்திலிருந்து, என் குழந்தை மீண்டுவருமா? அதற்கு பரிகாரம் உண்டா?

(திரு.சுமதி, ஈரோடு)

(எண்: 106; ரேவதி-2; நட்சத்திராதிபதி- புதன்; ராசியாதிபதி- குரு.) ப் சோழி லக்னம் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. அதன் அதிபதி யாகிய புதன் லக்னத்திற்கு பாதகாதிபதி யாகிறார்.

* லக்னத்திற்கு 8-ஆமிடத்தில் கேது இருந்து, குருவின் பார்வை பெறாததால், கடுமையான ஆயுள் அரிஷ்டத்தைக் குறிக்கிறது.

* ஆறில் சூரியன் நிற்பதால், சூரியன் கிரகத்திற்குரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். இதய நோயால் பாதிப்பு வரக்கூடும்.

* மாரக ஸ்தானமாகிய லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் சந்திரன் பாவியுடன் சேர்ந்திருப்பதும் பாலாரிஷ்ட தோஷத்தை உறுதிசெய்கிறது.

* சோழி லக்னத்திற்கு எட்டில் பிரசன்னம் லக்னம் அமைவதும் பின்னடைவைக் காட்டுகிறது.

* சோழி லக்னத்தில் குரு அமைவது ஓரளவு ஆறுதலான பலனைத் தருகிறது. பரிகாரத்தால் பலன் உண்டாகும்.

பரிகாரம்

* சங்கடஹர சதுர்த்தில் விநாயகரை வழிபடுவது நல்லது. கேதுவால் வரும் தோஷம் நீங்கும். திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு, பூஜை செய்தால் நீண்ட ஆயுள் பெறலாம். குருவாயூரப்பனுக்கு, துலாபாரம் தருவதாக வேண்டுதலை வைப்பதும் நல்ல பலன்தரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala020922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe